தமிழ்வாணன் பற்றிய திரு.மைத்ரேயனின் கட்டுரை

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

நோபிள் செல்லத்துரை.


அன்புடையீர்,
வணக்கம்.
தமிழ்வாணன் பற்றிய திரு.மைத்ரேயனின் கட்டுரையை வாசித்தேன்.
அதற்கு முன்பு ஜோதிர்லதாகிரிஜா அவர்கள் எழுதிய கட்டுரை நமது இளமை காலத்தை நினைக்க வைத்துவிட்டது. இருவருக்கும் என் நன்றி.
தமிழ்வாணன் தமது இனிய, புதிய நடையில் எழுதிய துப்பறியும் நாவல்கள் எனனை மிகவும் கவர்ந்த்ன.
பலவிதமான துப்பறியும் நாவல்களை அவ்ர் எழுதியதாக நினைவு.ஆந்தை விழிகள், தொலைபேசியில் பேசியது யார், மூவரை விழுங்கிய முதலை போன்ற நாவல்கள் நினைவில் இருக்கின்றன.கதை மாந்தர்களது பேர்களும்,பாரி, அதியமான், மலையமான்,மலர்விழி போன்ற அழகிய தமிழில் இருந்தன. மற்றும் சங்கர்லால், இந்திரா, வஹாப் ஆகியோரை மறக்க முடியுமா?
நோபிள் செல்லத்துரை.


noblechelladurai@hotmail.com

Series Navigation

நோபிள் செல்லத்துரை.

நோபிள் செல்லத்துரை.