வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்விற்கு தமிழக எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஸ்ணன்

This entry is part [part not set] of 26 in the series 20080703_Issue

அறிவிப்பு


இந்த வருடம் 2008 வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்விற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள தமிழக எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஸ்ணன் எதிர்வரும் ஜீலை 11 முதல் ஜீலை 15 வரையில் சிங்கப்பூரில் வாசகர்களை சந்திக்கவிருக்கிறார்.

இந்த சந்திப்பு சனி மற்றும் ஞாயிறு அன்று எல்லோரும் கலந்துகொள்ளும் பொதுச்சந்திப்பாக நிகழவுள்ளது. அனைவரும் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவம். எஸ்.இராமகிருஸ்ணன்-னின் அனைத்து நூல்களும் சிங்கப்பூரின் பிரதான நூலகங்களில் இருக்கிறது.

பொதுசந்திப்பு பற்றிய விபரங்கள்

1. Saturday July 12 6.30-8pm
Programme Zone,Central Lending Library
100, Victoria Street.

2. Sunday July 13, 4.30-8pm
Programme Zone,
Ang Mo Kio Community Library.
– nearest MRT -Ang Mo Kio.

இந்த ஆண்டு எஸ்.இராமகிருஸ்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் “பெயரில்லாத ஊரின் பகல்வேளை” என்ற தொகுப்பாக தொகுத்துள்ளனர். இந்த தொகுப்பின் அடிப்படையில் ஒருநாள் கலந்துரையாடல் இருக்ககூடும்.

தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள்

1. ஆண்கள் தெருவில் ஒரு வீடு
2. நம்மில் ஒருவன்
3. இடம் பெயர்தல்
4. தெரிந்தவர்கள்
5. தாவரங்களின் உரையாடல்
6. பெயரில்லாத ஊரின் பகல்வேளை
7. அந்தரம்
8. நத்தைகளின் புன்னகை

இந்த தொகுப்பை படித்து முடித்தபொழுது “பெயரில்லாத ஊரின் பகல்வேளை” சிறுகதை எனக்கு இவரது புதினமான “நெடுங்குருதி”-யை ஏனோ ஞாபகப்படுத்தியது.

பாண்டித்துரை


www.pandiidurai.wordpress.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு