This entry is in the series 20080904_Issue

தாஜ்



உச்சாணிக் கொம்பில்
பழுக்க நிற்கும்
காய்களைப் பிறாண்டி
கடித்தும் வைக்கிற
அந்த அணில்கள்
ராம நாமத்தை சுமக்கும்
ஸ்ரீ ராமபிரானின் செல்லங்கள்
ஸ்ரீ ராமபிரான் கண்ணனின்
லீலா வினோத மாயாவதாரம்!
கண்ணனே மூத்தக் குடிமகன்
நம்ம கருப்பு நாயகன்!
முறுக்கிக் கொண்டும்
மூக்கை பிடித்துக் கொண்டும்
சந்ததிக்குப் பாதை சமைத்த
எம் மூதாதையர்கள்
மதம் மாறி குலம் மாறி
கோலம் மாறியுமென்ன!
இன்றைக்கும் எங்களது
பார்வையில் கிளைக்கிறதே
அந்த வாயில்லா
ஜீவன்களோடான பந்தம்!
——————
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation