இருதயம் எஙகே!

This entry is part of 17 in the series 20010629_Issue

ராஜ்
நேசமாய் பார்த்தாள்
நெருங்கி விட்டான்

கண் இமைகளில்
கனவுகளை சுமந்து

கற்பனை வெள்ளத்தில்
கவிதை பல வரைந்தான்

கண்ணே ஏன்றான்
கை பிடிப்பேன் ஏன்றான்

அவள்,
கனவு என்றாள்
கை விட்டு சேன்றாள்

மனசு வலித்தது
உண்மை உரைத்தது – பெண்னே
உனக்கு இதயமே இல்லையா ?

ஆத்திரம் அடைந்தான்
ஆவேசம் கொண்டான் – ஆனால்
அன்பு விலங்கிட்டது

ஆம்,
அவன் கொண்ட நேசம்
நெசமானது தான்!

தடயங்கள் எதுவும்
உடலில் இல்லை,
மனதில்

மாற்றானுக்கு மனைவியானாள்
கொண்டவனை காதலன் என்றால்,
காதலுக்கு வலித்தது

இவன்,
இரவு நேர முனங்கல்
நிசப்தத்தின் கருவரையில்
புதைந்து விட வில்லை,
புதிதாய் ஒலித்தது

மனசாட்சியிடம் மண்டியிட்டான் – ஒரு
மலரை மணமுடித்தான்

பூசைக்கு வந்த மலாிடம்
நேசத்தை தேடினான்

மாசற்றதா என்று பார்க்கவில்லை
மனமிருக்கிறதா என்று பார்த்தான்…

மாசற்ற மலராயினும் – அவளும்
ஒரு பெண்தானே!

Series Navigation