அக்கினிப் பூக்கள் – 2

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

சி. ஜெயபாரதன், கனடாஈராக்கில் ஆஹாவென எழுந்தான்
விடுதலைச் சூரியன் !
குடிமக்கள் நிம்மதியாகத் தூங்கினர்
எல்லைக் கூடாரத்தில்
ஞானப் பெண்ணே !

செருப்பைத் தைத்துக் கொண்டு
பாதம் குறுக்கப் போனான் !
காலைக் காட்டும் நபருக்கு
தோலைத் தேடிப் போனான்
ஞானப் பெண்ணே !

வந்த சண்டை போடவா ?
வராத சண்டை போடவா ?
போன சண்டை கீறி விட்ட
புண்ணை ஆற்றிக் கொள்ளவா
ஞானப் பெண்ணே ?

ஆழம் தெரியாமல் காலை விடாதே !
ஒரு கால் நொண்டி
காலை விடுவானா ? அல்லது
கோலை விடுவானா
ஞானப் பெண்ணே ?

எல்லாரும் வலதென்றால் சிறுவன்
இடதுகால் வைத்தான் !
“எல்லோரும் தவறிய பாதம்
என் பேரனைத் தவிர,” என்பாள் கிழவி
ஞானப் பெண்ணே !

சுட்ட கையை எடுப்பதா ?
சுடாத சட்டி தேடவா ?
சுட்ட சட்டி தொட்டிட
சுடாத கையை விடுவதா ?
ஞானப் பெண்ணே ?

*********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan November 26, 2007]

Series Navigation