திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100206_Issue

அரசியலும் சமூகமும்

நினைவுகளின் தடத்தில் – 43

வெங்கட் சாமிநாதன் இப்போது இதை எழுதும்போது தான், கடந்த காலங்களில் ஒவ்வொருவரும் தம் எதிர் வரும் நாட்களை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை நினித்துப் பார்க்க நேரும்போது, என்னுடைய முனைப்பின்மையும், அதிகம் என்னைச் சிரமப்படுத்திக்கொள்வதில் ஆர்வமின்மையும்,…

பொட்டுக்கட்டப்பட்ட தேவதாசியாக மறுக்கும் ஒரு தலித் பெண்

வெங்கட் சாமிநாதன்செடல் தன் கிராமத்து கோவிலுக்கு பொட்டுக்கட்டி விடப்பட்ட ஒரு தேவதாசிப் பெண். தலித் சமூகத்தைச் சேர்ந்தவள். தலித் சமூகத்தினுள்ளும் கூட, அவள் கூத்தாடிகள் என்றழைக்கப்படும், கோயில்களிலும், கிராமச் சந்தைகளிலும் திருவிழாக்காலங்களில் ஆடிப் பாடி…

மொழிவது சுகம்: மகன் தந்தைக்காற்றும் உதவி

நாகரத்தினம் கிருஷ்ணாஉண்மையான படைப்பென்பது பல ரகசியங்களை உள்ளடக்கியதென்ற அல்பெர் கமுய் 1960ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஒரு மோட்டார் வாகன விபத்தில் இறந்து ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. நோபல் பரிசு 1901லிருந்து வழங்கப்பட்டுவருகிறது.…

அறிவிப்புகள்

கடிதம்

தேவமைந்தன் அன்பார்ந்த ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். இப்பொழுது திண்ணையில் நாகரத்தினம் கிருஷ் ணாவின் 'மொழிவது சுகம்' கட்டுரைகளும், இந்தத் திண்ணையில் ஜெயந்தி சங்கரின் 'நூடில்ஸ்' வயணக் கட்டுரையும் பயனும் பகிர்தலும் கொண்டுள்ளன. பாராட்டுகள். அன்புடன்,…

பிரான்சு கம்பன் கழகம் சார்பில் நடைபெறும் பொங்கல் விழா

பேராசிரியர் பெஞ்சமின் லெபோஅன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு அன்பு வணக்கம். பிரான்சு கம்பன் கழகம் சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவுக்கான அழைப்பிதழ் அனுப்பி உள்ளேன். அருள்கூர்ந்து நம் திண்ணை இணைய இதழில் வெளியிட வேண்டுகிறேன். நனி…

அறிவியலும் தொழில்நுட்பமும்

உலகில் முதல் அணு ஆயுதம் ஆக்கிய ராபர்ட் ஓப்பன்ஹைமர் (1904-1967)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாவிண்வெளியிலே ஒரே சமயத்தில் ஓராயிரம் சூரியன்கள் வெடித்துக் கதிரொளி பரப்பினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் பராக்கிரம் படைத்த வல்லவனின் பேரொளி இருக்கும் ! உலகத்தைத் தூள் தூளாகத்…

இலக்கிய கட்டுரைகள்

ஹெச்.ஜி.ரசூல் எழுதிய புதிய திறனாய்வு பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாம்பிரதிகள்

கவிஞர் நட.சிவகுமார் பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாத்தின் பிரதிகளை அணுகும் தமிழின் முதல்நூலென இதைச் சொல்லலாம். மைலாஞ்சி கவிதைநூல்வழியாக வெகுவாக அறியப்பட்ட ஹெச்.ஜி.ரசூலின் இந்தப் படைப்பு நாட்டார்மரபு துவங்கி மத்தியகிழக்கு அரபுநாடுகளிலும் உலக அளவிலும் பேச்ப்படுகிற…

நூல் அறிமுகம் குரலற்றவனின் குரல்

ஆ. மணவழகன்- கதைச்சொல்லி பரம்பரை நம்முடையது. தாத்தா-பாட்டிகளின் வாயிலாக, நாம் நம் முன்னோர்களின் வரலாறுகளைக் கதைகளாக அறிந்தோம். குறைந்தபட்சம் அவரவர் பரம்பரை பெருமைகளையாவது கதைகளாக நமக்குச் சொல்லிவிட்டுப் போயிருப்பார்கள். அடுத்த தலைமுறைக்கு இது வாய்க்குமோ…

“மந்திர யோகம்”

முனைவர் சி.சேதுராமன் E.Mail. sethumalar68 yahoo.com மந்திரத்தினை செபித்து (மனதில் உருவேற்றி) இறைவனை அடைவதற்குரிய சாதனமே மந்திரயோகமாகும். யோக சாதனையால் சாதகர் இறைவனை அகண்டமாகத் தியானித்துக் கண்டநிலை நீங்கி அகண்டமாய்த்த திகழ்வர். மந்திர செபத்தால்…

இறைவனின் தமிழ்ப் பேச்சு

முனைவர் மு. பழனியப்பன் இறைவன் மொழி கடந்தவன். எல்லை கடந்தவன். முடிவும் முதலும் அற்றவன். முதலும் முடிவும் பெற்ற இறையடியார்கள் தமது கால, நில எல்லைக்குள் நின்று, தாமறிந்த மொழியிலேயே அவனைத் துதித்துப் போற்றுகின்றனர்.…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -7

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "இரவின் அடர்ந்த காரிருளில் நாங்கள் ஒருவரை கூப்பிட்டுக் கொண்டு உதவிக்குக் கூக்குரல் இடுகிறோம். மரணம் தன் இறக்கைகளை எம்மீது போர்த்திக்…

கதைகள்

இது அவள்தானா?

ஜெஸ்வந்தி அலாரச் சத்தத்துக்கு திடுக்கிட்டு எழுந்தவன் அசதி மேலிட திரும்பவும் கட்டிலில் சாய்கிறேன். இன்று முப்பதாந் திகதி, ஆபீஸில் மாத இறுதிக் கணக்கு முடிக்க வேண்டும் என்ற நினைவு வர துள்ளியெழுகிறேன். குளியலறையில் பல்…

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -3

ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "நான் எதேச்சையதிகாரப் படுகுழியை மூடிவிட்டேன். நாட்டுக் கொந்தளிப்புகளைத் தகர்த்து விட்டேன்." நெப்போலியன், நூற்றாண்டுகளாய் மங்கலாகச் சிந்தித்து தோற்றம்…

டென்ஷன்.

எஸ் ஜெயலட்சுமி காலை மணி 11 ஆகியும் குளிர் விட்டபாடில்லை. இந்த வருஷம் டில்லியில் மார்ச் பிறந்த பின்னும் கூட மழை பெய்ததால் குளிர் போக வில்லை. எதிர்பாராதவிதமாக ஸ்ரீநகரில் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து…

பெண்மனம்

முனைவர்.சே.செந்தமிழ்ப்பாவை விடிந்து நிறைய நேரமாகிவிட்டது. பால்காரர் மணியடித்துக் கொண்டே செல்வது, மாடு மேய்ப்பவர்கள் த்தா! தே! என்று மாட்டை விரட்டிக்கொண்டு செல்வது நாற்று நடச் செல்லும் பெண்கள் சலசலவென்று பேசிக்கொண்டே சென்றது என அனைத்தையும்…

பட்சி

எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை (# தமிழ்மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுத் தந்த இச் சிறுகதை "சிறந்த கதாசிரியர்" விருதையும் பெற்றுத் தந்தது.) ' உண்மையாச் சொல்லணும்னா எனக்கு உன்கிட்ட இந்த எழுத்துத்தான் ரொம்பப்…

பூ பூக்கும் ஓசை

சரண் "கல்யாணப்பொண்ணைக் காணலியாமே..."என்று இருவர் தங்களுக்கே கேட்காத குரலில்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் எப்போதும் அலாரத்தை ஆறுமுறை தலையிலடித்து நிறுத்திவிட்டு திரும்பவும் தூங்கும் சுப்புலட்சுமி இதைக்காதில் வாங்கியதும் சட்டென்று எழுந்து அமர்ந்தாள். காலை ஆறு மணி…

ஆண்டு 2050

முருகன் சுப்பராயன்அழகான அமைதியான கிராமத்தில் தடத்தடவென சத்தத்துடன் காவல்துறையினர் இரு சக்கர வாகனத்திலும் நான்கு சக்கர வாகனத்திலும் மண்புழுதிக் கிளப்பிக்கொண்டு வேகமாக சென்றனர். என்னடா பிரச்சினை, காவல்துறையினர் போறானுங்க-னு பண்ணைக் குளத்தில் மாடு குளிப்பாட்டிக்…

கவிதைகள்

வார்த்தையின் அர்த்தம்

யூசுப் ராவுத்தர் ரஜித் வார்த்தையில் இல்லை உரிக்க உரிக்க ஒன்றுமில்லையா? ஒவ்வொரு தோலும் உயிர்களில்லையா? ஆயுள் வாழ்க்கை ஆறடிதானா? உயிரின் திரையில் ஒரு படம் தானா? வெட்டிய விருட்சம் விறகுகள்தானா? வித்துக்கள் என்பது பருப்புக்கள்…

வேத வனம் -விருட்சம் 71

எஸ்ஸார்சி - பூவுலகே இறை தொழும் மக்கள் யாம் செடி கொடி விருட்சங்கள் காப்பாற்றப்படுக ஆடுமாடுகளின் கொட்டகைகள் பேணப்படுக வான் முகில் வளாது பெய்க யாம் வெறுப்போரை எம்மை வெறுப்போரை புவியின் கோடிக்கு இழுத்துப்போய்…

கையிருப்பு ..

ஆறுமுகம் முருகேசன்ஒருபோல அமைவதில்லை எல்லா பகல்களும்.. தெருவோர சிறுவனொருவனின் கிழிந்த சட்டைபை ஞாபகபடுத்துவதில்லை என்னை.. பூக்காரசிறுமியின் பூக்கள் அழகுபடுத்த போவதில்லை அப்பூக்கார சிறுமியை ஒருபொழுதும்.. அவளைப் பற்றிய பாடலொன்று கேட்டுவிட முயற்சிப்பதில்லை எல்லா பேனாமுனைகளும்..…

ப.மதியழகன் கவிதைகள்

ப.மதியழகன்சபிக்கப்பட்டவனின் வாழ்க்கை மனிதர்கள் வேட்டையாடி பயி்ற்சி பெற விலங்காய்ப் பயன்படுவான் குருதியை யாரும் கண்டதில்லையா அவனை கிழியுங்கள் இரத்தத்தை ருசியுங்கள்- என அறிவிப்புப்பலகை தொங்கும் அவன் கழுத்தில் கண்கள் மூடியே இருக்கும் காணச்சகிக்காது இவ்வுலக…

வெவ்வேறு உலகங்கள்

நாவிஷ் செந்தில்குமார்வீட்டின் முன்னே பறந்துகொண்டிருந்த பலூனும் வண்ணத்துப்பூச்சியும் ஒரு நூலால் கட்டப்பட்டிருந்தன… எது எதை இழுத்துவந்ததென அறிய நூலை அறுத்தேன் இரண்டும் வெவ்வேறு திசைகளில் பயணித்தன குழந்தைகளின் உலகத்திலிருந்து தத்தம் உலகத்திற்கு!

ஒரு விதவையின் – நெற்றி சுடும் பொட்டு;

வித்யாசாகர் பெண்ணின் அடையாளத்தை சிவந்து காட்டும் பொட்டு; வெற்றியின் உச்சத்தை பறையறிவிக்கும் - ஒற்றை திலகம் பொட்டு; குடும்ப பெண்களின் அழகிற்கு இன்னொரு - ஆபரணம் துறந்த அழகு பொட்டு; நெற்றிக் குளிர்ச்சியில் -…

இன்னுமொருமுறை எழுதுவேன்

நடராஜா முரளிதரன்நான் சிறு பையனாக இருந்தவேளை எனது அம்மம்மா சொல்வாள் தான் பிறந்த வாழ்ந்த ஓடு வேய்ந்த சுண்ணாம்புக் கட்டிட வீடு பற்றி ஊடுருவி உறைந்து காலக்கண்ணாடியில் படிந்து சடத்துவமாய் காட்சி தந்து மூலக்கூற்றுக்…

ஆயுதத்தின் கூர்முனை

செ. பாலச்சந்தர்...... ஒவ்வொரு முறையும், உன்னிடம் வாதிட்டு, தோற்றதின் படிமங்கள், ஆயத்தப்படுத்துகின்றன, அடுத்தமுறை உன்னை வீழ்த்த, இம்முறை வார்த்தையையும், வாதத்திற்கான காரணியையும், ஒன்று சேர்த்து கூர்தீட்டி, ஆயுதமாய் திரித்து, மறைத்தவாறு, தோன்றுகிறேன் உன் முன்னே...…

மௌனமாய் ஒரு விரதம்

காவிரிக்கரையோன் "இன்றைக்கு மௌன விரதம்" தாள் நிறப்பி அனுப்பிய பின் கண்ணால் வார்த்தைகள் வார்த்து நீ கோர்த்த வாக்கியங்கள் எனக்கு புரியவில்லை என்ற பயமேன் உனக்கு? இதயத்தின் துடிப்பு இதயத்துக்கு அந்நியமாய்ப் போய் விடுமா?…

பால் நிலா

ராமலக்ஷ்மி, பெங்களூர்.மொட்டுஅதுத் தானாகக் கட்டவிழும் முன்னே பட்டுடுத்தி அலங்கரித்துப் பாதத்தினைப் பற்றியெடுத்து அம்மிமேல் வைத்தழுத்தி அருந்ததியைப் பார்க்கவைத்து கட்டிவைக்கிறார் அவசரமாய் கடமையை முடித்திட..! ஈரைந்து திங்களேலே ஆடுகிறது தொட்டில். தொலைத்திட்ட அவள் பருவம்போலத் துலங்குகின்ற…

நகைச்சுவை

கொஞ்சமாய் குட்டிக்கதைகள்

எஸ்ஸார்சி --1 ஒரு ஊரில் நான்கு வேலையில்லாத வெட்டிப்பேர்வழிகள் எங்கேயாவது அமர்ந்துகொண்டு எப்போதும் எதையாவது பேசிக்கொண்டே இருந்தனர். அதே ஊர்க்காரன் வேறு ஒருவன் அவர்களிடம் வந்து உங்களில் யார் பேசாமல் இருக்கிறீர்களோ,அவர்களுக்கு நான் ஒரு…

ஒரு ஹலோபதி சிகிச்சை

அப்துல் கையூம்உலகத்திலேயே அதிகமாக உச்சரிக்கப்படுற வார்த்தை - “Sorry” அல்லது “Thanks”, - இதுவாத்தான் இருக்கும்னு நினைக்கத் தோணும். ஊஹும். அப்படி கிடையாதாம். “ஹலோ”ங்குற வார்த்தைதானாம். வாஸ்தவம்தானே! மகாராணி எலிஸபெத் முதல் மம்தா பானர்ஜி…