அபகரிப்பு

This entry is part [part not set] of 34 in the series 20050206_Issue

இளைய அப்துல்லாஹ்


தலை குனிந்தபடி நடக்கிறேன்
என்னைச்சுற்றிலும் ஒலிகள்
மனித அழுத்தங்களை இறுக மூடிய படிக்கு
சுதந்திரமாக
என்னை நடக்க விடுங்கள்

என்னை கேள்வி கேட்க ஒருவர் வருகிறார்
கண்ணை மூடிக்கொள்கிறேன்
தொந்தரவு செய்வதற்கென்றே வருகிறார்கள்

ஒரு நிமிடமும் என்னைத்தனிமையில்
ஏகாந்தமாய் என் மனதோடும்
அந்தரங்கங்களோடும் இருக்க விடுகிறார்களில்லை.

மெளனம் எனது மொழியாய் இருக்கையில்
தோந்தரவு அவரடிகள் மொழிகளாய் இருக்கின்றன

ஏன் இவரடிகள் இப்படி இருக்கிறார்கள் ?
பரமபிதாவே இவர்களைச்சபியும்
என்னை தொந்தரவாளர்களிலிருந்து இரட்சியும்

அழுத்தங்களற்ற ஒழுங்கான சுதந்திரமான
பூமியொன்றை நோக்கிய
பயணத்தில் என்னை
நோக்கியபடிக்கு பயணிக்க விடுங்கள்

இளைய அப்துல்லாஹ்
இலங்கை

Series Navigation