தாகூரின் கீதங்கள் – 40 யாருடைய தவறு அது ?

This entry is part [part not set] of 36 in the series 20080717_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


காலை முழுவதும் நானுனக்கு
மாலை தொடுத்து வரும் போது
மண்ணில் விழுந்தன மலர்கள்
கை நழுவி !
கடைக்கண் ஓரத்தில்
உளவியபடி அமர்ந்து கொண்டு
இரகசியமாய் நீ கவனித்து
வருகிறாய் என்னை !
தெரியாமல் திட்ட மிட்டுத்
தொந்தரவு அளிக்கும்
அந்த உனது விழிகளைக் கேள் :
யாருடைய தவறு அது வென்று ?
கானம் பாட முயல்கிறேன்
ஆனால் கேட்கப் படாமல்
வீணாய்ப் போனது !
உன்னுதடுகளில் நடுங்குமொரு
புன்முறுவல் !

தோல்விக்குக் காரணம் எதுவெனக்
கேள் நீ ! சத்தியம் கூறி
உன் புன்னகை உதடுகள் சொல்லட்டும் :
தேனைக் குடித்த தேனீ
தாமரையில் சோம்பியது போல்
என் குரல்
ஊமை யானது எவ்விதம் ?
மாலை வேளை இது
மலர்கள் இதழ்கள் மூடும் வேளை !
அனுமதி அளிப்பாய்
உனது அருகில் நான் அமர்ந்திட !
விண்மீன்களின் மங்கிய
ஒளிமயத்தில்
எனக்கு ஆணை யிடு
ஊமை இதழ்கள் புரியும்
ஊழியத்துக்கு !

************
1. The Gardener,
Translated By : Nirupama Ravindra

2. Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 13,, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா