அன்புக் குடில்

This entry is part [part not set] of 30 in the series 20050715_Issue

கவிநயா


அன்பைத் தவிர வேறு ணர்ந்ததில்லை
அமைதி தவிர வேற றிந்ததில்லை
உணவைத் தேடி அலைவதில்லை
உறக்கம் வேண்டி களைப்பதில்லை
குளிரோ வெயிலோ கவலையில்லை
மழையோ பனியோ மயக்கமில்லை
எல்லாம் இந்தக் குடிலில் உண்டு
கொழிக்கும் கொள்ளை இன்பம் உண்டு ‘
இதயம் நனைக்கும் கருணை உண்டு
மனதை உருக்கும் பாசம் உண்டு
கண்ணெனக் காத்திடும் குழந்தையின் குடிலாம்
தாய்வயிற் றுக்கிணை ஏது சொல்வீர் ?

Series Navigation

கவிநயா

கவிநயா