இயல்பாய் – கொஞ்சம் குறும்பா
Published September 24, 2002 • By
இ.இசாக்
இ.இசாக்

பட்டுப்போன மரம்
எத்தனைப் பசுமை
கிளைகளில் கிளிகள்!
*
சோடியைத்தேடி வருமா
காணாமல் போன
கொலுசு.
*
ஆட்கள் மாறிக்கொள்கிறார்கள்
அய்யோ பாவம்
உழவுமாடுகள் !
*
கடித்த கொய்யாப்பழம்
எனக்காகவா போட்டாய்
நன்றி அணிலே!
*
கொட்டும் மழை
குடை பிடித்தபடி நான்
ஆனந்தமாய் ஆடுகள்
*
thuvakku@yahoo.com