தயவுசெய்து எனக்காக…

This entry is part of 29 in the series 20020324_Issue

கண்மணி.


வீடெங்கும் கலைத்துப்போட்ட
பொருட்கள்
நினைவுபடுத்துகின்றன
நீ இல்லாதபோது
உன் இருப்பை.
ரசிக்கும் செவி தேடி
வீடெங்கும் தன் சத்தத்தை
உலா அனுப்பிப் பார்க்கிறது
என் கொலுசு
நான் நகராமல் இருக்கும்போதும்.
நம்மைப் போலவே பிாிந்து கிடக்கின்றன
உறங்காது செவ்வாிகளை ஏற்றிக்கொண்ட
என் விழிகளின் கதவுகள்.
சந்தர்ப்பங்கள் கிடைத்தபோது
வெளிக்காட்டா மனசு
ஆர்ப்பாித்துக் கிடக்கிறது
நமக்கிடையே உள்ள இந்தக் கடலைப் போல.
காதலி சொன்னால் விடும் சுகத்திற்காக
புகை பிடிக்கக் கற்றுக்கொண்டேன் என்றாயே!
காத்திருத்தல் முடிந்து காதலிக்க ஆரம்பித்தும்
எப்படி சொல்லாமல் மூடிவைக்க
முடிகிறது உன்னால் ?
உன்னைப்போல நானொன்றும்
கல்நெஞ்சுக்காாி இல்லை,
உனக்குக் கடிதமெழுதியிருக்கிறேன்..
‘தயவுசெய்து எனக்காக புகைபிடித்தலை விட்டுவிடமாட்டாயா ‘
என்று.

***

Series Navigation