ஏறக்குறைய வெண்பா – 4

This entry is part [part not set] of 29 in the series 20020324_Issue

மத்தளராயன் (என்ற) மாம்பலம் கவிராயன்


ஓய்வு பெற்ற தபால்காரர்
———————–
பிரித்துத் திறந்த கதவு. முகத்தில்
சிரிப்புமே யாசித்து நின்று – விரித்த
குடையுமாய் வேர்த்த தொருதபால் காரர்
நடக்கிறார் பென்சனா பீசு.

சாணை
——–
சாரல் மழையிரவில் சக்கர யந்திரத்தை
ஓரம் நிறுத்திப் பழந்துணி ஈரத்தில்
சாணைக்கா ரன்தூங்கக் காலசையும் ஊருக்கு
நாளைக் கனுப்பணுமே காசு.

காத்திருத்தல்
————-
க்ஷருட்டிய வாசல். எவரோ கடக்க
உருட்டும் ஜபமாலை நிற்கும் – க்ஷருமலுடன்
சாலைக்கு மேல்விழிகள் நாலிங்கே காத்திருக்க
வேலைக்குப் போகும் மகள்.

வேலை
——-
வீசித் துவைக்க வெளுக்காத சீருடை
ஏசி எசமான் மகளெறியப் பேசாது
சோப்பு நுரைக்கும் சிறுமி.கிராமத்துத்
தோப்பு நிழலே கனவு.

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்