இதுவும் அதுவும்

This entry is part [part not set] of 22 in the series 20020714_Issue

அனந்த்பூவும் தீயும்

தாவிவந்தாள் மடியைநோக்கிப் பேத்தி- அவள்
தளிர்முதுகில் நாலுஅறை சாத்தி

……. ‘பாவி!உந்தன் கறுப்புமேனி
…….பார்த்தெவன்தான் மணம்புரிவான் ? ‘

பூவைஅங்கே கருக்கியது நாத்தீ!


ஏழையும் புகழும்

கூழ்குடித்துக் கும்பிதனைக் காக்கும்
குடிசையர்கள் இடையில்நாளைப் போக்கும்

…….ஏழையாக நடித்துவிட்டு
…….ஏறிக்காரில் குடித்துக்கொண்டு

வாழ்பவனின் புகழ்அவரைத் தாக்கும்


உள்ளும் புறமும்

கட்டித்தங்க மேனியளாம் மீனா – பற்றிக்
காதல்மழை பொழியுமெந்தன் பேனா

…….வெட்கத்தைநான் விட்டுவிட்டு
…….உட்கருத்தைச் சொன்னவுடன்

பட்ட அறை முகத்தில்மட்டும் தானா ?

Series Navigation

அனந்த்

அனந்த்