இன்னொரு நான்…

This entry is part of 29 in the series 20020324_Issue

சேவியர்.


என்னோடு நான் கேட்கும்
ஏராளம் கேள்விகள்,
கடலில் எறிந்த எந்திரக் கல்லாய்
ஆழமாய் விழுந்து
காணாமல் போய் விடுகின்றன.

நான்,
செய்த பானைகள் எல்லாம்
வாய் விாிந்தும்,
தூர் தொலைந்தும்
உபயோகமற்றுப் போகின்றன,
களிமண்ணோ
வாய் பேசாமல் மெளனமாய்.

என் இயலாமைகள்
என்னைப் பிடித்து
தூண்டிலில் பொருத்தி
மோகக் கடலில் மூழ்கவிட்டு
கரையிலிருந்து ரசிக்கின்றன.

என் பேராசைப் பயிர்கள்
அயலானின்
வேலிகளைப் பார்த்து
பெருமூச்சு விடுகின்றன.

என்
ஒவ்வோர் செயலுக்குப் பின்னும்
பெயர் இடப்படாத
ஓர் சுயநலம்
பதுங்கியே இருக்கிறது.

அழைப்பைப் புறக்கணித்து,
என்
நிழலுக்குக் காவலாய்
நடக்கின்றன என் பாதங்கள்

Series Navigation