ஆச்சியின் வீடு

This entry is part [part not set] of 20 in the series 20011202_Issue

அலர்மேல் மங்கை


கோதைக்கு அந்த வீடு ரொம்பப் பிடிக்கும். அந்த வீடு கட்டி எத்தனை வருடங்கள் இருக்கும் என்று அவளுக்குத் தொியாது. ஆச்சிக்கும்* தொியாது. ஆச்சியுடைய தாத்தா கட்டிய வீடாம். ஆச்சியுடைய தாத்தாவின் படம் பட்டாலையில் நடுநாயகமாக மாட்டப்பட்டிருக்கும். பழுப்பேறிய, இன்னும் சில வருடங்களில் உருவமே தொியாமல் சிதைந்து விடக் கூடிய நிலையில் இருக்கும் அரதப் பழசான போட்டோ. அந்தப் போட்டோவை ஸ்டூடியோக்காரனிடம் கொடுத்து வரைந்து தரச் சொல்லணும் என்று இருபது வருடஙகளுக்கு முன்பே ஆச்சியுடைய தம்பி மனைவியான பூர்ணத்தாச்சி தன் மகனிடம் கரையாகக் கரைந்தாள். ஆனால் அவள் மகனான கந்தசாமி மாமாவுக்கு அதற்கெல்லாம் நேரம் இருக்கவில்லை.

கோதைக்கு முதன் முதலில் அந்த வீட்டை எப்போது பார்த்தோம் என்ற நினைவில்லை. கந்தசாமி மாமாவுக்கும், ஜெயா அத்தைக்கும் கல்யாணமாகி மறு வீடு நடந்த போது, கோதைக்கு இரண்டு வயதாம். நல்ல சிவப்பு சிமிண்ட்டில் போடப் பட்டிருந்த மணவடை (மணமேடை) யில் கோதை கொழும்பு கவுனைப் போட்டுக் கொண்டு குடை ராட்டினம் போல் சுற்றி வந்ததைப் பார்த்து யாரோ ஒரு ஜானகி அத்தை அம்மாவிடம், ‘பிள்ளைக்கு என்ன சாப்பாடு குடுக்கே ? ‘ என்று கேட்டாளாம். அன்றைக்கு இரவே கோதைக்கு மூச்சுத் திணறி, காாில் அவசர அவசரமாகக் கூட்டி வந்து ராமையாிடம் காட்டினார்களாம். டாக்டர் அப்பாவிடம், ‘ நல்ல வேளடே. சீக்கிரம் கூட்டிண்டு வந்தே. கொஞ்சம் லேட் பண்ணியிருந்தே, குழந்தை பிழைச்சிருக்க மாட்டா ‘ ன்னாராம். அப்போதுதான் கோதை முதன் முதலாக ஆச்சியின் பிறந்த வீடான அந்த வீட்டைப் பார்த்திருக்க வேண்டும். அல்லது அதற்கு முன் பார்த்திருந்தாலும் அம்மா இந்த நிகழ்ச்சியை அடிக்கடி சொன்னதாலோ என்னவோ அந்த இரண்டு வயது நிகழ்ச்சியின் போதுதான் கோதைக்கு வீட்டை முதலில் பார்த்த உணர்வு.

கோதையின் அக்கா ராமலஷ்மி கூட அடிக்கடி கேலி செய்வாள், ‘அடடே, உனக்கு ரெண்டு வயசுல நடந்ததெல்லாம் நினைவிருக்கே! ரெம்பக் கெட்டிக்காாிதான் போ ‘ என்பாள்.

அந்த வீட்டின் வாசலே மிக நூதனமாக இருக்கும். சாதாரணக் கதவாக இராது. இரண்டு கார்கள் நுழையும் அளவு கறுப்பு நிறத்தில் மேலே ‘ஆர்ச் ‘ வடிவான கேட். கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தால் ஒரு பொிய முற்றம், வழுவழுவென்று சிமிண்ட் பூசிக் கொண்டு. அப்புறம் இன்னொரு அளி போட்ட ‘தார்ஸா ‘ தார்ஸாவின் உள் இரண்டு புறமும் திண்ணை. திண்ணையின் வலது புறத்தில் கணக்குப் பிள்ளைக்கு ‘பஙகளா ‘ என்று சொல்லப்படும் பொிய அறை. அதில்தான் இரும்புப் பெட்டி இருந்தது. இரண்டு திண்ணைகளுக்கும் நடுவே மணவடை. இடது திண்ணையில் இரண்டு படியேறினால் பட்டாலை, அப்புறம் மற்ற ரெண்டாங்கட்டு, அறவீடு, சாப்பிடும் பட்டாலை, அடுக்களை, மச்சுக்குப் போகும் படி முதலியன. மணமேடைக்குப் பின்னால் இருந்த அளிக்கதவை தாண்டிப் போனால் பொிய மைதானம், ஃபுட் பால் விளையாடலாம் போல. அப்புறம் பொிய மதிற்சுவர் போல காம்பவுண்ட் சுவர். அங்கும் ஒரு சிறிய கதவு. அந்தக் கதவைத் திறந்தால் மேல ரத வீதி. முக்கு வீடாதலால், இரண்டு தெருவையும் வளைத்துக் கொண்டு நின்றது வீடு.

கோதைக்கு நினைவிருக்கிறது, அவள் சிறு பெண்ணாக அந்த வீட்டுக்கு வரும் போதெல்லாம், அப்போது இன்னும் கல்யாணமாகாத வடிவுச் சித்தி தன் வயதொத்த மற்ற பெண்களுடன் அந்த மைதானத்தில் கும்மாளம் அடிப்பாள். கீழ வீட்டு லச்சுமி, மடத்துக் கணக்குப் பிள்ளை மகள் கனகா, வள்ளி நாயகம் பிள்ளை மகள் பேபி என்று கலகலவென்றிருக்கும். என்னதான் பேசுவார்களோ! பத்தாவதோடு படிப்பை நிறுத்தி விட்டு வீட்டில் இருந்த அந்தக் குமருகளுக்கு, வெளியுலகமே தொியாத பட்டிக்காட்டுப் பெண்களுக்குப் பேச அப்படியென்ன விஷயமிருந்தது என்று கோதைக்கு இப்போதும் ஆச்சர்யம்! அந்தப் பெண்களும் தனியாகவா வருவார்கள் ? கூடத் துணைக்கு அம்மாவோ, தம்பியோ வருவார்கள். அவர்கள்தான் இங்கு வருவார்களே தவிர, வடிவு சித்தி ஒரு நாளும் அவர்கள் வீட்டுக்குப் போனதில்லை.

கோதை ஒரு முறை வடிவுச் சித்தியிடம் கேட்டிருக்கிறாள்,

‘ஏன் சித்தி ? லச்சுமி, பேபிதான எப்பவும் இங்க வாரா ? நீயேன் அவஙக வீட்டுக்குப் போக மாட்டங்க ? ‘

வடிவுச் சித்தியின் முகத்தில் விசனம்.

‘என்னவோ, யார் கண்டா ? அவள்ளாம் இங்க வரலாமாம். ஆனா நா போகக் கூடாதாம். ஏன்னு உங்க பூர்ணத்தச்சிகிட்ட போய்க் கேளு. ‘ என்று உசுப்பி விட்டாள். கோதையும் பூர்ணத்தாச்சியிடம் போய்க் கேட்டாள்.

‘எப்பவும் வடிவுச் சித்தி மட்டும் இங்கயே இருக்காளே! லச்சுமி, பேபி வீட்டுக்கு ஏன் போக மாட்டங்கா ? அவங்கள்ளாம் மட்டும் இங்க வாராங்க ? ‘

பூர்ணத்தாச்சி சிாித்தாள்.

‘அவள்ளாந்தான் இங்க வாராளே ? அப்புறம் வடிவுச் சித்தி ஏன் அங்க போகணும் ?வடிவுச் சித்தி இனி மாப்பிள்ள வீட்டுக்குத்தான் போகணும்…. ‘ என்றாள், கத்திாிக்காயை நறுக்கிக்கொண்டு. வடிவுச் சித்தி கோல நோட்டைப் புரட்டிக் கொண்டிருந்த்தாள், இப்பேச்சைக் கவனியாதவள் போல. அப்புறம் வடிவுச் சித்தி கல்யாணம் பண்ணிக் கொண்டு பாம்பே போய் விட்டாள். அவள் மகன்கள் இருவரும் ஹிந்திப் பட ஹீரோக்கள் போலதான் இருக்கிறார்களாம், கோதையின் அம்மா சொன்னாள். ஆனால் வடிவுச் சித்திக்குத் தன்னைப் பாம்பேயில் கட்டிக் கொடுத்தது இன்னமும் வருத்தம்தானாம். அவள் மகன்களுக்கே திருமண வயது ஆகிறதாம். இத்தனை வருடம் பாம்பேயில் இருந்தும் கோர்வையாக இரண்டு வார்த்தை ஹிந்தி பேசத் தொியாதாம் அவளுக்கு.

பாம்பேயில் வடிவுச் சித்தி வீட்டுக்கு ஒரு முறை கணவனுடன் சென்றிருக்கிறாள் கோதை. சயானில் இருந்தது அவள் ஃப்ளாட். ஒரு சிறிய ஹால், சிறிய பால்கனி, சிறிய படுக்கை அறை, கிச்சன், பாத்ரூம், டாய்லட். எல்லாமே ‘சிறிய, சிறிய! ‘.

கோதையின் கணவனுக்கு அஃபிஷியல் ட்யூட்டி. கோதையும் பாம்பே பார்க்க வேண்டும் என்று அவனுடன் கிளம்பியிருந்தாள். ஹோட்டலில் தனியாக இருக்க வேண்டாம் என்று வடிவுச் சித்தி வீட்டில் விட்டுப் போவான் கோதையின் கணவன். கோதைக்கு வடிவுச் சித்தி வீடு மூச்சு முட்டிக் கொண்டு வந்தது. சித்தி வெகு நாட்களாக எந்த உறவினரையும் பார்க்காத ஏக்கத்தில் சொதி, வெஜிடபிள் பிாியாணி என்று தடபுடல் பண்ணினாள். கோதைக்கு ஆச்சர்யமாக இருந்தது. எவ்வளவு பொிய வீட்டில் இருந்தவள் சித்தி! இப்போது இந்தப் புழுக்கை பாம்பே ஃப்ளாட்டில் எப்படித்தான் இருக்கிறாளோ! ஆனால் வடிவுச் சித்தியோ தன் சொந்த் ஃப்ளாட்டின் அருமை பெருமைகளை அடிக்கடி சொல்லிக் கொண்டாள். அந்த ஃப்ளாட்டை விற்றால் அன்றைய விலைக்குக் குறைந்தது நாற்பது லட்சத்துக்குப் போகுமாம். மெட்றாசில் முப்பது லட்சத்துக்கு வீடே வாங்கி விடலாமாம்.

கோதைக்கு ஆச்சியின் வீடு நினைவு வரும் போதெல்லாம் கூடவே ஒரு இன்பகரமான நினைவோ, துக்ககரமான நினைவோ எழும். வடிவுச் சித்தியின் திருமணத்திற்குப் பிறகு ஒரு துக்கம் நிகழ்ந்தது அந்த வீட்டில். வடிவுச் சித்தியின் தம்பியும், ஆச்சியின் தம்பி மகனுமான குமார் மாமா அந்த வீட்டில்தான் செத்துப் போனார். ஒன்றரை வருடமாக ரத்தப் புற்று நோயில் படுக்கையில் கிடந்தவர்! கோதையின் தந்தைதான் திருவனந்தபுரம் ஆஸ்பத்திாிக்கும், அப்புறம் மெட்றாஸ் ஆஸ்பத்திாிக்கும் துணை¢க்குப் போனார். எந்த சிகிச்சையும் பலனளிக்காமல், அப்புறம் வீட்டில் வைத்துதான் ரத்தம் ஏற்றினார்கள். குமார் மாமா நோயுடன் இருந்த ஒன்றரை வருடங்களுக்கு கோதைக்கு அந்த வீட்டிற்குப் போக விருப்பம் இருந்ததில்லை. அந்த வருடங்கள் அந்த வீட்டின் இருண்ட வருடங்கள்! ஆச்சியுடன் அங்கு போகும் போதெல்லாம் பூர்ணத்தாச்சி அறவீட்டில் வைத்து குமுறிக் குமுறி அழுவாள்.

‘ நா என்ன பண்ணுவேன் மதினி…. !புள்ள படற பாட்டப் பாத்த பெத்த வயிறு எாியுதே..! ‘

என்று புடவைத் தலைப்பை வாய்க்குள் அடைத்துக் கொண்டு குமுறுவாள். பூர்ணத்தாச்சியின் அழுகையில் ஆச்சியும் சேர்ந்து கொள்வாள்.

குமார் மாமா இறந்த பின்பு அந்த வீட்டுக்குப் போக முடியாதபடி என்னென்னவோ நிகழ்ச்சிகள்! ஆறு நீண்ட ஆண்டுகள் ஆச்சியை அவள் பிறந்த வீட்டுக்குப் போக விடாமல் தடுத்த நிகழ்ச்சிகள்.

குமார் மாமா இறந்த பின்பு பூர்ணத்தாச்சி ரெம்ப மாறி விட்டாள். எப்போதும் அழுது கொண்டும், அரற்றிக் கொண்டும் இருந்தாள். நாற்பது வருடங்களாக அந்த வீட்டுக்குப் போய் வந்து கொண்டிருந்த அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளையான ஆச்சியின் கணவரை, கோதையின் தாத்தாவை, இரண்டு, மூன்று முறை ‘வாருங்க ‘ என்று பூர்ணத்தாச்சி அழையாததால் போக்கு வரத்து நின்று விட்டது. ஆச்சி பிறந்த வீட்டுப் பந்தம் அறுந்து போனதற்காக, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அழுதழுது வருத்தப் பட்டுக் கொண்டிருந்தாள். ஆச்சியுடைய வீட்டிற்குப் போவதுதான் நின்று போனதேயொழிய அந்த ஊருக்குப் போவது நிற்கவில்லை. அந்த ஊாில்தான் ஆச்சியின் புகுந்த வீட்டுப் பந்துக்களும் இருந்தார்கள். கோதைக்கு ஞாபகம் இருக்கிறது. கோதையும், ஆச்சியும் ஒரு முறை தாத்தாவின் தம்பி வீட்டுக்குப் போய் விட்டு பஸ் ஸ்டாண்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வழியில், எதிரே பூர்ணத்தாச்சியின் பொிய மகனும், ஆச்சியின் தம்பி மகனுமான கந்தசாமி மாமா வந்தார். இவர்களைக் கண்டதும் ஒரு சங்கடத்துடன் தலையைக் குனிந்தவாறே சென்றார். ஆச்சி வரும் வழியெல்லாம் புலம்பிக் கொண்டே வந்தாள்.

‘இவனுக்கு என்ன வந்தது ? நா பார்த்து வளந்தவன், ‘என்ன அத்த, எப்படி இருக்கீக ? ‘ன்னு ஒரு வார்த்த கேக்காமப் போறானே ? அப்டி என்ன குத்தம் பண்ணிட்டேன் ? ‘

என்று வெகு நாட்களாகப் புலம்பினாள்.

அப்புறம் கந்தசாமி மாமா டவுணில் இருக்கும் பொருட்டு மஹாராஜ நகாில் வீடு கட்டினார். கிரஹப் பிரவேசத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு, கந்தசாமி மாமாவின் இன்னொரு தங்கையான பார்வதி சித்தி தன் தாயான பூர்ணத்தாச்சியிடம் இப்படிச் சொன்னாளாம்,

‘உனக்கு ஆயிரம் சீக்கு இருக்கு. நீ மஹாராசியாப் போய்ச் சேந்துருவே. அத்த எங்களுக்கு என்னல்லாம் செஞ்சுருக்கா ? உனக்குத்தான் என்னல்லாம் பாடு பாத்திருக்கா ? கிரஹப்பிரவேசத்துக்கு நீ போய்க் கூப்பிடலேன்னா நீ மனுசியே இல்ல… ‘ என்றாளாம். அதற்குப் பூர்ணத்தாச்சியின் கணவரும், ஆச்சியின் தம்பியுமான சுப்பையாத் தாத்தா,

‘அவ மனுசியா இருந்திருந்தா முதல்ல இப்படி உறவே விட்டுப் போயிருக்காதே! ‘ என்றாராம். பூர்ணத்தாச்சி என்ன நினைத்தாளோ, அன்று இரவே வந்து ஆச்சியை கிரஹப்பிரவேசத்திற்கு வந்து அழைத்தாள். கிரஹப்ரவேசம் நடந்து ஆறு மாதங்களில் பூர்ண்த்தாச்சி இறந்தும் போனதால், கந்தசாமி மாமா குடும்பத்துடன் டவுணில் வந்து இருக்கும் எண்ணம் கைவிடப்பட்டு ஊாிலேயே இருக்க வேண்டியதாயிற்று. பூர்ணத்தாச்சி இறந்த போது பாம்பேயில் இருந்து வடிவுச் சித்தி வரும் வரை உடலை வைத்திருக்க முடியாது எடுத்து விட்டார்கள். அப்புறம் வடிவுச் சித்தி வந்து ரெண்டாங்கட்டுச் சுவாில் முட்டி முட்டி அழுத அழுகை இருக்கிறதே! கோடையின் வயிறு இன்னமும் கலங்கும்.

அந்தப் பதினாறு தினங்களில்தான் பார்வதி சித்தியின் பெண் நீலா, கோதைக்கு ‘பொன்னியின் செல்வன் ‘ கதையை வாி விடாமல் கூறினாள். இரவு பாராமல், பகல் பாராமல் வந்தியத் தேவனையும், குந்தவையையும், நந்தினியையும், பழுவேட்டரையர்களையும் கற்பனையில் சந்தித்த அந்தத் தினங்கள் அற்புதமானவை!

எத்தனை முறை¢ போனாலும் , வீடு மாறாமல் அப்படியே இருந்தது. அதே பழைய ஆர்ச் கேட், வழுவழு முற்றம், திண்ணை, மணவடை, பட்டாலை என்று எதுவும் மாறவில்லை. காலத்திற்கேற்ப டெலிஃபோனும், ஃப்ாிட்ஜும், டிவியும் அங்கங்கு முளைத்திருந்தன.

கோதைக்குத் திருமணமாகி கணவனுடன் விருந்து போன போது, சிவில் இஞ்சினியரான கணவன்,

‘பரவால்லையே! பழய காலத்து வீடாயிருந்தாலும் நல்ல ப்ளானோட கட்டியிருக்கே! ப்ளென்டி அஃப் சன்லைட் ‘ என்று சிலாகித்தான். கந்தசாமி மாமா பெருமையுடன் புன்னகைத்தார்.

திருமணமாகி கோதை தில்லிக்குப் போய் விட்டாள். அப்புறம் ஆச்சி வீட்டுக்குப் போகும் வாய்ப்பில்லை. திரு நெல்வேலிக்குப் போகும் போதெல்லாம் ஏதேனும் காரணத்தால் அச்சி ஊருக்குப் போக முடியாமல் போனது.

அம்மா மட்டும் அவ்வப்போது ஊாில் நடந்த செ¢ய்திகளை சுவாரஸ்யம் போகாமல் கூறுவாள். மணவடையை இடித்து விட்டார்களாம். மணவடைக்கு அடியில் ஆச்சியின் தங்கை கோமதி ஆச்சியின் திருமணத்தின் போது போட்ட அாிசி மாக்கோலம் அப்படியே இருந்ததாம். அதைப் பார்த்த ஜெயா அததைக்கு அழுகை வந்து விட்டதாம்.

அப்புறம் அடுத்த முறை போன போது சுப்பையாத் தாத்தா இறந்த துக்கம் விசாாிக்க கோதை ஊருக்குப் போனாள். ஊாில் நிறைய மாற்றம்! புதிது புதிதாக கடைகள். ரெம்ப மோசமான ரசனையுடன் கட்டப்பட்ட சினிமா தியேட்டர் ஒன்று தொிந்தது. தெருவிற்குள் நுழையும் போதே மாற்றம் தொிந்தது. கறுப்பு ஆர்ச் கேட் போய் இரும்பு க்ாில் கேட். வழுவழு முற்றத்தின் நடை பாதை மட்டும் விட்டு, இடது புறம் புதிதாக இரண்டு அறைகள். அளிக்கதவும், அளியும் போய் க்ாில். திண்ணை போயே விட்டது. மணவடை இருந்த இடம் இடிக்கப்பட்டு இரண்டு சோபாக்கள் கிடந்தன. வீடு பூராவும் கொல்லம் செங்கல் பெயர்க்கப்பட்டு மொசய்க் புள்ளிகள்! வடிவுச் சித்தி தோழிகளுடன் கும்மாளமடித்த மைதானத்தில் இப்போது மூன்று கான்க்ாீட் குச்சுகள். பட்டாலையில் ஆச்சியின் தாத்தா படத்தைக் காணவில்லை. அந்த இடத்தில் கந்தசாமி மாமாவின் மகள் உமா வரைந்த பெயிண்டிங் மாட்டப்பட்டிருந்தது. அந்த வீட்டின் மாற்றங்களைக் கண்கள் விாியப் பார்த்துக் கொண்டிருந்தாள் கோதை.

‘மாமா இப்ப அரசியல்ல தீவிரமாயிட்டாங்கல்லா ? யாராவது கட்சிப் பொிய மனுஷங்க வந்து போறாங்க ‘……. ‘ கூட ஒரு தடவ வந்தாரு. அதான் வீட்டைக் கொஞ்சம் மாடர்னாக்கிட்டோம்…. ‘

ஜெயா அத்தை பேசிக் கொண்டே போனாள். கோதை சிாித்துக் கொண்டாள்.

***

(*திரு நெல்வேலிப் பிள்ளைமார் சமூகத்தில் தந்தை வழிப் பாட்டியையும், தாய் வழிப் பாட்டியையும் ‘ஆச்சி ‘ என்று அழைப்பர். எந்தப் பாட்டி முறை உறவையும் ‘ஆச்சி ‘ என்றுதான் கூறுவர்)

Series Navigation

அலர்மேல் மங்கை

அலர்மேல் மங்கை