ஒரு நொடியின் ஆயிரம் பாகம்..

This entry is part [part not set] of 30 in the series 20100425_Issue

இளங்கோ


*
உச்சியின் விளிம்பிலிருந்து…
நழுவத் தொடங்கினேன்

காற்றை அவசரமாய் உள்ளிழுக்கிறது
நுரையீரல்..
காட்சியின் குழப்பங்கள்..
யாவற்றையும் பச்சை நிறத்தில்
வர்ணம் தீற்றுகிறது..

திடீரென்று பேரிரைச்சல்..
காதில் அடைப்பட்டு..
வியாபிக்கிறது எப்போதுமே அறிந்திராத
கனத்த மௌனமொன்று..

கீழ் உந்தும் உயிரும்
கவர்ந்து கொள்ளும் விசையும்…
ஒருங்கே ஆலிங்கனம் செய்தபடி..
முனகுகின்றன திசைகளை அறுத்து..

ஒரு நொடியின் ஆயிரம் பாகத்தின்
ஒற்றை மெல்லிய இடைவெளியில்
பள்ளத்தாக்கின் மென்மையை தொட்டுணர்ந்த
மறுகணம்..

உடைகின்றன எலும்புகள்…
நசுங்குகின்றன நரம்பு மண்டலங்கள்..
உடனே..
நொறுங்குகிறது மண்டைக் கூடு…

ரெண்டாய் பிளந்து வெளியேறும்
மூளையின் சொதசொதப்பு…
முதல் முறையாக..

ஆகாயத்தை…
பள்ளத்தாக்கை…
நீல பச்சை வர்ணத்தை…
வாழ்ந்ததாக நம்பிய உலகத்தை…
தரிசிக்கும்போதே…

அதன் மீது கவிகிறது…வழிகிறது..
இருள் மசிய ஒரு கருநீலப் பிரபஞ்சம்…

ரத்தக் கொப்பளிப்பை
இதயம் மட்டும்…பரப்புகிறது..
அப்பள்ளத்தாக்கெங்கும்…நிரப்பி விடும் ஆவலோடு..!

*****
–இளங்கோ

Series Navigationஐஸ்லாந்தின் பூத எரிமலைப் புகை மூட்டம் ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்தை முடக்கியது(கட்டுரை -1) >>

இளங்கோ

இளங்கோ