ஆனைச்சாத்தன் கவிதைகள்

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

ஆனைச்சாத்தன்


தடுமாறி வீழ்கிறேன்
பனியில்
விழி எறி தூரத்தில்
அன்றைய பனியில்
நாம் நடந்த தட(ய)ங்கள்
இக்கணம் அங்கு
வியர்க்கிறது உனக்கு
ஒரே
சூரியன்
உலகிற்கு
——————————————————-
கை தேடும் உன்னைப்
போர்வைக்குள்
படரவரும் கால்கள்
விலகும் பின்
எனக்கேன் இல்லாமல்
போனது
புலன் மறதி
———————————————————–
ஒவியத்தில் கிறுக்கல்களை தேடுகிறாய் நீ
அவளோ கிறுக்கல்களிலும் ஒவியத்தைக் காண்கிறாள்
இரண்டயையும் காண்கிறேன் நான் ஒரே நோக்கில்
ஒவியன்
மர்மப் புன்னகையுடன்
கண்களில்
நிழலாடுகிறான்
————————————————————————
பனியெது தரையெதுவென தெரியாத போது
மிதித்த சப்பாத்துகளை சொல்லிக் குற்றமில்லை,
ஆனால் நீயேன் சப்பாத்தாகவே இருக்கிறாய்,
எல்லாக் காலங்களிலும்
———————————————————————–
aanaichaththan@rediffmail.com
http://mozhi.rediffblogs.com

Series Navigation

ஆனைச்சாத்தன்

ஆனைச்சாத்தன்