திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090915_Issue

அரசியலும் சமூகமும்

‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்னும் ஆராய்ச்சி

தேவமைந்தன்புதுச்சேரியில் உள்ள இலக்கியப்பொழில் இலக்கிய மன்றம் என்னும் அமைப்பு, ‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்ற தலைப்பிலான முனைவர் அ. கனகராசு அவர்களின் ஆய்வை வெளியிட்டிருக்கிறது. முனைவர் அ. கனகராசு, புதுச்சேரி அரசின் கலை…

பாலைவனமும் ஒரு பட்டிதொட்டி தான் !

வைதீஸ்வரன் உலகின் எல்லாவித சீதோஷ்ண நிலைகளிலும் மனிதக் குடியிருப்பு மிகவும் சகஜமாக அந்த சூழலை விட்டு எக் காலத்திலும் பிரிய முடியாத ஈர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது. உதாரணமாக ரிஷிகேஸம் தாண்டி…

கலாச்சார மாற்றங்களும், கேலிச்சிந்தனைகளும்

பா.பூபதிஅனைத்து விசயங்களும் நவீணத்துவமாக மாறிவிட்ட இந்த காலகட்டத்தில், நாம் தவிர்த்திருக்க வேண்டிய பல விசயங்களும் நவீணத்துவம் பெற்று நம்மை விட்டு விலகாமல் இருப்பது வருத்தத்திற்குரியதே. தமது நாட்டுக்கு பக்கத்தில் இன்னொரு நாடு இருக்கிறது அங்கேயும்…

மறுசிந்தனையில் ஸகாத்

ஹெச்.ஜி.ரசூல்இஸ்லாத்தின் புராதன பொருளியல் கோட்பாட்டின் நோக்கம் நாடோடி மேய்ச்சல் சமூக வாழ்வியல் முறைசர்ந்த மக்கா நகர் குறைஷிகளுக்கும் வணிக வாழ்வியலில் மேம்படுத்தப்பட்டிருந்த மதினாவாசிகளுக்கும் இடையே பொருளியல் ஏற்றத்தாழ்வையும் முரண்பாட்டையும் பகைமையையும் சரிப்படுத்தும் விதத்தில் செல்வத்தை…

அரிதார அரசியல்

பி.ஏ.ஷேக் தாவூத் “சில ரொட்டித் துண்டுகளும் ஒரு சர்க்கஸ் கோமாளியும் போதும் மக்களை ஏமாற்றுவதற்கு” - ஹிட்லர். நீதிக்கட்சியின் பரிணாமத் தோற்றமான திராவிட இயக்கம் தமிழகத்திற்கு எண்ணிலடங்கா பல நன்மைகளை விட்டுச் சென்றுள்ளதை தமிழகத்தின்…

காஞ்சீவரம்: கசப்பான அனுபவம்

சுப்ரபாரதிமணியன் காஞ்சீவரம் தமிழ்த் திரைப்படம் தேசிய விருது பெற்றுள்ளது.சென்றாண்டு கேரளா திரைப்படவிழாவில் அதை முதலில் பார்த்தேன். அதிர்ச்சியடைந்தேன். அன்று தங்கபச்சானின் அழகி திரைப்படம் வெளியாகியிருந்த நாள்.ஒளிப்பதிவாளர் ஒருவர் தொடர்ந்து என்னை சென்னைக்கு எனது சாயத்திரை…

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்

கண்ணன் பாஸ்கரன் உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே -- கம்பர் விளக்கம்: எண்ணற்ற உலகங்கள் அனைத்தையும் படைப்பதுவும், அவற்றைக்…

சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸும், விஜய் தொலைக்காட்சியின் அபத்த அவஸ்தையும் !

எம்.ரிஷான் ஷெரீப்அந்தக் குழந்தைக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். தொகுப்பாளினி அந்தக் குழந்தையின் கையைப்பிடித்துக் கொண்டு கொஞ்சநேரம் தானும் இன்னுமொரு குழந்தையாக அங்குமிங்கும் அலைந்தார். இறுதியில் அந்தக் குழந்தையை அருகே அமர்த்திப் பாடச் சொன்னார்.…

அறிவிப்புகள்

ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் தமிழ் படிப்போம் பகுதி 1 – 2 புத்தக வெளியீட்டு விழா

ஸ்ரீரஞ்சனி விஜேந்திராநூற்றாண்டு காணும் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரிக்கு சமர்ப்பணமாக ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் தமிழ் படிப்போம் பகுதி 1 ரூ 2 புத்தக வெளியீட்டு விழா இடம் : Scarborough Civic Centre, Council Chambers…

சமசுகிருதம் பற்றிய மறுமொழியில்,

வெண் தாடி வேந்தர்.சமசுகிருதம் பற்றிய மறுமொழியில், திரு துரைவேல் (திண்ணை - 4.9.2009) சொல்கிறார்: ”மற்றொன்று சம்ஸ்கிருதத்தை மற்ற சாதியினர் பயன்படுத்தவில்லை விரும்பவில்லை என எப்படி. சொல்லுகிறார்கள் என தெரியவில்லை. நான் தமிழுக்கு அடுத்தபடியாக…

சுப்ரபாரதிமணியனின் ” சாயத்திரை -: மலையாள மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு

சாயத்திரை சுப்ரபாரதிமணியனின் " சாயத்திரை "நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு நூல் " சாயம் புரண்ட திர "வெளியீட்டு விழா கோவை காந்திபுரத்தில் உள்ள மலையாளி சமாஜத்தில் ஓணம் பண்டிகை அன்று நடைபெற்றது. மலையாள கவிஞர்…

திண்ணை ஆசிரியர்களுக்கு வணக்கம்

கி.சார்லஸ்திண்ணை ஆசிரியர்களுக்கு வணக்கம். இதழில் புதிய படைப்பாளிகளின் கவிதைகள் அருமை.மற்றும் சிறுகதைகளின் தேர்வும் நன்று.படைப்புகளுக்கு புகைப்படம் இணைத்தால் நன்றாகயிருக்கும் என்பது என் கருத்து. அதுசரி...இரு வாரங்களாக இதழ் தாமதமாக வலையேற்றம் செய்யப்படுவது ஏனோ!! *கி.சார்லஸ்*…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பிரபஞ்சத்தின் துவக்கம் என்ன ? முடிவு என்ன ? (கட்டுரை: 64 பாகம் -1)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபிரபஞ்சம் ஒன்றில்லை ! பல்வேறு ! காலமற்ற பிரபஞ்சமே கருவாகி உருவாகி உள்ளது ! காலத்துக்குத் துவக்கம் இல்லை ! முறிந்த கருந்துளையால் பிறக்கும் சேய்ப் பிரபஞ்சம்…

இலக்கிய கட்டுரைகள்

சொல் ரசனை

பயணி ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் 'ரசனை' என்னும் தலைப்பிலான கூட்டத்தில் பேசிய உரையின் அடிப்படையிலான கட்டுரை - சொற்கள் ரசனை. இது என்ன புதிதாக இருக்கிறது? சில விஷயங்களை ரசிப்பது நேரடியானது, - கவிதை,…

90களின் கவனிக்கத்தக்க நாவல்கள்

கே.பாலமுருகன்அண்மையில் வாங்கி வாசித்துக் கொண்டிருக்கும்/ வாசித்துவிட்ட சில குறிப்பிடத்தக்க நாவல்கள் இவை. அநேகமாக மறுவாசிப்பின்றி கவனிக்கப்படாமல் போய்விட்ட நாவல்களாக இவை இருக்கலாம். மீட்டுணர்தல் – மறுவாசிப்பு புதிய களங்களை உற்பத்திக்கும். 1. மஞ்சள் வெளி…

“ஓ லாவே” மஹாத்மன் சிறுகதைகள் – தூக்கி வீசப்படுதலும் சூதாட்டம் என்கிற சிதைவின் நகர்வுகளும்

கே.பாலமுருகன் மஹாத்மன் சிறுகதைகள், வல்லினம் பதிப்பகத்தின் வெளியீடாக அன்மையில் வெளியீடு கண்டது. மறுவாசிப்பிற்கும் ஆழ்ந்த விமர்சனங்களுக்கும் விவாதத்திற்கும் உட்படுத்த வேண்டிய கதைகள் மஹாத்மனுடையது. முழு தொகுப்பையும் வாசித்து முடித்தபோது, புத்தகத்திலுள்ள 10 கதைகளையும் ஒரே…

வெங்கட்சாமிநாதனின் ‘இன்னும் சில ஆளுமைகள்’ – ஒரு பார்வை

வே.சபாநாயகம் சங்கீத உலகில் இசை விமர்சகர் சுப்புடுவுக்கு நிகரான பிரபல்யம், இலக்கிய உலகில் ஒருவருக்கு உண்டென்றால் அது இலக்கிய விமர்சகர் வெங்கட்சாமிநாதன் அவர்கள்தான். இருவரும் தங்களது தாட்சண்யமற்ற விமர்சனங்களால் பலரது அதிருப்தியையும் விரோதங்களையும் சம்பாதித்துக்…

மறுமலர்ச்சி உரைநடை முதல்வர் வ.ரா. என்ற வ.ராமசாமி

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எழுதிய இருபதாம் நூற்றாண்டின் தமிழ் மறுமலர்ச்சி உரைநடை முதல்வர்களில் ஒருவர் வ.ரா. என்ற வ.ராமசாமி அய்யங்கார் ஆவார். அனைவராலும்அன்புடன்…

கதைகள்

மயான பராமரிப்பாளர்

அ.முத்துலிங்கம்உலகத்தை சுற்றி வரவேண்டும் என்று அவன் திட்டமெல்லாம் போட்டது கிடையாது. தற்செயலாக அது அமைந்தது. அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கவேண்டுமென்று அவன் சொன்னதும் பயண முகவர்தான் அந்த புத்திமதியை வழங்கினார். அவர் ஓர் ஆப்பிரிக்கர். பார்த்தால் முட்டாள்போல…

விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு

இரா.முருகன்28 மே 1910 - சாதாரண வருஷம் வைகாசி 15 சனிக்கிழமை அடியே லலிதாம்பிகே. இந்தக் கடுதாசியின் ரெண்டாவது தாள் இது. நேற்றைக்கு எழுதின இதன் முதல் பக்கம் தொலைந்து போனது. வைப்பாட்டி வீட்டிற்குக்…

பழிக்குப் பழி

சூர்யா லட்சுமிநாராயணன்நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவித்த அந்த 3 கொடூரர்களுக்கு உலகின் மிகச் சிரமமான தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு அது முடியும் என்று தோன்றவில்லை. வெகு சிரமமான அந்தகாரியத்தில் கடந்த ஒரு மணி நேரமாக…

பழிக்குப் பழி – 2

சூர்யா லட்சுமிநாராயணன்2 நாள் கழித்து என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்வதற்காக பள்ளிக்கு வந்தேன். அங்கே துணைத் தலைமையாசிரியர், விடுமுறைக் கடிதம் கொடுக்காதவர்களை அடித்துக் கொண்டிருந்தார். அந்த நீண்ட வரிசையில் நானும் போய் நின்று…

திருநெவேலி மாமாவும் அல்வாவும்

கே ஆர் மணி மாமா பேசிக்கொண்டே வந்தார். திட்டிக்கொண்டே வந்தார் என்று சொல்வதே சரியான பொருள்தரும். வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. மும்பையிலும் வெயில்தான். ஆனாலும் ஏனோ இத்தனை காத்திரமாய் இருப்பதாய் படவில்லை. கையில் நாலுகிலோ திருநெவேலி…

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – இருபதாவது அத்தியாயம்

தமிழாக்கம் - ரா.கிரிதரன்.இது Alexander Solzhenitsyn எழுதிய One Day in the Life of Ivan Denisovich புத்தகத்தின் தமிழாக்கம். -- எவ்வளவு குளிர் இருந்த போதிலும் தொப்பியுடன் அவன் சாப்பிடுவதில்லை. அதை…

சிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது

நாகரத்தினம் கிருஷ்ணாகதிரேசனுக்கு எரிச்சல் வந்தது: - கெவின்! அய்ம் ·பெடப் வித் யூ. இட்'ஸ் என·ப் டுடே லெட்'ஸ் கோ..என்று எழுந்துகொண்டான். கதிரேசன் கெவினும் இனவிருத்தி விடுதியிலொன்றிலிருந்தார்கள். கதிரேசனுக்கு 35வயது, கெவின் என்கிற ஜூனியர்…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -11

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Socrates talking to State Guards "வாழ்வின் குறிக்கோள் முடிவில்…

சாம், நீ ஒரு விசித்திரமான பெண்

நடேசன்அறுபது கிலோ எடையுள்ள அந்த நாய் என்மீது பாய்ந்து நட்புடன் எனது கைகளை நக்கியது.எதற்கா இங்கே வந்து இருக்கிறேம். அல்லது என்ன நடக்கப்போகிறது என்பது அதற்கு புரியவில்லை. ‘எனது நாயின் விதையை அகற்றிய பு¢ன்…

பெட்டிக்குள் வயலின்

லூசா வாலென்சூலா (அர்ஜென்டினா) தமிழில்/எஸ். ஷங்கரநாராயணன்என்முன் கிண்ணத்தில வாதாங்கொட்டைகள். அவற்றை ஒண்ணொண்ணாக கை தன்¬ன்பபோல எண்ணுகிறது. மனம் எணணுகிறது, நல்லகாலங்களும் வ்நது போயிருக்கு... இல்லையா மக்களே? என் தோளில் நானே தட்டிக்கொடுத்துக் கொள்கிறேன், செல்லமாக!…

கவிதைகள்

ஊசி விற்பவன்

காயத்ரி மகாதேவன் நேராக சில வளைந்ததாக சில கூறாக சில தட்டையாக சில என இருபது ஊசிகள் ஐந்து ரூபாய் என்றான். இப்படி எத்தனையோ இருபதுகள் அவன் கைகளில். மழை பெய்யும் குடை சில்லறை…

தோழி

கு முனியசாமிஅந்தி நேரத்து மஞ்சள் வானம் ஐப்பசி மாசத்து சாரல் மேகம் ஆடியில் பெருகும் காவிரி வெள்ளம் மாசறு பெண்ணே நீயென் செல்லம்.... எங்கே இருந்தாய் இத்தனை நாளாய் எப்படி நுழைந்தாய் இதயத்தில் தானாய்…

மாற்றங்கள்

அதிரை தங்க செல்வராஜன்கல்லூரியின் கடைசி நாள் வண்ணத்து பூச்சிகளின் சிறகுகள் இரும்பாகி, இழுப்பதற்கு தயாராய் பஞ்சு மூட்டை பாரங்கள். கண்ணுக்கு கடிவாளம் இல்லை கூட்டத்தில் கரையப் போகிறோம். யார் இழுக்கவில்லை, சுமப்பதும் இழுப்பதும் சுகம்…

நோன்பு

யூசுப் ராவுத்தர் ரஜித்பொறாமையை பொறுமையாக்கும் நோன்பு வக்கி¢ரத்தை வாஞ்சையாக்கும் நோன்பு கோபங்களை சாந்தமாக்கும் நோன்பு தண்டிப்பை மன்னிப்பாக்கும் நோன்பு இகழ்ச்சிகளை புகழ்ச்சியாக்கும் நோன்பு கள்ளங்களை வெல்லமாக்கும் நோன்பு வசைகளை இசைகளாக்கும் நோன்பு பகைமையை நட்புகளாக்கும்…

தம சோமா.

கே ஆர் மணிஎப்படியோ நுழைந்துவிடுகிறது அது. ஓவ்வொரு முறையும் ஓவ்வொரு வழியாய். வெட்டப்படாத நகமாய், அழிக்கப்படாத மின்னஞ்சலாய் மறதிகள் பழக்கமாய் யோசித்து திரும்பி வரும் ஞாபகத்திருப்பிகள் தேய்ந்து போய் திரும்பி பதில்தர வேண்டிய வேலைகள்…

அமைதி

முத்துசாமி பழனியப்பன் சீரான இடைவெளிகளில் கேட்டுக் கொண்டிருந்தது என் வீட்டுக் கடிகாரச் சத்தமும் பக்கத்து வீட்டுக் குறட்டைச் சத்தமும் எதிர் வீட்டுக் குழந்தை அழுகையும் தெருவில் நாயின் ஊளையும் இருந்தும் - அமைதியாக இருந்தது…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 52 << என் நேசம் >>

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநேசம் ! விதையி லிருந்து விதைக்கு செடியி லிருந்து செடிக்கு இருண்ட தேசங்கள் பின்வழிப் புகுந்த புயற் காற்றின் மீதும் ரத்தக்…

சிதைந்த நாட்களோடு ஓய்தல்

எம்.ரிஷான் ஷெரீப் எல்லாமாயும் ஓய்ந்துபோயிற்று காலத்தின் நோய்ச் சக்கரம் கரும்புகைகளில் சிக்குண்ட வாழ்வினை மீட்டாயிற்று சாத்தான் கரும்புள்ளிகளிட்டுக் கனத்த இதயத்தோடு சேர்த்து வாழ்வினையும் கழுவி தூய்மைப்படுத்தியுமாயிற்று நீ அதிரவிட்ட குரூர வார்த்தைகளின் பெருமதிர்வு சுழன்று…

தேவதைக்குஞ்சே…

கவிஞர் மா.சித்திவினாயகம்தேவதைக்குஞ்சே..... மூக்கும் முழியுமாய் தமிழ்மொழி பேசும் அழகுச் சிட்டே !!! இன்னமும்... நீ ஏன் இங்கு வந்து பிறந்து தொலைத்தாய்... கன்னங்குழி விழ தத்தி நடந்து மழலை பேசிடும்- உன்னைச் சிதறடிக்கப்போகிறது இந்த…

தெளிவுறவே அறிந்திடுதல்

’ரிஷி’ மொழியால் கட்டமைக்கப்பட்ட ஆய்வுக்கூடத்தில் மக்களுக்காக, மக்களின் பெயரால் அயராமல் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன பரிசோதனைகள். பன்றியாய் அறுக்கப்படுபவர்கள், ’மனிதர்களல்ல’ என்று அறிவிக்கப்பட்டு புழக்கடையில் வீசியெறியப்படுகிறார்கள். நுரைத்துக் கொதித்துக் கொண்டிருக்கும் அமிலக் கரைசலில் இடப்படுவதற்கு முன் நீட்டப்படும்…

நகைச்சுவை

பயணம்

கலா "கண்டக்டர் சார். இந்த பஸ் எந்த ஊருக்குப் போகுது?" "அது பதினெட்டுப் பட்டிக்குப் (தமிழ் சினிமா உபயம்?) போவுது. அதையெல்லாம் உன்கிட்டச் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. நீ போக வேண்டிய ஊரைச் சொல்லிக்…