அர்த்தம்

This entry is part [part not set] of 28 in the series 20081127_Issue

ராஜகமல்


ஆசிர்வதிக்கப் பட்ட பூமி இன்று
சபிக்கப் பட்டவர்கள் கையில்இஸ்ரேல் செய்தால் ஞாயம்
ஈராக் செய்தால் அநியாயம்சாத்தான்கள் எல்லாம் இன்று
சமாதானம் பேசுகிறது உலக அமைதியை
எண்ணெய் நாட்டிலும்
ஏழை நாட்டிலும்
ஓயாது போர் செய்து
தேடும் வல்லரசுஉண்மையை பேச அஞ்சுபவர்களே
இன்று உலகத் தலைவர்கள்சமுதாயப் பாதுகாப்பு என்ற பெயரில்
சமுதாயச் சீரழிப்புஅமைதிக்காக செல்லும்
அராஜகப் படைதீவீரவாதிகளே தீவீரவாதிகளை
தேடி அலையும் அதிசயம்ஆயுத விற்பனையாளர்கள் தான்
உலகை அடக்கியாளும் வல்லரசுகள்அடி வருடிகள் எல்லாம் அமைதிக்கு
பாடுபடுபவர்கள்உரிமை கேட்பவர்கள் எல்லாம்
அமைதிக் கெடுப்பவர்கள்மனித உரிமை சங்கத்தில்
மனித உரிமைக்கு மாத்திரம் இடமில்லைஐ.நா சபையிலிருந்து அதிகாரம் மட்டும்
வெளிநடப்பு செய்து விட்டதுஅகராதியில் இந்த வார்த்தைகளுக்கு
அர்த்தம் மாறியது எப்போதுஇந்த விடையில்லா வினாக்கள்
விடியலை நோக்கி செய்யும்
நெடிய பயணம்.


rajakml@yahoo.com

Series Navigation