இன்னொரு உயிர்…

This entry is part [part not set] of 37 in the series 20030202_Issue

வேதா


ஆர்ப்பரித்த அலையாய் – உன்
காதுகளில் நுழைந்தேனோ…
அவசரத்தின் ஆறுதலுக்காய் – உன்
அன்பை மட்டும் சுவைத்தேனோ ?
பறித்ததற்குப் பரிசாய் – என்
பாசங்களை பகிர்ந்தேனோ..
பேசித் தீர்க்க பிறை நிலவாய்..
பிரியாமல் படர்ந்தேனோ!

எதிர்பார்ப்பும் … ஏமாற்றமும்…
எதுவுமே குறையாமல்,
எதார்த்தமாய் இருந்தேனோ!
கள்ளமில்லா உள்ளத்தை
கவிதையை உன் சுவாசத்தை
உறையிலிட்டு உண்மையாய்
உன்னை உணர்ந்தேனோ!

எதுவோ… எங்கோ… எதற்கோ… எப்படியோ…
ஏமாற்றிக் கொண்டதும்… எதிர்பார்த்து நின்றதும்…
இன்று இருவரும் தானோ ?

உன் இதயத்தின் வாசலில்
நிரம்பி நிற்கும் உணர்வுகளில்
என்னை நீ சிந்தி விடக்கூடும்..!
எதற்கும்,
பத்திரமாய் புதைத்து விடு!
நம் நிகழ்வுகளையும், அவற்றின் நிழல்களையும்!
உன் நெஞ்சில் வசிக்கும்
‘இன்னொரு ‘ உயிர் நான்..!

*******
piraati@hotmail.com

Series Navigation

வேதா

வேதா