கறிவேம்பில் நிலவு

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

டீன்கபூர்


நிலவு மணத்தது எனக்கு.
பூமரத்தில் தெத்தி
புpன் கறிவேம்பில் தங்கியதை
நிலவின் மணத்தில் அறிந்தேன்.

வாசலில் நிலவு முடிகிளறியது.
பேன் பொறுக்க காக்கையை அரட்டியது.
நிலவுக்கு பிரியமுள்ள இடம்.
அந்தப்புற நாயகியோடு சங்கமித்து ….
நிலநேரம் நடுச்சாமம் பிரசன்னமாகி
தூங்கிச் செல்லும்.

நிலவுக்கு என்னைத் தெரியும்.
என் குரல் வளையில் அமுதைப் பனித்து
ஒரு காலத்தில் பிடிந்த சோற்றுப் பிடிகளை
எனக்கு ஊட்டியதிலிருந்து.
உம்மா அழைத்து
என் கையில் தந்ததிலிருந்து.
அழுகைக்காக உயிர் மாமாவாக.

இப்போ இந்த நிலவோடு
கடற்கரை வெளியில் கைகோர்க்க
எண்ணம் உண்டு.
என் குடும்பத்தோடு சென்று உறவாட
ஆசை அதிகம்.
கச்சான் கொட்டையும்
கடலை பருப்பும் பரிமாற

நிலவு, இந்த யுத்த பூமியில்
விழுந்து கிடப்பதைப் பற்றித்தான்
என் ஆத்மாவுக்கு அவதி.
நிலவு புனிதம் நிறைந்த ஒரு பிள்ளை.
அழகு பெண்போன்ற முகமுடையதே நிலவு.
நாளை என்றோ ஒரு நாள்
ஒரு வெளியிலிருந்து
என் காதல் மொழியை
உன் ஒளியில் எழுதிப் பார்ப்பேன்.

ஆயுதங்கள் உன்னைச் சுட்டு வீழ்த்துவதற்குள்
குண்டு வெடிப்பில்
உன் செவிகள் ஊனமுறுவதற்குள்.
அவையவங்கள் முறிந்து தொங்குவதற்குள்.
உன் அழகு காயப்பட்டுக் கிடப்பதற்குள.;
நான் உன் கைகளுடன் கோருட்டுக்கிடப்பேன்.
ஒரு மனிதனாக.

நிலவு மனத்தது எனக்கு.
பூமரத்தில் தெத்தி
பின் கறிவேம்பில் தங்கியதை
நிலவின் மணத்தில் அறிந்தேன்.

டீன்கபூர் – இலங்கை
deengaffoor7@yahoo.com

Series Navigation

டீன்கபூர் - இலங்கை

டீன்கபூர் - இலங்கை