முதல் உலகத் தமிழ்த் திரைப்படவிழா

This entry is part [part not set] of 18 in the series 20011007_Issue

2001 அக்டோபர் 26 முதல் நவம்பர் 01 முடிய சினிசங்கம் லண்டன் திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்


1. Escape from Genocide: இனக் கொலையிலிருந்து தப்பி ஐரோப்பாவுக்கு வந்து நிறவாத குடியேற்றக் கொள்கைளால் இலங்கைத் தமிழ் அகதி மக்கள் அடையும் துயர் பற்றிய விவரணப்படம். கோரமும் துயரும் நிறைந்த பிம்பங்கள் கொண்ட நிஜவாழ்வைத் திரையில் சொல்லும் விவரணப் படம். இயக்கம் : நாவலாசிரியர் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம். ஆங்கிலத்தில் விவரிக்கப்படும் படம்.

2. ஊருக்கு நூறு பேர் : பிரபல இலக்கியவாதியான ஜெயகாந்தனின் நாவலை அடிப்படையாகக் கொண்ட படம். இயக்குனர் : படத்தொகுப்பாளர் பி.லெனின். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

3. நதியின் மரணம். தமிழகத்தில் பரபரப்பேற்படுத்திய தாமிரபரணி தலித் படுகொலைகள் பற்றிய விவரணப்படம். புயங்கரமும் கோரமும் துயரும் நிறைந்த அதிரச்சி தரும் காட்சிகள் கொண்ட சித்திரம். இயக்குனர் ஆர். ஆர். சீனிவாசன். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

4. நாக் அவுட் : இந்தியாவில் விளையாட்டு வீரர்களின் சோகம் மற்றும் கவனிக்கப்படாத மரணம் குறித்த படம். டென்மார்க் நாட்டுப் படவிழாவில் திரையிடப்பட்ட குறும் படம். இயக்கம் : பி.லெனின். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

5. நிழல் யுத்தம் : ஸ்விட்சர்லாந்துக்குப் புலம் பெயர்ந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளந்தம்பதியர் இடையில் தோன்றும் பிணக்கும் காதலும் பற்றிய குறும்படம். இயக்குனர் : ஜீவன். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

6. எச்சில் போர்வை : அகதி வாழ்வின் நிலையாமை பற்றிய குறும்படம். ஏஜென்ட் ஒரு புறம். தஞ்சம் நிராகரிப்பு இன்னொருபுறம். தாய்நாட்டில் சொந்தங்களின் தேவைகள் இன்னொறுபுறம். இதனிடையில் சிக்கித் தவிக்கும் ஒரு இலங்கைத் தமிழ் இளைஞனின் சோக வாழ்வு இக்குறும்படம்.. பிரான்ஸ் கலை பண்பாட்டுக் கழகம் நடத்திய குறும்படப் போட்டியில் விருது பெற்ற படம். இயக்குனர் : ஜீவன். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

7. ஆயிஷா : தொலைக் காட்சிப்படத் தயாரிப்பாளரான செல்வி புவனேஸ் வழங்கும் குழந்தைகள் திரைப்படம் ஊர்வசி விருதுபெற்ற அர்ச்சனா மற்றும் சந்தோஸ் சிவனின் ‘மல்லி’ படப்புகழ் சிறுமி சுவேதா ஆகியோர் நடித்துள்ளனர். இயக்கம் : பி. சிவக்குமார். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம். http://www.aaraamthinai.com/movie/interview/siva.asp

8. தங்கம் : பல சர்வதேசப் படவிழாப் பரிசுகளை வென்ற குழந்தைத் தொழிலாளர் பற்றிய சோக காவியம். தங்கம் படத்தின் தொகுப்பாளர் Life is beautiful படத்திற்காக ஆஸகார் விருதுபெற்ற கிழக்கு ஐரோப்பியரான ஸைடன் பெக்கி ஆவார். இத்தாலித் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட படம். இயக்கம் : சொர்ணவேல். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

9. கால்களின் ஆல்பம். : தமிழின் முக்கிய கவியான மனுஸ்ய புத்திரனின் கவிதையொன்றை அடிப்படையாகக் கொண்ட குறும்படம் .இயக்குனர்: பி.லெனின். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

10. Untouchable Country : தமிழக அறிஞர்களின் நேர்முகங்கள் அடங்கிய விவரணப்படம். வுரலாறு முழுக்க தலித் மக்கள் இந்திய வாழ்வில் அனுபவித்து வரும் துயர்களைச் சொல்லும் விவரணப்படம். இயக்கம் : ஆர்ஆர்.சீனிவாசன. ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

11. மதி எனும் மனிதனின் மரணம் : இரா.நடராசனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட குறும்படம் . பெங்களூர் உலகப்படவிழாவில் திரையிடப்பட்ட படம். இயக்கம் :பி.லெனின் ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

12. சினிமாவுக்குப் போன சித்தாளு : நாவலாசிரியர் ஜெயகாந்தனின் நாவலை அடிப்படையாகக் கொண்ட படம். நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா மற்றும் தலைவாசல் விஜய் போன்றோர் நடித்த படம். கெளதமன் அடுத்து நாவலாசிரியர் நீல.பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம் நாவலைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இயக்குனர் : கெளதமன். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

13. Power : ஸ்விட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட ஒரு இசை ஆலபத்தின் பகுதிகள் இப்படம். ஸ்விஸ் இளம் பெண்களும் ஆணும் தோன்றும் நடனத் தெறிப்பு இக்குறும்படம். இயக்கம் : ஜீவன்.

14. வில்லு : தமிழக கிராமப்புற இசைக்கருவியான வில்லு பற்றியதொரு விவரணப்படம். 1998 பிரெஞ்சு மானுடவரைவியல் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட படம். இயக்குனர் : சொர்ணவேல். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

http://www.aaraamthinai.com/movie/interview/sornavel.asp

http://www.aaraamthinai.com/movie/interview/sornavel01.asp

http://www.aaraamthinai.com/movie/interview/sornavel02.asp

http://www.aaraamthinai.com/movie/interview/sornavel03.asp

15. சுப்பிரமணிய பாரதி : இறவா மானுடன் மகாகவி பாரதி பற்றிய விவரணப்படம். இயக்குனர் : அம்ஷன்குமார். தமிழகப் பத்திரிக்கைகளால் பரவலான பாராட்டுப் பெற்றதும் மிகுந்த ஆய்வின் பின் எடுக்கப்பட்டதுமான பாரதி பற்றிய முதல் விவரணப்படம். இந்தியத் ொலைக்காட்சியான துாரதர்ஷனில் ஒளிபரப்பட்டு 1999 ஆம் ஆண்டுக்கான திகச்சிறந்த விவரணப்படம் எனும் மைலாப்பூர் அகாதமி விருது  6பற்ற விவரணப்படம். இயக்கம் : அம்ஷன்குமார். ஆங்கிலத்தில் விவரிக்கப்படும் படம்..

16. Knowledge Centres : தகவல் தொழில்நுட்பம் தமிழக கிராமங்களில் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகளும் பெண்களின் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றமும் பற்றி விவரணப்படம். இயக்கம் : அம்ஷன்குமார். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

17. விட்டு விடுதலையாகி : சமஸ்கிருத ஆண்டுக்குச் சமர்ப்பணமான ஜாதியம் குறித்த குறும்படம் இயக்குனர் : அருண்மொழி. குணச்சித்திர நடிகர் சாருஹாஸன் பாலுமகேந்திராவின் கதை நேரம் புகழ் மெளனிகா நாடக நடிகை அ.மங்கை.மற்றும் பி.ஆர். அர்ச்சனா போன்றோர் நடித்த குறும்படம். எமது திரைப்படவிழாவில்தான் இப்படம் இத்திரைப்படவிழாவில் முதன் முதலாகத் திரையிடப்படுகிறது. இயக்கம் : !அருண்மொழி. திரையிடலின் போது ஆங்கிலத்தல் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

18. Indian National Army : சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பற்றிய குறும்படம். 1998 ஆம் ஆண்டு தொடங்கி ரோம் மிலான் பம்பாய் போன்ற இடங்களில் நடைபெற்ற திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்ட மிக முக்கியமான வரலாற்று விவரணப்படம். இயக்கம் : சொர்ணவேல் ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

http://www.aaraamthinai.com/movie/interview/sornavel.asp

http://www.aaraamthinai.com/movie/interview/sornavel01.asp

http://www.aaraamthinai.com/movie/interview/sornavel02.asp

http://www.aaraamthinai.com/movie/interview/sornavel03.asp

19. நிலப்பறி : தமிழக விவசாயிகளின் போராட்டமாக எழுந்த நிலமீட்சி இயக்கம் பற்றிய விவரணப்படம்.இயக்குனர் அருண்மொழி; ஏர்முனை, காணிநிலம் போன்ற படங்களை இயக்கியதோடு பல சர்வதேச திரைப்பட விருதுகளையும் பெற்ற தமிழக இயக்குனராவார். டெல்லி திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட படம். இயக்குனர் : அருண்மொழி. திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

20. யாத்திரை : ஐரோப்பாவில் குறிப்பாக ஸ்விட்சர்லாந்தில் அடைக்கலம் புகுந்து தஞ்சம் நிராகரிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் இலங்கை அகதி மகனின் துயர் சொல்லும் குறும்படம். இயக்குனர் : ஜீவன் திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

21. கவிக்குயில் : புகலிட வாழ்வில் தமிழ்க் கலாச்சார வேர்களைத் தேடும் தமிழ்ப் பெண்ணொருத்தியின் ஆசையும் தமிழ் இசையும் பற்றிதொரு குறும்படம். இயக்குனர் : ஜீவன். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

22. கூலி : சிங்கப்பூருக்கு கூலியாகவரும் ஒரு தமிழக இளம்பெண்ணின் துயரும் சந்தோஷமும் நிறைந்த வாழ்வு. சிங்கப்பூர் வசந்தம் சென்ட்ரல் தொலைக்காட்சிக்காக எடுத்த குறும்படம். இயக்குனர் : கனடா மூர்த்தி . ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

23. Teasing : ஸ்விஸ் இளம் பெண்களின் தனித்ததொரு இளைஞனிடமான குறும்பு பற்றியதொரு நிமிடத் தெறிப்பான குறம்படம். இயக்கம் : ஜீவன்.

24. கடைசி யுத்தம் : தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் இடையில் வாழ நேர்ந்து தற்கொலைக்கு முயலும் இளைஞன் பற்றிய குறும்படம். இறுதியில் காலம் கடந்து விட மரணம் தவிர்க்கவியலாமல் நிகழ்கிறது.. இயக்குனர் : விஜய் சேகர் திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

25. கூண்டு : ஜெர்மனிக்குப் புலம் பெயர்ந்த ஒரு இலங்கைத் தமிழப் பெண்ணின் வாழ்வு பற்றிய குறும்படம்.. அண்ணன் அண்ணியோடு வாழத் தலைப்பட்ட அவர் மேற்கொள்ளும் பாலியல் சார் உளவியல் போராட்டம் பற்றிய குறும்படம். இயக்குனர் : ஜெகாதரன் திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

26. Labyrinth : நமது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பல்வேறு வாழ்வுச் சம்பங்களில் இடம் பெறும் திரும்பத் திரும்ப நிகழல் மற்றும் வட்டவடிவமான வாழ்வு போன்றவற்றைப் பற்றிச் சித்தரிக்கும் சோதனைப்படம். இயக்கம். ஆர். ஆர். சீனிவாசன். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

27. ஜட்ஜ்மென்ட்.: கொலைகாரன் எனத் தன் கணவனைக் குற்றம் சுமத்திய ஒரு பெண்ணின் கதை. அதே வேளை தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் ஒரு கணவனின் கதை பிரகாஷ்ராஜ் நடித்த குறும்படம். . இயக்கம் : தமிழ்த் திரைப்பட நடிகை சுகன்யா திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

28. Ruins. : கோயில் ஒன்றின் சிதைவையும் ஆண் பெண் உறவின் சிதைவையும் ஒப்பு நோக்கி கவித்துவத்தோடு சிதிலத்தின் சோகத்தைச் சொல்ல முயலும் சோதனைப்படம் . கவிதைச் சினிமா என இதனைக் குறிப்பிடலாம். இயக்கம் : ஆர்.ஆர். சீனிவாசன். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

29. சந்தன மொட்டுக்கள் : சந்தனக் கடத்தில் வீரப்பனின் சாகசங்களினிடையில் வாழ நேர்ந்த குழந்தைகள் பற்றிய சென்னை லயோலா கல்லுாரி மாணவ மாணவிகளின் கூட்டுப் படம். மேற்பார்வை: பேராசிரியர் :ராஜநாயகம். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

30. மதவாதம் : தமிழகத்தில் பரவி வரும் மதவெறியும் அதனைத் தொடர்ந்த மானுட அழிவும் பற்றிச் சொல்லும் படம். சென்னை லயோலா கல்லுாரி மாணவ மாணவிகளின் கூட்டுப் படம வெகுஜனங்களின் நேர்முகங்களால் ஆன படம். மேற்பார்வை: பேராசிரியர் : ராஜநாயகம். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

31. Feel the Pain : புலம்பெயர்ந்த ஆசிய மக்களின் மீதான ஐரோப்பியர்களின் நிறவாத்தையும் வெறுப்பையும் விலக்கக் கோரும் அன்பு குறித்த இசைத் தெறிப்பு. இப்படம். இயக்கம் : ஜீவன். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

32. வேர்களாகி. : தமிழகம் எங்கும் பயணம் செய்து ஊழல் எனும் எரியும் பிரச்சினை பற்றி வெகுஜனங்களிடம் கேட்டறிந்த அபிப்பிராயங்கள் பற்றிய சென்னை லயோலா கல்லுாரி மாணவ மாணவிகளின் கூட்டுப் படம வெகுஜனங்களின் நேர்முகங்களால் ஆன படம். மேற்பார்வை: பேராசிரியர் : ராஜநாயகம். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

33. Now and Forever : இலங்கைப் பாடகரொருவரின் காதலிக்கான உருக்கமான பாடல். இயக்கம் : ஜீவன்.

34. தப்புக் கட்டை : தப்பட்டை அடிக்கும்போது கேவலப்படுத்தப்படும் தலித் மக்கள் சிலர் தப்படிப்பதை நிறத்தி விடுகின்றனர். அம்மாவின் மரணத்தின் பின் அவளது இறுதி ஆசையான தப்பாட்டம் இல்லாது தவிக்கும் ஒரு தலித் இளைஞன் ஆவேசத்தோடு தானே தப்பட்டை அடிக்கத் தொடங்குகிறான். உக்கிரமும் உணர்ச்சியும் நிறைந்த ஆவேசமான குறும்படம்.. இயக்கம் : தாஸ் திரையிடலின் போது ஆங்கிலத்தல் கை

35. அன்னமயில்.. : ஆண் பெண் உறவு பற்றியதோடு அறம் ஒழுக்கம் போன்றவற்றின் சார்பு நிலைகளை விசாரணை செய்யும் குறும் படம். இயக்கம் : தாஸ் திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

36. Close your eyes : விழியிழந்தோர் பள்ளியில் எடுக்கப்பட்ட அந்தகக் குழந்தைகளின் அழகும் வாழ்வும் துயரும் பாற்றியதொரு விவரணச்சித்திரம். கண்ணீரை வரவழைக்கும் காட்சிகள் கொண்ட படம். இயக்கம் : ஆர்.ஆர்.சீனிவாசன். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

37. உயிரே என்னை அழைத்ததேன் : இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்த இளைஞனொருவனின் காதலும் தற்கொலையும் பற்றிய கதைப்படம். இங்கிலாந்தில் வாழும் ஜான்சன் போன்றோர் நடித்த படம். இயக்கம் : குமரேஸ்வரன். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

38. ஜெயகாந்தன் : நாவலாசிரியர் ஜெயகாந்தன் பற்றிய இரண்டு விவரணப்படங்கள்.. இயக்கம் : நாவலாசிரியர் சா.கந்தசாமி மற்றும் எழுத்தாளர் கனடா மூர்த்தி திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

39. அடிமைகளின் தேசம் : தலித் பெண்ணொருத்தி தேர்தலில் போட்டியடே¢டதற்காக பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகிறார் தலித் மக்களின் பாலான நீதித்துறையின் இரட்டை நிலைப்பாட்டை ஆவேசமாக விமர்சிக்கும் குறும்படம். இயக்குனர் தீஸ்மாஸ். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

40. குற்றவாளியைத் தேடி.: பெற்றோர்களின் கட்டுபாடுகளை மீறி நடந்த திருமணத்தின் பின் மணந்து கொண்டவள் துரோகம் செய்கிறாள். அவளைக் கொலை செய்யத் தேடித்திரிபவன் இறுதியில் மரணமுற்ற அவளையும் நிர்க்கதியான அவளது குழந்தையையும் காண்கிறான். கொல்லப் போனவன் குழந்தைக்கு பெறுப்பேற்றுத் திரும்புகிறான்.. இயக்குனர் ஜோ திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்க! ‘f5 வழங்கப்படும்

41. வசந்த காலப் பூக்கள் : இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்து மனம் பேதலித்து வாழும் ஒரு புகலிட இலங்கைத் தமிழ் இளைஞரொருவரின் வாழ்வு பற்றிய சோகநாடகம்.. இங்கிலாந்தில் வாழும் ஜான்சன் போன்றோர் நடித்த படம். இயக்கம் : குமரேஸ்வரன். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

42. The Pesticide Trap : பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் மூன்றாம் உலக நாடுகளில் விளைவிக்கும் சேதம் பற்றிய விவரணச்சித்தரம். இதில் இடம் பெறும் வீதி நாடகம் இவ்விவரணப்படத்தின் சிறப்பான பகுதியாகும். இயக்கம் : எம்.சிவக்குமார். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

43. வேர்கள் கடந்தும் : தமிழகத்தில் வாடும் இலங்கைத் தமிழ் அகதிகள் படும் அல்லல்கள் மற்றும் துயர்கள் பற்றிய படம். அதிகார வர்க்கத்தவர் அம்மக்கள் மேல் மேற்கொள்ளும் அத்துமீறல்கள் பற்றிய விவரணப்படம். இயக்கம் : ரகுராமன். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

44. சேமிப்புக்கு அப்பால்: தமிழகப் பெண்களிடம் உருவாகிவரும் கூட்டுணர்வையும் கிராமப்புறப் பெண்களின் சேமிப்புப் பழக்கத்தையும் அவர்களின் மீது அறிவொளி இயக்கத்தின் தாக்கத்தையும் எடுத்துரைக்கும் விவரணப்படம். இயக்கம்: எம். சிவக்குமார் ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

45. அதிசயம் அற்புதம் : மனிதர்களின் மூடப்பழக்கங்களைப் பயன்படுத்தி அவர்களின் அறியாமையைச் சுரண்டும் தமிழகத்தின் திடார் கடவுள்களின் சாகசங்களின் பின்னிருக்கும் பொய்மையை விஞ்ஞான பூர்வமாக விமர்சனத்துக்கு உட்படுத்தும் படம். பிரபல தமிழ் நடிகர் நாஸர் நடித்த படம். இயக்கம் : எம்.சிவக்குமார். திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

46. சி.சு.செல்லப்பா : முது பெரும் இலக்கியவாதி சி. சு. செல்லப்பாவின் வாழ்வு அவரது உதாரணமான இலக்கியப்பணி பற்றிய விவரணப்படம். பாலசுப்ரமணியம் அருண்மொழி கூட்டாகத் தயாரித்த விவரணப்படம். காணற்கரிய ஆவணங்கள் கொண்டது இப்படம். இயக்கம் : அருண்மொழி திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

47. Getting Lost : சர்வதேச அளவில் உருவாகி வரும் இனவரைவியல் திரைப்பட வகையினம் சார்ந்த படம். தமிழர் கலாச்சாரத்தில் பண்டிகைகள் சடங்குகள் போன்றவை பெறும் இடம் குறித்ததொரு விவரணச்சித்திரம். இயக்கம் : ஆர்.ஆர்.சீனிவாசன். ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

48. பச்சை மண் : தமிழகத்தைக் குலுக்கிய பெண் சிசுக்கொலைபற்றிய படம். ஒரு நாடகத்தை கிராமமொன்றில் நிகழ்த்துவதன் வழி பார்வையாளர்களின் உரையாடலைத் துாண்டி விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும் குறும்படம் இது. இயக்கம் : மினி ஹரி ஆங்கிலத் துணைத் தலைப்புகள் கொண்ட படம்.

49. Three Songs : குழந்தைகளை விளையாட விடாது அவர்கள் மீது சுமத்தப்படும் காலனியக் கல்வி முறை பற்றிய விமர்சனம். பாடல்களின் வழி பெற்றோர்களுக்கு அறிவுறுத்தும் விவரணப்படம். இயக்கம் ஏ.எஸ். பத்மாவதி திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

50. Message that Move : வேலைக்குச் செல்லும் பெண்கள் குழந்தை வளர்ப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய படம். சகல விதங்களிலும் ஆண்கள் பொறுப்பெடுக்க வேண்டியதன் அவசியத்தைக் கோரும் விவரணப்படம். இயக்கம் : ஏ.எஸ்.பத்மாவதி மற்றும் ஜனனி திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

51. பவளக்கொடி அல்லது குடும்ப வழக்கு : மரபான தமிழ் நாடகத்தை அடிப்டையாகக் கொண்ட படம். அல்லி அர்ஜூனா நாடகத்தின் இடையில் பிரதான நடிகையின் கணவன் அவளது தமக்கையை மணம் முடித்துக் கொடுக்குமாறு கலாட்டா செய்கிறான். சமகால பலதார மணம் குறித்த நையாண்டியாகவும் இந்நாடகம் திகழ்கிறது. ஒளிப்பதிவு மற்றும் குறும்பட உருவாக்கம் : அருண்மொழி திரையிடலின் போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

52. The Ball: நோர்வேயில் வாழும் இருபது மாதக் குழந்தை ஒன்றுக்கும் பந்து ஒன்றுக்கும் இடையிலான ஒப்புமைகளைக் கொண்டிருக்கும் குறும்படம். தகப்பனால் வன்முறைக்குள்ளாகும் குழந்தையொன்று வீட்டைவிட்டு வெளியேறி விளையாட்டுப் போக்கில் ஏரியில் மூழ்கி மரணமுறுகிறது. பெற்றோருக்குச் செய்தி சொல்லும் படம். இயக்கம் : தமயந்தி திரையிடலின்போது ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் வழங்கப்படும்

மேலதிக விவரங்களுக்கு

தொலைபேசி இலக்கம்

(44) 208 507 9710

தொலைநகல்

(44) 208 507 9750

மின்னஞ்சல்

yamunarn@hotmail.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு