குற்ற உணர்வு இல்லா இந்தியர்கள்

This entry is part of 31 in the series 20080828_Issue

வி பிச்சுமணி


ஒரு குடும்ப தலைவி
ஒன்றுக்கு மேல்
குடும்ப அட்டைகள்
மான்ய விலையில்
பொருட்கள்

ஒரு குடும்பம்
ஒன்றுக்கு மேல்
காஸ் இணைப்புகள்
இரண்டு மடங்கு விலையில்’
விற்பனை

மாணவர்கள்
பேருந்தோ
ரெயில் வண்டியோ
பயணச்சிட்டு இல்லாமல்
பயனம்

நடத்துனர்
பை நிறைய பைசா
இருந்தாலும்
மிச்ச சில்லரை
அமுக்குதல்

வார்டு உறுப்பினர்கள்
வறுமை ஒழிப்பு திட்ட பயனாளிகளாக
வேண்டியவர்களை மட்டும்
தெரிவு

அலுவலர்கள்
அரசு எழுதுபொருட்களை
வீட்டுக்காக
எடுத்தல்

முதியோர்கள்
ஓய்வு ஊதியத்திற்காக
பிள்ளைகள் இல்லாத
அனாதை

நல்லவர்கள்
இவர்கள்
அடுத்தவர் ஊழல் பேசும்
குற்ற உணர்வு இல்லா
இந்தியர்கள்


vpitchumani@yahoo.co.in

Series Navigation