101-வது கவிமாலையில் நூல் வெளியீடு

This entry is part of 45 in the series 20081023_Issue

ந.வீ.விசயபாரதி


101-வது கவிமாலையில் நூல் வெளியீடு

ஜாலான் புசார் சமூகமன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு ஆதரவுடன் மாதம்தோறும் நடைபெற்று வரும் கவிமாலை அமைப்பின் 101-வது நிகழ்ச்சி வருகிற 25.10.2008 சனியன்று மாலை 6 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி மையத்தில் நடைபெறுகிறது.

வழக்கம்போல் படித்த, வடித்த, பிடித்த கவிதைகள் அங்கமும், போட்டிக்கவிதை அங்கமும் இடம்பெறும். போட்டிக்கவிதைக்குரிய தலைப்பு: ”பிறப்பு”. தேர்வு பெறும் சிறந்த மூன்று கவிதைகளுக்கு புரவலர் திரு.ஜோதி மாணிக்கவாசகம் அவர்கள் ஆதரவில் தலா 30வெள்ளி ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் கவிஞர் ந.வீ.சத்தியமூர்த்தியின் ”தூரத்து மின்னல்” என்ற கவிதை நூல் வெளியீடு காணவிருக்கிறது. கவிஞர் மா.அன்பழகன் நூலை வெளியிட, மினி என்வைரன்மெண்ட நிறுவன அதிபர் ஹாஜி அப்துல் ஜலில் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக்கொள்ள இருக்கிறார்.

புரவலர்கள், சமூகமன்றத் தலைவர்கள், வர்த்தகர்களின் ஆதரவுடன் நடைபெறும் இந்நிகழச்சிக்க அனுமதி இலவசம்;; அனைவரும் வரலாம்.

மேல் விபரங்களுக்கு 97187552 97526214 ஆகிய எண்களில் அழைத்து விபரம் பெறலாம்.

ந.வீ.விசயபாரதி
சிங்கப்பூர்
நட்புடன்
kaviimalai@gmail.com

Series Navigation