புத்தாண்டு விருப்பங்கள்

This entry is part of 38 in the series 20030419_Issue

கோமதி நடராஜன்


என் புன்னகைக்குப்,
பதில் புன்னகை, பூவாய்
மலரட்டும்.
நீளும், என் நேசக்கரம் தொட,
ஆயிரம் கரங்கள்,
அன்புடன் நீளட்டும்.
வாடிய முகங்களில்,புதிதாய்
புத்தொளி பூக்கட்டும்.
பகை கொண்ட மனங்கள்,
குணம் மாறி குளிரட்டும்.
வறுமையில் விழுந்தவர், வாழ்வில்
வளம் பல காணட்டும்.
கடமை மறந்த,கலப்பைகள்,
கட கடவென்று, ஓடட்டும்.
குற்றமில்லாக் கொற்றவன் ஆட்சி,
கொடி கட்டி பறக்கட்டும்.
நல்ல முயற்சிக்கு,வெற்றிச்செல்வி
மாலை இடட்டும்.
‘சோகம் துக்கம் ‘ அகராதியில்
அர்த்தம் மாறட்டும்.
ஆனந்தக்கண்ணீரில், அகிலம்
நனையட்டும்.
இத்தனையும் அள்ளிக் கொண்டு
வரவேண்டும்,சுபிட்சமான, ‘ சுபானு ‘.

***=ngomathi@rediffmail.com

Series Navigation