இயற்கை-மானுடம்-கிழக்கு-மேற்கு

This entry is part [part not set] of 31 in the series 20030525_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


சின்னக்கருப்பன் அவர்கள் எழுதியுள்ளது சாரம்சவாத நிலைப்பாட்டை ஒத்தது.இது ஒரளவிற்கே பயன்படும்.மானுடம்-இயற்கை குறித்த உறவு பற்றி பலர் எழுதியுள்ளனர் உ-ம் theodre razak, moris berman,paul shepard.(1) பல்வேறு சமூகங்களில் உள்ள இயற்கை-மானுட உறவுகள் குறித்து மானுடவியலாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.கிழக்கு-மேற்கு என்று பார்ப்பது ஒரு சில விஷயங்களில் உதவும். உலக மக்கள் தொகையில் 25% உள்ள நாடுகள் உலக மூலவளங்களில் 75-80%த்தை பயன்படுத்துவது குறித்து ஆராயும் போது இத்தகைய கண்னோட்டம் பயன்படலாம், ஆனால் இதற்கு இயற்கை குறித்த பார்வை மட்டுமே காரணம் என கூறமுடியாது.மேலும் பல ஆசிய நாடுகளில் புலிகள் போன்ற உயிரினங்கள் அழிய என்ன காரணம்.காடுகளை அழிப்பது குறித்து மகாபாரதத்தில் குறிப்பிடப்ப்டடுள்ளது.எந்த சமூகமும் இயற்கையை அழிக்காமல் பெருமளவில் விவசாயம் செய்வதோ (அ) நகர்ப்புற நாகரிகம் உருவாவதோ சாத்தியமில்லை. எனவே நடைமுறையில் இயற்கை குறித்த மதிப்பீடு எப்படி இருக்கிறது என்பதையும் காண வேண்டும்.

கடந்த 30/40 ஆண்டுகளில் மேலை நாடுகளில் இயற்கை குறித்த சிந்தனை-செயல்பாடுகளில் பெரும் மாறுதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதற்கும் முன்பே இயற்கையை பாதுகாக்க வேண்டும் எனவும், காடுகள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாக்க வேண்டும் எனவும் பலர் வலியுறுத்தினர்.ஜான் முயிர் போன்றோர் முயற்சியால் பல அமைப்புகள் தோன்றின, இதன் விளைவாக பல பகுதிகள் வனப்பிரதேசங்களாக அறிவிக்கப்ப்ட்டன(2).மேலும் நாம் எப்படி தோரோ போன்றாரை மறக்கமுடியும். லெப்போல்டின் sand county almanac போன்ற ஒரு நூல் நானறிந்த வரையில் தமிழில் இல்லை.இன்று சூழல் அறம் குறித்து அமெரிக்க/மேல் நாட்டு அறிஞர்கள் எழுதியுள்ளவை முக்கியமானவை. ஆழ்சூழலியல்(deep ecology) என்ற சிந்தனைப்போக்கை உருவாக்கிய Arne Naess மஹாத்மா காந்தியின் சிந்தனை,செயல்பாடுகளால் தாக்கம் பெற்றவர்.மேலும் gary synder , wendell berry ஆகியோர் முன்வைக்கும் கருத்துகளை கிழக்கு-மேற்கு என்று அணுகுவது சரியாக இராது. மேற்கத்திய சிந்தனையில் கிழக்கத்திய சிந்தனை/தத்துவங்கள் எற்படுத்திய தாக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.அதே போல் நமது சிந்தனையில் மேற்கின் தாக்கம் பற்றி கூறவேண்டியதில்லலை.காந்திக்கு உவப்பான மலைப்பிரசங்கமும்,தால்ஸ்த்தாயும் நமக்கும் அன்னியமல்லவே.ஜேம்ஸ் ஆலனை தமிழில் தந்தவர் கப்பலோட்டிய தமிழரல்லவா. எனவே மேற்கு என்றால் இதுதான் என்று குறுக்க வேண்டாம்.

மேலும் அவர் குறிப்பிடும் விவிலியத்தில் காணப்படும் வாசங்களுக்கு பல வாசிப்புகள் உள்ளன.இன்று stewardship என்ற பொருளில் அவை புரிந்துக்கொள்ளப்பட வேண்டும் என்று வாதிடப்ப்டுகிறது.(3) ecotheology என்று இறையியலையும்,இயற்கையும் குறித்து புதிய கண்ணோட்டங்களில் ஆய்வுகளும், கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. இது குறித்து ஒரு தனிக்கட்டுரையே தேவைப்படும். இப்போக்கிற்கு உதாரணமாக கீழ்கண்ட கட்டுரைகளை சுட்டிக்காட்டலாம்.

THEONOMY AND BIOLOGY: TILLICH ‘S ONTOLOGY OF LOVE AS THE BASIS FOR AN ENVIRONMENTAL ETHIC- Drummy M. F- World Views: Environment, Culture, Religion, March 2000, vol. 4, no. 1,

REINHABITING RELIGION: GREEN SISTERS, ECOLOGICAL RENEWAL, AND THE BIOGEOGRAPHY OF RELIGIOUS LANDSCAPE Taylor S.M

World Views: Environment, Culture, Religion, November 2002, vol. 6, no. 3

சமயங்கள்/ஆன்மிக மரபுகள், பழங்குடிகள் – இயற்கை குறித்து பல நூல்கள் உள்ளன.இன்று இயற்கை குறித்து புதிய விழிப்புணர்வினை உருவாக்க மதங்கள் எத்த்கைய பங்கு ஆற்றமுடியும் என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் ஒரு ஆய்வுமையம் இது போன்ற ஆய்வுகளை செய்துவருகிறது, பல கருத்தரங்குகள் நடந்துள்ளன, நூல்கள் வெளியாகியுள்ளன.எனவே மாறாத மேற்கு, சரியான கண்ணோட்டம் கொண்ட கிழக்கு என வாதிடுவது ஒரளவிற்கே பயன் தரும்.மாறாக பூமி ஒன்று,

நமது பொதுவான எதிர்காலம் குறித்து நாம் விவாதிக்க வேண்டும்.கிழக்கும்,மேற்கும் ஒன்றிடமிருந்து மற்றது கற்க பல உள்ளன. மேற்கின்மீது விமர்சனம் வைப்பது என்பது வேறு, மேற்கே இப்படித்தான், எனவே அதில் பெரிய மாறுதல் வராது என்ற நிலைப்பாடு எடுப்பது என்பது வேறு.சூழல் அறம் என்பது தத்துவதுறையிண் முக்கிய பகுதியாக இன்று உள்ளது. இதில் அமெரிக்க கண்ணோட்டங்ளும் விமர்சிக்கப்படுகின்றன. உதாரணமாக wilderness குறித்த அமெரிக்க பார்வைகளை விமர்சித்து ராமசந்திர குஹா எழுதிய கட்டுரையை முன் வைத்து ஒரு விவாதமே நடந்தது. பல தொகுப்புகளில் இது இடம் பெற்றுள்ளது. இயற்கையை வெறும் மூலப்பொருளாக மட்டும் பார்ப்பது, அதனளவில் அதற்கு மதிப்பு இல்லை போன்றவை கடந்த நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளிலேயே கேள்விக்குட்படுத்தப்பட்டன. மேலும் இத்தகைய விமர்சனங்கள் இல்லாமல் மேற்கத்திய நாடுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் பெருமளவு வளர்ச்சி பெற்றிருக்க முடியாது. இவை வரம்பற்ற வளர்ச்சி என்பதை ஏற்பதில்லை. பல சமயங்களில் இவை வளர்ச்சியுறும் நாடுகளுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை எடுத்துள்ளன. சர்வதேச அளவில் கழிவுகள் குறித்த ஒப்பந்தம் ஏற்ப்டவும், வளர்ச்சியுறும் நாடுகள் கழிவுகளுக்கான குப்பைத்தொட்டிகளாக பயன்படுத்தபடுவது தவிர்க்கப்டவும் இவை போராடின.Wendell Berry அமெரிக்க நாகரிகம் மீதும், தொழில் கலாச்சாரம் மீதும் விமர்சன்ங்களை வைத்துள்ள சிந்தனையாளர், விவசாயி.Gary Synder பெளத்த சிந்தனைகள், அமெரிக்க பூர்விக இனமக்கள் பண்பாடு குறித்து எழுதுபவர்(4). இவர்களைப் போல் இன்று பலர் மேற்கின் சிந்தனையுலகில் உள்ளனர். Voluntary Simplicity என்பது இன்று வரவேற்பை பெற்றுள்ள ஒரு கருத்து, வாழ்நெறியுமாகும்.

மார்க்சியமும், கிறித்துவ மத சிந்தனைகளும் இன்று சுற்றுச்சூழல்,மானுடம் பற்றி புதிய கண்ணோட்டத்தில் அணுகும் போது நாம் அவற்றை திறந்த மனதுடன் அணுகி ஆராய்ந்து விமர்சிப்ப்து,விவாதிப்பதே சரியான நிலைப்பாடாகும்.

(1) Nature and Madness என்ற நூலில் மேற்கத்திய கலாச்சாரம், சுயம், இயற்கை குறித்த ஒரு புரிதலை தர பால் ஷெப்பர்ட் முயன்றார்.க்ரெகரி பேட்சனின் Steps to an Ecology of Mind,Mind and Nature ஆகியவையும் முக்கியமான நூல்கள்.இது பற்றி தனியாக ஒரு நூலே எழுதலாம். The Breakdown of the Bicameral Mind ல் தொடங்கி கென் வில்பரின் எழுத்துக்கள் வரை ஒரு நீண்ட பயணம் தேவைப்படும். E.O.Wilson முன்வைத்துள்ள Biophilia என்ற கருத்தும் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.Michael E.Soule எழுதுகிறார்

‘We can ‘t succeed in teaching people biophilia, (wilson,1984) ,i.e love of life, with economic arguments and ecological reasoning alone.We must see to it that they have limbic experiences, not just neocortical ones ‘ (Mind In The Biosphere,Mind of The Biosphere) in Biodiversity (ed)

E.O.Wilson, National Academy Press, 1988

(2) Environmentalism for a new millennium -Lesile Paul Thiele-Oxford University Press,1999

(3)A Chritstian View of Biodiversity-John B.Cobb.Jr in Biodiversity op.cit

(4) AN INTERWOVEN WORLD: GARY SNYDER ‘S CULTURAL ECOSYSTEM

Barnhill D.L-World Views: Environment, Culture, Religion, 1 July 2002, vol. 6, no. 2, pp. 111-144(34)

ravisrinivas@rediffmail.com

Series Navigation