இரண்டு கரிகாலன் கவிதைகள்

This entry is part [part not set] of 30 in the series 20010819_Issue


1.
ஏழை

****
கண்ணீர்ப் பந்தலிலே
வறுமை மேடையமைத்து
பசியின்
இசையுடன்
அரங்கேறியது
எங்கள்
வாழ்க்கை நாடகம்.

2
சிாிப்பு

****
இதழ்களெனும்
எழுதுகோலால்
மகிழ்ச்சியெனும்
மை தொட்டு
முகத்தாளில்
மனம் வரைந்த
புதுக்கவிதை.

Series Navigation

கரிகாலன்

கரிகாலன்