திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050318_Issue

அரசியலும் சமூகமும்

கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும் : பயங்கரவாதம் விரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்! (தொடர்:3)

ப.வி.ஸ்ரீரங்கன் ' மூலதனத்தின் கருப்பையில் சமாதனம் கருக்கொள்வதென்பது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிடுவதாகும். ' அமெரிக்காவை ஏன் பயங்கரவாத நாடென்கிறோமென்றால் அது வரலாறுபூராகவும் யுத்தங்கள்மூலமாகவே தன் வருமானத்தையேற்படுத்தியதாலவா ? மூலதனத் திரட்சியின் அதிகூடியவேட்கையின் வாயிலாக…

திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதைப் போட்டி முடிவுகள்

அறிவிப்பு திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதைப் போட்டி முடிவுகள் இவை. நடுவர் சுஜாதா தீர்ப்பின் படி என் சொக்கனின் கதை திருத்திய வடிவில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. திருத்தத்திற்கான அனுமதி ஆசிரியரிடம் பெறப்பட்டுவிட்டது. முதல்…

தென்னகத்தில் இனக்கலப்பா ?

தி. அன்பழகன் இந்திய மேல்சாதியினர் எனக் கூறிக் கொள்ளும் ஆரியப் பார்ப்பனர்களின் டி-என்-ஏ க்களை ஆய்வு செய்ததில் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்களால் தான் அந்த டி- என்-ஏ க்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன எனும் உண்மையைப் பேராசிரியர்…

சீனா – துயிலெழுந்த டிராகன்

நரேந்திரன் எங்கு நோக்கினும் சீனாதான் இன்றைய தேதிக்கு. Made in China என்ற வார்த்தை உலகம் முழுவதும் காற்றைப் போல வியாபித்துக் கிடக்கிறது. தினசரி செய்தியில், தொலைக்காட்சியில், நீங்கள் வேலை செய்யும் இடத்தில், ஏதேனும்…

சிந்திக்க ஒரு நொடி- அரசியலும் சராசரி மனிதனும்

வாஸந்தி இன்றைய சூழலில் அரசியல் தாக்கமில்லாத வாழ்வை ஒரு தனி நபரும் வாழமுடியாது. 'The Personal is political ' 1960 களின் பெண்ணிய கோஷம். ஒவ்வொரு முறையும் ஒரு மனிதன் ஒரு லட்சியத்துக்காக…

பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகை

ஆசாரகீனன் நியூயார்க் நகரில் முனைவர் அமினா வதூத் தலைமையில் இஸ்லாமியத் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது பற்றியும், அதை நியூயார்க் நகர மசூதிகள் எதிலும் நடத்த முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டதால், மன்ஹாடன் பகுதியிலுள்ள சுந்தரம்…

பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகை

ஆசாரகீனன் நியூயார்க் நகரில் முனைவர் அமினா வதூத் தலைமையில் இஸ்லாமியத் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது பற்றியும், அதை நியூயார்க் நகர மசூதிகள் எதிலும் நடத்த முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டதால், மன்ஹாடன் பகுதியிலுள்ள சுந்தரம்…

அறிவிப்புகள்

‘பதிவுகள் ‘/ ‘தமிழர் மத்தியில் ‘ ஆதரவுச் சிறுகதைபோட்டி முடிவுகள் 2004!

அறிவிப்பு முதற் பரிசு (200 கனேடிய டாலர்கள்): 'எல்லாம் இழந்த பின்னும்.. ' எழுதியவர்: சாந்தினி வரதராஜன் (ஜேர்மனி) மின்னஞ்சல்: svaratharajah@hotmail.com இரண்டாம் பரிசு (100 கனேடிய டாலர்கள்): 'நான், நீங்கள் மற்றும் சதாம்…

மூன்றாவது மொழிப்போரும் கீறல் விழுந்த கிலுகிலுப்பைகளும்

குட்டுவன் தமிழகத்தின் ஞானக் கோணிகள் எழுத்துக்களால் இன்று நிறைந்து கொண்டிருக்கின்றன. பலவற்றை எழுதி எதையும் சாதிக்க இயலாதவர்கள் எல்லோரும் தமிழகத்திலே தற்போது இராமதாசு மற்றும் திருமாவளவன் பக்கம் திரும்பி கரித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு…

‘சோ ‘ எனும் சந்தனம்

வரதன் ---- வணக்கம். சோவைப் பற்றிய சிலரின் அரிப்பு நிறைந்த துவேஷங்களையும், பதிலாக சிலரின் அவரைப்பற்றிய உயர்வு எண்ணங்களையும் படிக்க நேர்ந்தது. தமிழக மக்களின் வாழ்வின் சோவால் ஏற்பட்ட பாதிப்புகளையும் , நல் செயல்பாடுகளையும்…

ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் பரிசு

பொ.கருணாகரமூர்த்தி சென்ற ஆண்டில் ஞானபீடப்பரிசு பற்றிய கதையாடல் வந்தபோது ஒரு இணையப்பத்திரிகையின் ஆசிரியர் ஞானபீடப்பரிசுக்கு யார் மிகப் பொருத்தமான தமிழ் எழுத்தாளராக இருப்பார் என நீங்கள் கருதுகிறீர்கள் ? என தமிழ் எழுத்தாளர்கள் (தாய்நில/…

கருமையம் அமைப்பின் நாடக விமர்சனக்கூட்டம்

அறிவிப்பு கருமையம் அமைப்பின் நாடக விமர்சனக்கூட்டம் கனடாவில் கருமையம் அமைப்பினால் மார்ச் மாதம் 19ம் 20ம் திகதிகளில் நடந்தேறிய நாடகங்களுக்கான விமர்சனக்கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை 26ம் திகதி மாலை 5 மணியளவில் Scarborough Civic…

நீங்கள் தொலைவிலிருந்தபோதும் உங்கள் அருகிலிருக்கும் இணையப் புத்தகக் கடை

அறிவிப்பு AnyIndian.com குறிப்பிட்ட காலச் சலுகையாக - தமிழ்நாட்டுக்குள்ளிருக்கும் எந்த முகவரிக்கும் புத்தகங்களுக்கான அனுப்பும் செலவை நாங்கள் ஏற்கிறோம். இதன் மூலம் புத்தகத்துக்கான விலையை மட்டும் செலுத்தி, தமிழ்நாட்டின் எந்தச் சிற்றூரிலிருந்தும் இன்டர்நெட் வழியாகப்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ராமானுஜனின் இன்னொரு கணக்கு புரிந்தது

வெங்கட்ரமணன் முப்பத்திரண்டே வருடங்கள் வாழ்ந்து ஸ்ரீனிவாஸ ராமனுஜம் மரித்துப்போய் எண்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் அவருடைய கணிதப் புதிர்களில் பல முதல்தர கணிதவியலாளர்கள் மூழ்கியிருக்கிறார்கள். நிரூபணங்கள் இல்லாமல் ராமானுஜனால் தரப்பட்ட பல தேற்றங்களுக்கு அவ்வப்பொழுது…

யுக யுகங்களாய்ப் பெயர்ந்த கண்டங்கள். மறைந்த விலங்கினங்கள். கண்டங்களை நகர்த்தும் அட்லாண்டிக் கடற்தட்டு. குறுகிச் சுருங்கும் பசிபி

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா காலக் குயவன் ஆழி சுழற்றி ஓட்டி விட்ட காலக் கடிகாரம் ஓயாமல், உறங்காமல் ஒரே கதியில், ஒற்றைத் திசை நோக்கி, நிற்காமல், நிலை மாறாமல், பிசகு…

நூலறிமுகம்! – ‘மிஷியோ ஹகு ‘வின் ‘ஹைபர் ஸ்பேஸ் ‘!

வ.ந.கிரிதரன் நாம் வாழும் இந்த உலகம், வான், மதி, சுடர், இவற்றையெல்லாம் உள்ளடக்கிய நமது பிரபஞ்சம் இவை யாவுமே எப்பொழுதும் எந்நெஞ்சில் பெரும் பிரமிப்பினையும், பல்வேறு வகைப்பட்ட வினாக்களையும் ஏற்படுத்தி விடுவது வழக்கம். முப்பரிமாண…

இலக்கிய கட்டுரைகள்

யாழன் ஆதி கவிதைகள் – கண்ணீரும் தனிமையும்

நாகூர் ரூமி செவிப்பறை. கவிதைகள். யாழன் ஆதி. புத்தா வெளியீட்டகம். கோயம்புத்தூர். முதல் பதிப்பு, டிச.2004. விலை ரூ 30/- என் சொற்களில் தேடாதீர்கள் போதை தரும் எதையும் (மிச்சம்) இதுதான் இந்த தொகுதியிலுள்ள…

நி ழ ல ற் ற வ னி ன் அ ல ற ல்

சுகுமாரன் @ திருவனந்தபுரம் பத்திரிகையாளர் சங்க அரங்கில் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி. நிகழ்ச்சியின் இன்றியமையாத நிரல்போல இலக்கிய நண்பர்கள் அரங்குக்கு வெளியில் நின்று உரையாடிக் கொண்டிருந்தார்கள். கால்கள் காற்றில் மிதக்க கைகளால் அந்தரத்தில்…

கவிமாலை (26/02/2005)

பனசை நடராஜன் மாதந்தோறும் இறுதி சனிக்கிழமையன்று நடைபெறும் ‘கடற்கரைச்சாலை கவிமாலை’ நிகழ்ச்சி இம்மாதமும் ‘கம்போங் கிளாம்’ சமூக நிலையத்தில் பிப்ரவரி 26 அன்று நடைபெற்றது. தொடக்கவுரை ஆற்றிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திரு.பிச்சினிக்காடு இளங்கோ, கவிமாலைக்கு…

செல்வம் அருளானந்தம் எழுதிய எள்ளிருக்கும் இடமின்றி ஒரு கனதி வாய்ந்த கதை (திண்ணை, 2005-03-10)

மணி வேலுப்பிள்ளை ____ ஆம்! அது மிகவும் கனதி வாய்ந்த கதை என்று அடித்துக் கூறலாம். கதை முற்றிலும் உரையாடலில் அமைவதால், அதன் பேச்சு வழக்கு பச்சையாய் இருப்பது நியாயமே. 'மொழியை அலங்காரமாகப் பயன்படுத்தக்…

ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம் ‘

சுமதி ரூபன் தீர்மானிக்கப்பட்ட நிராகரிப்பினால் வாசித்தல் இன்றியே சில இலக்கியவாதிகளின் படைப்புகள் கடுமையான விமர்சனத்திற்குள்ளாவது வழக்கம். படைப்புத் தெரிதல் என்பது படைப்பாளியின் தனிப்பட்ட குணாதிசயங்களைத் தாண்டிது. அந்த வகையில் இப்படியான “றீசனபிள் டவுட்” ஐத்…

கார்ல் பாப்பரின் வெங்காயம்-3

சோதிப் பிரகாசம் மாக்ஸ் முல்லர் மாக்ஸ் முல்லரின் முடிவுகளில் சில மாறுபாடுகள் எனக்கு உண்டு என்ற போதிலும், அவரது அறிவாண்மைத் திறமையிலும் நேர்மையிலும் எனக்கு மாறுபாடு எதுவும் இல்லை. இதற்கு ஓர் எடுத்துக் காட்டாக,…

ஒடுக்கப்பட்ட நுண்தரப்புகளிலிருந்து விடுதலை சாத்தியமா ?

சங்கரராம சுப்ரமணியன் (வெளி ரங்கராஜனின் 'இடிபாடுகளுக்கிடையில் ' நூல் விமர்சனக் கூட்டத்தில் கவிஞர் சங்கர ராமசுப்ரமணியன் வாசித்த கட்டுரை .) நான் இங்கே நினைவு கூறும் நிகழ்ச்சி நடந்து ஏழு வருடங்களாகி விட்டது. திருநெல்வேலி…

வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும் – முன்னுரை

எஸ். இராமச்சந்திரன் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு என்பது மானிடவியல், சமூகவியலாளர்களின் ஏகபோகம் என்ற நிலை மாறிவருகிறது. அண்மைக் காலங்களில் தொல்லியல் - கல்வெட்டியல் ஆய்வாளர்கள், தாங்கள் கள ஆய்வில் கண்டறிந்த தரவுகளைச் சமூக…

நி ழ ல ற் ற வ னி ன் அ ல ற ல்

சுகுமாரன் ---- திருவனந்தபுரம் பத்திரிகையாளர் சங்க அரங்கில் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி. நிகழ்ச்சியின் இன்றியமையாத நிரல்போல இலக்கிய நண்பர்கள் அரங்குக்கு வெளியில் நின்று உரையாடிக் கொண்டிருந்தார்கள். கால்கள் காற்றில் மிதக்க கைகளால் அந்தரத்தில்…

நிதி சால சுகமா ? மம்மத பந்தனயுத நர ஸ்துதி சுகமா ?

வெங்கட் சாமிநாதன் 'நிதி சால சுகமா, ராமு நி சந்நிதி சேவ சுகமா ' என்று ஒரு சந்தர்ப்பத்தில், தன் மனதையே கேட்டுக் கொள்கிறார் தியாக பிரம்மம். மமதையில் திளைப்பவர்களை நரஸ்துதி செய்வது சுகமா…

கதைகள்

மனக்கோலம்

எஸ் என் நடேசன் பஸ் வந்து சேர்ந்த போது உச்சி வெயில் அடித்தது. நாங்கள் இருவரும் மட்டும் தான் பிரயாணிகள். தங்களது வேலை செய்து முடித்த திருப்தியுடன் டிரைவரும் கண்டக்டரும் பஸ்ஸை விட்டிறங்கி பெயர்…

து ை ண – 7 ( குறுநாவல்)

ம ந ராமசாமி ---- திருமணத்துக்கான ஏற்பாடுகள் இரு பக்கமும் நடந்து கொண்டிருக்கும்போது, ஒருநாள் ராமகிருஷ்ணன் பகல் பதினோரு மணி சுமாருக்கு திடுதிப்பென்று என்முன்னே வந்து நின்றான். எனது ஓய்வூதியம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிக்குக்…

அறிவியல் கதை – தக்காளித் தோட்டம் (மூலம் : சார்லஸ் டெக்ஸ்டர் வார்ட்)

தமிழில் : ராமன் ராஜா தக்காளிச் செடிகளுக்கு வைட்டமின் மருந்து ஸ்ப்ரே அடிப்பது ஒரு இன்பமான அனுபவம் : தூரத்து வயல்களுக்கு அப்பால் மாலைச் சூரியன் தகடு மாதிரி மண்ணுக்குள் இறங்கிக் கொண்டிருக்கையில் நான்…

ஒத்தை…

பத்ரிநாத் பெரும் மள வர்ற மாதிரியும் இருக்கு, வராத மாதிரியும் இருக்கு.. இப்படியே போக்குக் காட்டிக்கிட்டு இருக்கு.. மொகச் சவரம் பண்ண கடைக்குப் போவணும்.. போவ முடியுமா.. முடியாதான்னு தெரியல.. நாளைக்கி செவ்வாகிளம.. முடியாது..…

கதவு திறந்தது

இதயா மூன்று நாட்களாய் இடைவிடாது மழை பெய்துகொண்டிருக்கிறது. ராகவனின் மனதுக்குள்ளும் தான். மஞ்சு இந்த மூன்று நாட்களாய் அறுபட்ட நாணாய் கிடக்கிறாள். உடல் மெலிந்து, வலுவிழந்து, தேற்ற முடியாத தேவதையாய் கிடக்கிறாள். அழுது அழுது…

தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) – காட்சி நான்கு – அயோத்திய புரியில் ஆரம்பித்த அசுவமேத யாகம்

சி. ஜெயபாரதன் இடம்: அயோத்திய புரி அரண்மணை நேரம்: மாலை பங்கு கொள்வோர்: இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், மகரிஷி வசிஸ்டர், விசுவாமித்திரர், மன்னர்கள், பத்து அல்லது பன்னிரெண்டு வயதுப் பாலகர்கள்: லவா, குசா.…

பச்சைக்கொலை

அம்ாிதா ஏயெம் அந்த நீலக் கடலில் திட்டு திட்டாக எங்கும் வெண்மை பரவிக் கிடந்தது. அது நுரையாக இருக்க வேண்டும். ஆனால் வழமையாக நீலச் சேலைக்கு வெள்ளைக் கரை மாதிாி கடலின் கரைகளில் தான்…

இந்தியப் பெருங்கடல்

மாண்ட்ரீஸர் எரிச்சலூட்டும் வெயில், சிலைகளின் தலையைப் பிளந்துகொண்டிருந்தது. சுபா மெளனமாக நடந்துகொண்டிருந்தாள். அவளது கையிலிருந்த கறுப்புநிற ப்ராதா கைப்பைக்குள் என் அறுக்கப்பட்ட தலை இருந்தது. தலை அறுபட்டுவிட்டதால், எப்போது அறுத்தாளென்ற சரியான நேரம் தெரியவில்லை,…

வண்ணத்துப்பூச்சியுடன் வாழ முற்படுதல்

பொ கருணாகர மூர்த்தி (1) இதுவும் ஒரு வசந்தகாலம். இரவு நேரம் பதினொன்றை அணுகிக்கொண்டிருக்கிறது. சித்தார்த்தனுக்கு அதிகாலை நாலு மணிக்கு வேலத்தளத்தில் அட்டென்டன்ஸ் காட் பஞ்ச் பண்ணியாகவேண்டும். இணையத்தில் ஏதாவது பார்த்துவிட்டோ கிறுக்கிவிட்டோ படுக்கைக்குப்…

மாங்கல்யச் ‘சரடு ‘கள்

எஸ்.ஷங்கரநாராயணன் ---- பெரியசாமி பேரில்தான் சாமி. பேரில்தான் பெருசு. விஷயம் ஒண்ணும் சொல்லுந் தரமில்லை. எப்பப் பேசினாலும் பத்து வார்த்தைக்கு மேல் என்ன பேச என்று குழப்படியாயிப் போகும். இதுவரை பேசியவரை சரியான்னு ஒரு…

கவிதைகள்

பாவம்

ப்ரியன் **** வீடெங்கும் உறவினர்கள் வீதியெங்கும் நண்பர்கள் பெண்கள் தொடர்களைத் தொடர முடியாமல் போனக் கவலையில் அழுதுவைக்க! ஆண்கள் ஆவேசமாய் அரசியல் பேச! சிரித்துக்கொண்டே கையசைத்து மேல் நோக்கி புறப்படுகிறேன்! அதிசயம் தேவதூதன் சொர்க்க…

கவிதை

வா.மணிகண்டன் காற்று- நெஞ்சுக்குழியின் ஆழத்தில் பட்டுவிடாமல் பேரிரைச்சலுடன் வெளியேறிக்கொண்டிருக்கிறது. வியர்வை துளிகளாக ஒட்ட ஆரம்பிக்கின்றன. பெருவெளியில் தனித்துவிடப்பட்ட இலையென அலையும் கண்கள். இன்னும் இரைச்சல். இன்னும்.. ன்னும்... ம்.. ஒரு மிடறு பால் அல்லது…

அவரால்…

நெப்போலியன் கல்லறைக்கதவு திறக்கப்பட்டிருந்தது. பிரேதம் கட்டப்பட்டிருந்த துணிச்சீலைகள் மட்டுமிருந்தன. அவரைக் காணாத அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார்கள். சீடர்களைத் தரிசிப்பதற்காய் சென்றிருக்கலாம் அவர். தழும்புகளின் உறுதிப்படுத்துதலுக்காய் நடந்தேறிய காரியமெனலாம். இன்னும் சிறிது நேரத்தில் அவர் பரலோகமேறுவதை…

கூ ற ா த து கூ ற ல் – கவிதைப் பம்பரம்

எஸ். ஷங்கரநாராயணன் --- தீபாவளி சிறப்பிதழில் முன் அறிமுகம் செய்துவைத்த /ஆனந்த விகடனுக்கு/ நன்றி --- பாலம் கட்டினால் மனிதன் இறங்கிக் குளித்தால் கவிஞன் பொழிகிறது மழை குடை மடக்கி வீடுதிரும்பும் காகம் பாலுக்கு…

கீதாஞ்சலி (16) – குழந்தைக்குப் போடும் கால்கட்டு! (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா சிறுவனை இளவரசனைப் போல் ஆடையில் சிங்காரித்து தங்கச் சங்கிலி கழுத்தில் அணிவித்து வெளியில் விளையாட விட்டால் களிப்பு விளையாமல் போகும்! ஒவ்வொரு படியில் ஏறும் போதும் தடையாய் நிறுத்தும்,…

பெரிய புராணம் – 33 – 19. அரிவாட்டாய நாயனார் புராணம்

பா.சத்தியமோகன் 903. வரும் புனல் காவிரி நாட்டில் வாழும் ஒரு இடம் சுரும்புகள் வண்டுகளுடன் சூழ்ந்து ஒலிக்க விரும்பப்படும் மென் கணுக்கள் கொண்டு வாய்விட்டு நீளும் கரும்புகள் தேன் பொழியும் ஊர் கணமங்கலம். 904.…

விரல்கள்

பவளமணி பிரகாசம் கோலங்கள் போடும் தளிர் விரல்கள் அசப்பில் இளம்பிஞ்சு வெண்டைக்காய்கள் அவை செய்யும் பல அதிசய வேலைகள் சரஞ்சரமாய் நாரில் பூத்தொடுக்கும் வண்ண வண்ணமாய் நூலில் பின்னலிடும் வீணையின் தந்தியோடு மனதை மீட்டும்…

கபீர் நெய்துகொண்டிருக்கிறார்…

சுகுமாரன் @ மனம் - தறி வாக்கு - இழை பூமிக்கான ஆடையை நெய்துகொண்டிருக்கிறார் கபீர் நெய்யும் துணியின் மறுமுனை எங்கே முடிகிறது ? நதிபோல் கடலிலா ? வானம்போல் வெளியிலா ? சொல்கிறார்…

மழை நனைகிறது….

பட்டுக்கோட்டை தமிழ்மதி காயும் துணிகள் நனைகின்றன கை வந்தெடுக்க வரவில்லை. சாரலும் தூறலும் நுழைகின்றன சாளரம் சார்த்த முகம் எட்டிப் பார்க்கவில்லை. துளிகள் துள்ளிக் குதிக்கின்றன துள்ளும் உன் வீட்டு பிள்ளைகள் வெளிநின்று ஓடவில்லை.…

எச்ச மிகுதிகள்

ஸ்ரீ மங்கை என்றும்போலவே அன்றும், கடமைக் கனலில் கனன்று சிவந்தபடி மாலைக் கங்கில் எரிந்ததைத் தேடியலுத்து இருளில் புகைகிறேன். வினையெச்சத்துடன் பெயரும் பிற எச்சங்களும் கூட்டி நாளை விரிக்க சுருட்டிப்பந்தாக்கி மிடறு விழுங்கித் திணறுகிறேன்..…

நகைச்சுவை

கல்லூரிக் காலம்!

பாலா கீழுள்ளது, GCT கல்லூரி (விடுதியில்) வாழ்க்கையின் முடிவில் நான் எழுதிய ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கம்! முதலாண்டு (சின்னப் பசங்க!) என்ன ஒரு மாற்றம், பள்ளியிலிருந்து கல்லூரிக்கு, அவசியமாய் இருந்தது மிக்க மன உறுதி!…