அறை

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

நாகூர் ரூமி


====
அன்றுதான் கவனித்தேன் – என்
அறைபூரா அசிங்கமாய்
புத்தகமும் பேனாவும்
வாராந்தரி மாதாந்தரி
சிகரெட்டு தீப்பெட்டி
சாம்பல் சோம்பல்
மேஜை நாற்காலி கட்டில் என
அத்தனையும் தூக்கி வைத்தேன்
அறைக்கு வெளியே ஒரு நாள்

அம்மா சொன்னாள் :
அறை சுத்தமாக உள்ளது
அப்பா சொன்னார் :
அறை காலியாக உள்ளது
அப்போதுதான் கவனித்தேன்
அறை இருந்தது
அறையாக

— ஆறாம்திணை, 13-04-2001

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி