அருவி அமைப்பு நடத்தும் சுடர் ஆய்வுப் பரிசு வழங்கும் விழா

This entry is part [part not set] of 32 in the series 20051216_Issue

அறிவிப்பு


அன்பு ஆசிரியர்க்கு

வணக்கங்கள்

இதனுடன் அருவி அமைப்பு நடத்தும் சுடர் ஆய்வுப் பரிசு வழங்கும் விழா நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை அனுப்பியுள்ளோம். இதனைத் தங்கள் இதழில் அறிவிப்புப் பகுதியில் வெளியிட்டு உதவ வேண்டுகிறோம்.

மு. பழனியப்பன்

மாடசாமி

—-

இலக்கிய ஆர்வலர்களுக்கு

வணக்கங்கள்

அருவி அமைப்பு சுடர் ஆய்வுப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை 27,12, 2005 செவ்வாய் மாலை 5,30 மணிக்கு சென்னை தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் நிகழ்த்த உள்ளது. இவ்விழாவில் பேரா, வே, வசந்திதேவி, திருவாளர்கள் ச, மாடசாமி, ச. தமிழ்ச்ள சல்வன், ஆதவன் தீட்சண்யா, மாலன் பாரதி பாலன் திருமதி மா. லைலாதேவி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இவ்விழாவில்திருவாளர்கள் இரா, அறவேந்தன் (படைப்பாளுமை), பா, ஆனந்த குமார் (இந்திய ஒப்பிலக்கியம்), மு. இராமசுவாமி (திருநெல்வேலியில் திரெளபதை மானபங்கப்படுத்தப்பட்டபோது), கரசூர் பத்மபாரதி (நரிக்குரவர் இனவரைவியல்), அ, செல்வராசு (ஆண் ஆளுமையில் பெண்கற்பு), பத்மாவதி விவேகானந்தன் (பெண்கவிதை மொழியும் பெண்கவிஞர்களும்), மு. பழனியப்பன் (விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்), வெ.மு. பொதிய வெற்பன் (சொல்லின் மந்திரமும் சொல் ஓய்ந்த மெளனமும்), ச. முகமது அலி , க, யோகானந்த் (யானைகள் அழியும் பேருயிர்), ந, முருகேச பாண்டியன் (பிரதிகளின் ஊடே பயணம்) ஆகியோர்க்கு அவர்தம் ஆய்வுநூல்களுக்காகப் பரிசளிக்கப் படுகிறது.

தங்களின் வருகையும் இவ்விழாவை மேம்படுத்தும், வருக, வருக.

muppalam2003@yahoo.co.in

—-

அருவி, 19. சந்தனம் நகர் மதுரை தமிழ்நாடு 625 003 (9444164836)

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு