அன்னையும் அண்ணலும்

This entry is part [part not set] of 27 in the series 20021027_Issue

கோமதி நடராஜன்


விரல் அகல நீலக்கரையில்
தும்பைப்பூ சேலை,
ஆற்றாத எந்த சேவையை-
கடை கடையாய் ஏறி இறங்கி,
காஞ்சிப்பட்டெடுத்து,
அதற்குத் தோதான,
ரவிக்கைத் துணியைத்,
தெருத்தெருவாய் தேடி அலந்து,
கச்சிதமாய், தைத்து அணிந்து,
நாம் ஆற்றப் போகிறோம் ?
ஆட்டுப்பாலும் வெந்த வேர்க்கடலையும்
ஆற்றாத எந்த பணியை-
வக்கணையாய் வடித்துக் கொட்டி
வட்டச் சம்மணம் இட்டு,
தலைவாழை இலையில்
முறைமாறாமல் பரிமாறி
வயிறார உண்டு,
நாம் ஆற்றப் போகிறோம் ?

***

—ngomathi@rediffmail.co

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்