அவஸ்த்தை

This entry is part [part not set] of 34 in the series 20080911_Issue

கவிதா நோர்வே


இமைகள்

மூடியே கிடக்கின்றன

நீ என்ற நினைவுகளோடு

இரத்த நாளங்களில்

அவஸ்த்தைகளின்

அணிவகுப்பு

கால் நகங்களிலும்

நடக்கிறது

உணர்ச்சிகளின் ஊர்வலம்

சோர்ந்து கிடக்கும்

உடல் கிழித்து

வேகமெடுக்கிறது

இதயம் மட்டும்

இந்த அவஸ்த்தையின்

உச்சத்தை

அடைந்திருந்தால்…

போதிமரத்தை புறகணித்திருப்பானோ

புத்தனும்?

நீ என்ற மந்திரத்தில்

என்னை மறந்த நிலையிது!


ஒன்றையே

நினைப்பதுதானே தியானம்

அப்படியானால்

சரியான இடம்தான்

காதல்!

அவஸ்த்தையின்

ஆக்கிரமிப்பில்

ஆழ்ந்து விடுகிறது

என்

உருப்புகள்…

காதல் போதிமரத்தலிருந்து

உதிர்ந்து கொண்டிருக்கிறது

என்றும் புதியாய்

உன் நினைவுப் பூக்கள்…

மனதில்

ஏந்திய வண்ணம்

தியானித்திருக்கிறேன்..

இன்னுமா புரியவில்லை

உனக்கு!kavithai1@hotmail.com

Series Navigation

கவிதா நோர்வே

கவிதா நோர்வே