திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020127_Issue

அரசியலும் சமூகமும்

புதிய சமுதாயமும் இளைஞர்களும்

பவளமணி பிரகாசம் கடந்த காலத்தை, நடந்த சம்பவங்களை உள்ளது உள்ளபடி உரைப்பது சாித்திரம். அதில் கற்பனை சாயமேற்றி, சொந்த விருப்பு, வெறுப்பின் சாயலை கலந்து படைத்தால் அது கதை, கவிதை, காவியம். இன்று அதிகார…

இந்த வாரம் இப்படி – ஜனவரி 27, 2002 (புத்தக விழா, ஆண்டிப்பட்டி, அக்னி, மனோரமா)

மஞ்சுளா நவநீதன் புத்தக விழா - கண்காட்சியும் கண்கொள்ளாக் காட்சியும் சென்னையில் புத்தக விழா என்பதே ஒரு பெரும் மகிழ்ச்சியான விஷயம். கூட்டம் பார்க்கக் கூட்டம் சேரும் விழாவாக ஒரு பத்து சதவீதம் இருந்தாலும்,…

‘நந்தன் வழி ‘ பத்திரிக்கையில் வந்த கண்ணகி கட்டுரைக்கு பதில்

ஞாநி குறிப்பு: கண்ணகி சிலை விவகாரம் தொடர்பான என் கட்டுரையை திண்ணையில் வெளியிட்டிருந்தீர்கள். அதே கட்டுரை சற்ரே சுருக்கப்பட்டு, ஜூனியர் விகடன் இதழிலும் வெளியிடப்பட்டது. அதைக் கண்டித்து 'நந்தன் வழி ' இதழில் அதன்…

தலைவர்களே படிக்காதீர்கள் .. பேசுங்கள்

கிரண் பேடி சில வாரங்களுக்கு முன்னர் நான் கொல்கத்தாவில் இருந்தேன். நிகழ்ச்சி ஒரு விவாதப்போட்டி. இது பிராந்திய விவாதப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தேசிய அளவில் போட்டியிட அமைக்கப்பட்ட நிகழ்ச்சி. நான் இந்த விவாதப்போட்டியில்…

முதலமைச்சர் போன்ற பதவிகளுக்கு தேவையான பதவிக்கால வரையறை (term limits)

சின்னக் கருப்பன் இந்தியாவில் பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டசபை உறுப்பினர், முதலமைச்சர் ஆகிய பதவிகள் ஒருவர் இத்தனை வருடங்கள் தான் இருக்க முடியும் என்ற வரையறை வேண்டும். அமெரிக்காவில் ஒரு நபர் ஜனாதிபதியாக இரண்டு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

புகை அடர்ந்த வட இந்திய மாநிலங்கள்

நாஸா என்ற அமெரிக்க விண்வெளி நிறுவனத்தின் துணைக்கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட ஒளிப்படத்தில் புகை அடர்ந்த வட இந்திய மாநிலங்களைப் பார்க்கிறீர்கள். வட இந்தியாவில் ஏரோஸோல் என்னும் புகை இமாலயத்தின் தெற்கு முனையிலிருந்து அடர்ந்து உத்தரபிரதேசம்,…

குஜராத்தின் ‘பூகம்பம் தாங்கும் வீடு ‘

சென்ற வருடம் குஜராத்தில் தாக்கிய படுமோசமான பூகம்பத்தால் தூண்டப்பட்டு, ஒரு இந்திய பொறியியலாளர் குழு புதிய வீட்டை வடிவமைத்திருக்கிறது. இந்த வீடு எந்த பூகம்பத்தையும் தாங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த வீடுகள் மாநிலமெங்கும்,…

ஆந்த்ராக்ஸ் விஷத்தின் ஆதாரக்காரணம்

ஆந்த்ராக்ஸ் பாக்டாரியாவில் இருக்கும் மூன்று புரோட்டான்கள் அதனை படுபயங்கரவிஷமாக ஆக்குகின்றன அறிவியலாளர்கள் இந்த ஆந்த்ராக்ஸ் பாதிப்பின் தீய விளைவுகளை தடுக்க புது வழிகளை கண்டறியத் தேவையான் விஷயங்களை அறிந்துள்ளார்கள். இந்த ஆந்த்ராக்ஸ் பாக்டாரியம் மனித…

சாக்கடையில் போகும் ஒளிநாறு தொழில்நுட்பம் (Broadband)

லண்டனின் சாக்கடைகள் வெகு சீக்கிரமே வர்த்தக நிறுவனங்களுக்கிடையே அதி வேக இணையத் தொடர்புக்காக உபயோகப்படுத்தப்பட இருக்கின்றன. டயல் செய்து கிடைக்கும் இணையத்தொடர்பு வேகத்தைவிட 10 மடங்கு அதிகமாக இருக்கும் பிடி நிறுவனத்தின் செம்பு கம்பி…

மின் அஞ்சல்

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி மின் அஞ்சல் தோன்றி 2001 ஆம் ஆண்டோடு முப்பது வயது முடிகிறது; அமெரிக்கப் பொறியாளர் ரே டோம்லின்சன் (Ray Tomlinson) 1971 ஆம்…

கணித மேதை ராமானுஜன்

சி. ஜெயபாரதன், கனடா சுமார் 85 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டைச் சேர்ந்த, ஒர் இந்தியக் கணித ஞானி, பை[p] குறியின் மதிப்பைத் துள்ளியமாய்க் கணக்கிட, நூதன முறையில் பல வழிகளை வகுத்தார். அவர்தான்…

இலக்கிய கட்டுரைகள்

கலாச்சாரம் பற்றிய மாலன் கேள்விகளுக்குப் பதில்

ஜெயமோகன் அன்புள்ள மாலன், தங்கள் கேள்விகள் என்னை பெரிதும் யோசிக்கத் தூண்டின.அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.பொதுவாக அருவமான கருத்தாக்கங்கள் குறித்து நாம் சகஜமாக பேசுவதுண்டு,அது புரிந்துகொள்ளப் படுவதுமுண்டு .ஆனால் ஒருபொதும் அவற்றை நாம் தெள்ளத்…

இலங்கைத் தமிழ்ப் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் கனடாவில் வெளியீட்டு விழா

என்.கே மகாலிங்கம், ரொறொன்ரோ ஜனவாி 19ம் தேதி சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு ஸ்காபரோ சிவிக் மைய மண்டபத்தில் Lutesong and Lament என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டது. இந்த தொகுப்பில் பல்வேறுபட்ட…

பிறவழிப் பாதைகள்

கோபால் ராஜாராம் விஷ்ணுபுரம் பற்றி விஷ்ணுபுரம் - திண்ணையின் பக்கங்களிலும் வேறு வேறு ஏடுகளிலும் மிகவும் விவாதத்திற்காளாவதைக் காண்கிறேன். இது மிக மகிழ்ச்சிகரமான விஷயம். எண்ணூற்றிச் சொச்சம் பக்கங்கள் உள்ள ஒரு நாவல் படிக்கப்…

கதைகள்

மனைவி!

வ.ந.கிாிதரன் 1. இரவு மணி பதினொன்றினை நெருங்கிக் கொண்டிருந்தது. யன்னலினூடி கட்டட முனிகள் தவமியற்றிக் கொண்டிருப்பது தொிந்தது. ஓட்டியற்ற ஓடமாகப் பிறை நிலவு. பலகணியில் அடைந்திருந்த புறாக்கள் சில அசைந்தன. அடுத்த அப்பார்ட்மென்ட்லிருந்த இதுவரை…

தெரியாமலே

கந்தர்வன் இந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த அன்று திருதிருவென்று சுற்றுமுற்றும் கவனித்ததில் பலதும் கண்ணில் பட்டன. அதில் முக்கியமானது எல்லோரும் சில குறிப்பிட்ட நேரங்களில் தேநீர் அருந்தப் போய் வந்தார்கள் என்பது. அடுத்த சில…

கலைகள்

இத்தாலிய கொண்டைக்கடலை சூப்

தேவையான பொருட்கள் ஸேஜ் இலைகள் (அல்லது புதினா இலைகள்) 6 பார்ஸ்லி இலைகள் (அல்லது கொத்தமல்லி தழை) தூள் ஒரு கோப்பை ஒரு கோப்பை வேகவைத்த கொண்டைக்கடலை பூண்டு நாலைந்து பற்கள் செமோலினா பாஸ்டா…

கார தேன் கோழிக்கால்கள்

தேவையான பொருட்கள் கால் கோப்பை தேன் கால் கோப்பை ஸோய் ஸாஸ் கால் கோப்பை சில்லி ஸாஸ் அரை தேக்கரண்டி காரமிளகாய் சாஸ் கால் தேக்கரண்டி இஞ்சி கால் தேக்கரண்டி காய்ந்த கடுகுத்தூள் 12…

கவிதைகள்

அன்பு என்ற அமுதம்

கோமதி கிருஷ்ணன் அன்பை அறிய அறிவு வேண்டாம்,பாசத்தைஉணர படிப்பும் வேண்டாம், அன்பும் பண்பும் பாசத்தை அறியும் க்ண் நோக்கே போதும் நேசத்தை காட்ட, பச்சை குழவியும் அறியும் பாசத்தை,அது அறிவாலல்ல,உண்ர்வால்த்தான். அன்பிருக்கும் உள்ளம் நிறைய[[ஆனாலும்]அதை…

கேள்வி

முத்துக்குமார் பொன்னம்பலம் கூர்கொம்பு நீள்தலையை மருளவைக்க மிகவுலுக்கி வால்சுழற்றி சுள்ளென்று அயர்ந்திடாது விரட்டியும் எருமையின் கொம்பமர்ந்த மருளாத சிறுகுருவி அண்டையில் நான்செல்ல பதறிச் சிறகடித்து நெஞ்சுக்குள் கேள்வியிட்டு சட்டென்று பறந்துபோச்சு. புவியதிர மண்சிதற புகையாய்…

துயரம்

ரஞ்சித் ஜோஸப் வாழத்தான் ஆசை வாழ்க்கை கனவுகளிலாவது எனில் தூக்கமில்லா இரவுகள்

அது அந்தக் காலம்….

சேவியர். வளர்ச்சியின் விகிதம் இப்போதெல்லாம் என்னை இனம்புரியா மனநிலைக்குள் இழுத்துச் செல்கிறது. 'அப்படின்னா என்னம்மா ? ' என்று, பதின் வயதுக் காலங்களில் நான் கேட்ட கேள்விகளுக்கு, நர்சரி நாவுகளில் இன்று விடை. சைக்கிள்…

அப்பா

கே ஆர் விஜய் ஏன் அப்பா இது போல என்னை வளர்த்தாய் ? பள்ளியில் சேர்க்கும் போதும் பொய்யான பிறந்தநாளைக் கொடுத்தாய்.. வீட்டில் உனக்கு சுமையென்று... ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது ஏழை எனச்…

என் வீட்டருகே ….

தேன்சிட்டு என் வீட்டருகே கல்லறைத் தோட்டம் ... காலை வெயிலில் மின்னிடும் பனியில் குளித்திடும் அழகான கல்லறைகள் .... என் நெஞ்சின் நினைவுச்சின்னம் ஆதலால் உரையாடுகிறேன், இவர்களிடம் உண்மையாக ... மனசார நேசிக்கிறேன்-இம் மாண்டு…

இதற்கும் புன்னகைதானா… ?

புஹாாி, கனடா அண்ணலே... மண்ணுயிர் யாவுக்கும் பிறவிகள் உண்டாமே... உனக்கொரு பிறவியில்லையா... ? தினம்... உன்னைத் தேடித் தேடி என் கால்களில் பாதங்களே இல்லாமல் போய் விட்டன... கோட்சேக்களெல்லாம் மீண்டும் மீண்டும் பிறவிகளெடுத்து விட்டனர்...…

மரணம்

ஜெயந்தி சேது தினம் தினம் உயிருடன் மரித்தது போய் திடாரென நிரந்தரமாய் இன்று.. ஆயிரம் மைல்கள் தாண்டி வந்து அழுது முடித்து காத்திருக்கும் மகன்.. கால் தொட்டு கும்பிட்டு கண்ணீர் வரவழைத்து கதவோரம் கவலையாய்…

இருட்டு பேசுகிறது!

புஹாரி, கனடா நான் இருட்டு... கொஞ்சம் ஊடுருவிப் பாருங்கள்... நானே நிஜம். வெளிச்சம் விருந்தாளி... நானே நிரந்தரம். புலன்கள் ஐந்து... அவற்றுள் ஒற்றைப்புலனே வெளிச்சத்தின் அடிமை... அந்த விழிகளும் என்னில் மட்டுமே கனவுகள் காண்கின்றன...…