The Mighty Heart :இது இது தான் சினிமா:

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

கோவிந்த்



தீவிரவாதத்தின் வாசலாகிப்போன பாகிஸ்தானில், ஒரு அமெரிக்க இதழாளர் கடத்தப்படுகிறார்.
படத்திலோ, காலின் பவுல், முஸ்ரப் என்று வசனங்கள் வருகின்றன.
9/11 WTC க்கு காரணம் மொஷாத் என்கிறார் ஒரு முகமதிய தீவிரவாளர்.
காரணம், அன்று 4000 ஜீ-க்கள் WTC யில் தங்கள் வேலைக்கு வரவில்லை… ஏன்…? என்கிறார்.
நீ யார்..? அமெரிக்கனா என்று கேட்கப்பட்டதிற்கு, நான், “ஜ்யூ “(யூதர் ) என்று உண்மை விளம்புகிறார், அந்த பத்திரிக்கையாளர்.
கடத்தப்படுகிறார்.
கோரிக்கை வைக்கப்படுகிறது.
பாக் CID தலைமை அதிகாரியின் தலைமையில் தேடும் படலம்.
கடத்திய தீவிரவாதிகள் குழுவினரில் ஒருவன், தலைகீழாக தொங்கவிடப் பட்டு உண்மை தகவலுக்காக சித்திரைவதை செய்யப்படுகிறான்…
நாம், பலரும் , அனைத்து பாகிஸ்தானுமே தீவிரவாத குடிமக்கள் என்னும் மனநிலையிலும், இந்திய முஸ்லீம்கள் பாகிஸ்தானியர்களை பாசமுடன் பார்க்கும் போது,
அவர்களோ, இந்தியர்கள் வேலை என்கின்றனர்.
பாகிஸ்தானிலும் , தீவிரவாதம் விரட்ட போராடுவது புரியும்.

தேடுதல் தொடர்கிறது…..
அந்த இதழாளன், கழுத்தறுத்து தலை துண்டிக்கப்படுகிறான்……
யதார்த்த சினிமா என்று நாம் அழுகை – கதறல்- கத்தல் முக்கூடலில் சினிமா எடுக்கும் போது, நமது நாடு தொட்ட ஒரு நாட்டின் பிரச்சனையில், ஹாலிவுட் காரர்கள் அற்புத யதார்த்த சினிமா படைத்துள்ளார்கள்.
அதிலும் தற்போது அமெரிக்காவில் பேராசிரியராக, இஸ்லாம் பெண்ணினவாதியாக உள்ள, மும்பையில் பிறந்த இந்திய அமெரிக்கர் “அஸ்ரா” பாத்திரம் மிக அருமையாக கையாளப்பட்ட ஒன்று.
இஸ்லாம் -யூதர் – அமெரிக்கா – பாக்கிஸ்தான் – இந்தியா – அல்கொய்தா என்ற விவரங்களை மிக நேர்மையாக கையாண்டுள்ளனர்.

இது.. உண்மைக் கதை…
ஆம், டானியல் பெர்ல் என்ற கழுத்தறுக்கப்ட்ட அமெரிக்க இதழாளரின் கதை….

கூகுளில் daniel pearl என்று போட்டு கிளிக்குங்கள். முழுவிவரம் கிடைக்கும்.
மேலும், http://www.danielpearl.org
http://www.asranomani.com/

நாம் படம் எடுத்து, நமக்கு நாமே மதன்ஸ் பார்வை, ஹாசினி பேசும் படம் என்று, கதை விட்டுக் கொண்டிருக்கிறோம் …..

தயவு செய்து, உண்மை அளவுகோலில் விமர்சனம் செய்தாலே , நாளைய தலைமுறையிலாவது நல்ல சினிமா வரும்.
அதுவரை இந்த மாதிரி சினிமா பார்ப்போம்.


Series Navigation