சித்தார்த் மிஷ்ரா
இந்திய சந்தையில் பன்னாட்டு நிறுவனங்களை தடங்கலின்றி அனுமதிக்கப்போவதில்லை என்று சொல்லிக்கொண்டே, இன்றைய மத்திய அரசு அமெரிக்க மாண்சோண்டோவுஇக்கும் அதன் இஇந்தியக் கிளை நிறுவனங்களுக்கும் வசதி செய்து தந்து இந்திய நிறுவனங்கள் பாதகமான நிலையில் வைத்திருக்கிறது. இந்த பிரச்னை அமெரிக்க தொழில்நுட்பமல்லாத பிடிகாட்டன் தொழில்நுட்பத்தை உபயோகிக்கும் இந்திய நிறுவனங்களை பாதிப்பதாக அமைந்திருக்கிறது.
Genetic Engineering Approval Committee (GEAC) அமைப்பு சுற்றுசூழல் அமைச்சகத்தின் ஒரு பங்காக இயங்கி வருகிறது. இது மேமாதம் 3 மற்றும் 20ஆம் தேதி நடந்த சந்திப்புகளில் பிடிகாட்டன் விதைகளை பரிசோதனை செய்யும் முறைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்து இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பாதகமான நிலையை உஇருவாக்கும் படி ஆக்கியிருக்கிறது.
மேஹிகோ மாண்சாண்டோ நிறுவனம் தன் விதைகளுக்கு 1600 ரூபாய் இஒரு பைக்கு வசூலிக்கிறது. இதில் 700 ரூபாய் வெறும் லைசன்ஸிங்க்காக மட்டுமே மேஹிகோ மாண்சாண்டோ கொடுக்கிறது. இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த விதை வியாபாரத்தில் இறங்கினால், இந்த விலை வெகுவாக குறையும்.
சுற்றுச்சூழல் அமைச்சரான ஏ ராஜா அவர்களிடம் இது பற்றி விசாரித்தபோது, ‘இந்த கமிட்டி ஒரு தன்சார்புள்ள கமிட்டி. இதில் பல அமைச்சகங்களையும் சேர்ந்த ஆட்கள் இருக்கிறார்கள். இதுவரை எனக்கு ஒரு புகாரும் வரவில்லை. இப்போது வந்திருக்கிறது. விசாரிக்கிறேன். இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்திய விவசாயிகளும் பாதிக்கப்படவிடமாட்டேன் ‘ என்று தெரிவித்திருக்கிறார்.
பொதுவாக இந்த பிடிகாட்டன் விதைகளின் விலை 25சதவீதம் குறைந்தால், இந்திய் விவசாயிகளின் சேமிப்பு 200-250 கோடி ரூபாய்கள் இருக்கும் என இந்திய நிறுவனங்கள் மதிப்பிடுகின்றன.
மாண்சாண்டோ நிறுவனத்துக்கு வெளிநாட்டுக்கு அனுப்பும் அன்னிய செலாவணி பணம் 70-100 கோடி ரூபாய்கள் குறையும். ஆனால், இந்த புதிய சட்டதிட்டங்களின் படி 2006 வரைக்கும் எந்த புதிய நிறுவனமும் தன் விதைகளை விற்கக்கூடாது என்று கூறுகிறது. 2007இலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக மிகக்குறைந்த அளவே இந்திய நிறுவனங்களின் தாக்குப்பிடிக்கும் சக்தி இருக்கும்.
மெஹிகோ மாண்சாண்டோ நிறுவனத்தின் பிடி காட்டனின் உள்ளே Cry 1Ac என்ற ஜீன் இருக்கிறது. இத்துடன் இது 2002இல் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டது. ராசி சீட்ஸ் என்னும் நிறுவனம் இதிலிருந்து லைசன்ஸ் பெற்று விற்கிறது. ஆனால், இந்த ஜீன் உள்ள ஹைபிரிட் விதையை 2004இல் விற்கலாம் என்று அனுமதி தரப்பட்டிருந்தது.
மார்ச் ஏப்ரல் 2005இல் நடந்த GEAC மீட்டிங்குகளில் மெஹிகோ, ராசி சீட்ஸ், ஆங்குர் சீட்ஸ் போன்ற மாண்சாண்டோ லைசன்ஸ் பெற்ற நிறுவனங்கள் 7 ஹைபிரிட் விதைகளை விற்க அனுமதி தரப்பட்டிருந்தது.
ஆனால், இந்திய மற்றும் அமெரிக்கா அற்ற நாடுகளின் தொழில்நுட்பம் கொண்ட நிறுவனங்களின் பல பரிசோதனைகளை Review Committee of Genetic Modification (RCGM) சொல்படி நடத்தி முடித்திருந்ததனால், 2005 காரிஃப் பருவத்திஇல் தங்களது ஹைபிரிட் விதைகளை விற்க அனுமதி தரப்பட்டிருந்தது.
மாண்சாண்டோ மற்றும் அதன் லைசன்ஸ் பெற்ற நிறுவனங்களுக்கு ஏகபோக உரிமை அளிக்கும் பொருட்டு மே மாதம் 3 ஆம் தேதி மீட்டிங்கில் அமெரிக்க தொழில்நுட்பம் உபயோகிக்காத மற்ற நிறுவனங்கள் இஇன்னும் இரண்டுஅல்லது மூன்று வருடங்கள் பரிசோதனைகளை தொடர்ந்துஇ நடத்தவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 250 ஏக்கர்களில் களப்பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது முதல் வருடம் 1 ஏக்கரிலும் இரண்டாம் வருடம் 20 ஏக்கரிலுமே நடத்தினால் போதும் என்பதே நிலை. இது இந்திய தொழில்நுட்பத்தை கிடப்பில் போடுவதற்கும் அமெரிக்க தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கவும் அதிகமான கட்டுப்பாடுகள் இந்திய மற்றும் அமெரிக்கா அற்ற நிறுவனங்கள் மீது போடப்படுகின்றன.
உயிரியல் பாதுகாப்பு என்று அரசாங்கம் காரணம் சொல்கிறது. இதுவரை RCGM கேட்டுக்கொண்ட எல்லா பரிசோதனைகளையும் அவர்கள் கேட்டுக்கொண்ட படியே முடித்து தந்திருந்தாலும் புதிய சட்ட திட்டங்களை அறிமுகப்படுத்துவது ஏன் என்று இந்த நிறுவனங்கள் கேட்கின்றன.
பழைய கொள்கையையே அரசாங்கம் தொடர்ந்திருந்தால், 30 அல்லது 40 புதிய விதைகள் சந்தைக்கு வந்திருக்கும். 15-20 விதை நிறுவனங்கள் 2006 க்குள் சந்தைக்கு வந்திருக்கும். இது விவசாயிகளுக்கு சந்தை போட்டி காரணமாக குறைந்த விலை விதைகள் கிடைக்க வழி வகுத்திருக்கும்.
ஆனால் தற்போதைக்கு மாண்சாண்டோ நிறுவனமும் அதன் லைசன்ஸ் பெற்றவைகளும் ஏகபோக உரிமையுடன் விதை வியாபாரத்தில் இறங்கி இருக்கின்றன.
இப்படிப்பட்ட மாண்சாண்டோவின் ஒரேயடியாக அதிக விலை கருப்பு சந்தை உருவாகவும் காரணமாக இருக்கிறது. பிடி காட்டன் இல்லாத விதைகள் பிடிகாட்டன் என்ற பெயரில் விற்கப்படவும் காரணமாக ஆகிவிடுகிறது. இது இன்னும் விவசாயிகளை பாதிக்கும். ‘அரசாங்கத்தின் பாரபட்சமான கொள்கைகளால் இந்த முறைகள் தொடரத்தான் வழியாகிவிடுகிறது ‘ என்று இந்திய நிறுவனங்கள் பொருமுகின்றன.
-பயனீயர் நாளேட்டிலிருந்து
- கோபி கிருஷ்ணனின் ‘முடியாத சமன் ‘ சிறுகதையின் நாடகமாக்கம். சனிக்கிழமை, ஜூன் 04, 2005 தக்கர் பாபா வித்யாலயா
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல் நான்காம் காட்சி பாகம்-1)
- காற்றுப் பிரிந்த போது. .
- நட்போடு வாழ்தல்
- முயல்தலில் ஒளிர்தலானது….
- அபகரிப்பு
- The Day After Tomorrow கடல் நீரோட்டம் மெதுவாவதால், பிரிட்டானியா கடும் குளிரை எதிர்நோக்குகிறது
- ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) தொலைபேசி கண்டுபிடிப்பு -1
- அசையும் நிழல்கள்
- கவிதைக் கோபுரத்தின் பொற்கலசங்கள்
- அகவியின் நூல் வெளியீடும் விமர்சனமும் -அறிவிப்பு
- தமிழ் சினிமா எழுத்தாளர்களின் விபச்சாரச் சிந்தனை:
- ஒரு கடிதம்
- வாழும் தமிழ் – புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் யூன் 4, சனிக்கிழமை ஸ்காபரோ சிவிக் சென்டர்(ரொறன்டோ-கனடா)
- காலம் எழுதிய கவிதை – ஒன்று
- எங்கே என் அம்புலி ?
- வேட்கை வேண்டும்
- கீதாஞ்சலி (25) நெஞ்சில் மலரும் நறுமணம்! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- இரயில் பயணங்களில்…
- அவனும் அவளும்
- திருவண்டம் – 2
- கூண்டுகள்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல் நான்காம் காட்சி பாகம்-1)
- சிந்திக்க ஒரு நொடி -தமிழ் சாதி
- அனைத்துலகத் தமிழிலக்கிய அடையாளமும் இப்போதைய விவாதங்களும்
- ஹாங்காங்கில் தமிழ்க் கல்வி
- கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா! ?
- இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்வரும் சட்டமன்றத்தேர்தலிலும் பிரதிபலிக்குமா ?
- பணம் தேடுவதில் உள்ள ஆர்வம் குடும்பப்பிணைப்பில் இல்லை!
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 1
- இந்திய நிறுவனங்களை ஒதுக்கிவிட்டு மாண்சாண்ட்டோ பன்னாட்டு விதை நிறுவனத்துக்கு மத்திய அரசு ஆதரவு தருகிறது
- பெரியபுராணம்- 42 திருக்குறிப்புத்தொண்டர் நாயனார் புராணம்
- ராணி
- தோழமையுடன்….