ரிஷி வீதியெங்கும் மன்னர்கள் _ வெண்கொற்றக்குடையிழந்து விரைந்தேகிக் கொண்டிருக்கிறார்கள் வயிற்றுக்குச் சோறிட. சோறு என்பதன் பொருள் சிலருக்குக் கால்வயிற்றுக் கூழாகவும், இன்னும் சிலருக்கு மூன்று வேளை உணவாகவும், மேலும் சிலருக்கு சோறை மீறிய சிறு…
நாவிஷ் செந்தில்குமார் "சாப்பிட்டேன்" என அம்மாவிடமும் "கவலைப்பட வில்லை" என அப்பாவிடமும் "அடுத்த மாதத்திற்குள் வேலை வாங்கிவிடுவேன்" என அண்ணனிடமும் "முதல் மாதச் சம்பளத்தில் உனக்கொரு மடிக்கணினி" என தங்கையிடமும் சொல்ல முடிந்தது... "காலையிலிருந்து…
தமிழ்மணவாளன்நூல்: பெருவெளிப்பெண் ஆசிரியர்: ச.விசயலட்சுமி உயிரியக்கத்தின் அடையாளமெதுவென உடனடியாய் சுவாசத்தைச் சொல்ல முடியும். உடலின் சுவாசம் பௌதீகச் சமன்பாட்டை உடலுக்கு வழங்குவதைப் போல், மனத்தின் சுவாசம், எண்ணங்களால், உணர்ச்சிகளால் செயலூக்கம் கொள்ளச் செய்கிறது. மனத்தின்…
வே பிச்சுமணி தொட்டில் சேலையை விலக்கி கன்னத்தில் ஒருவிரல் வைத்துறங்கும் மகளை பார்த்து கொண்டிருந்தேன் தூங்கிற பிள்ளையை பார்க்காதே என்றாள் அம்மா திடீரென தூக்கத்தில் சிரித்தாள் கடவுள் வந்து சிரிக்க வைக்கிறார் என்றாள் அம்மா…
தினேசுவரி எனக்கும் ஒரு வாழ்க்கை இருந்தது.... அதில் ஒரு இரவும் ஒரு பகலும்.... கடவுள் விட்டுச் சென்ற சில கனவுகளும்.... சின்னதாய் பல நட்சத்திரமும்.. பெரியதாய் சில நிலாக்களும் கால் முளைக்காத மழைத்துளிகளும்.... துணைக்கென…
ஹெச்.ஜி.ரசூல் எனது டயரிக் குறிப்பில் இன்னும் அந்த வார்த்தை இருந்தது. மிதமான வெயிலில் காய்ந்தும் அடைமழையில் நனைந்தும் கொடும்பனியில் உறைந்தும் ஒரு செடியில் பூத்த பூவின்மீது அந்த வார்த்தை உட்கார்ந்து தனது இருப்பை தக்க…
கோ.புண்ணியவான் அப்பாவின் விவரமறியா பொழுதுகளில் அவரின் முதுகு என் சவாரிக்குப்பயனானது அவரின் தோள்கள் உலகம் காண தோதானது பின்னர் உச்சிமுகர்ந்து தலைக்குமேல் தூக்கியபோது பிரபஞ்சம் புலனானது நான் எகிரி குதித்த தருணங்களிலெல்லாம் நெஞ்சு பஞ்சு…
கோ.கண்ணன் 1) மழைச் சுவை. ஊசியிடை நூலென பின்னி இழையும் சுதி லயம் நிறை மழை இசையில் நனைந்து குழைகிறேன் மழலையர்தம் வாயூறலில் கரைந்து மறையும் சிறிய மிட்டாய்த் துண்டென. * 2) கவிதை…
என்.விநாயக முருகன்------ ஆறு வாரங்கள் ஓடிய தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ரியாலிட்டி ஷோவொன்றில் ஆறாவது வாரம் நடந்தது நிஜமான கல்யாணமாம். ஆறு வாரமும் நடந்த சுயம்வர ஒளிப்பரப்பும், நேர்காணல்களும் நிஜமாம். எல்லாம் முடிந்தபின்னர் எட்டாவது வாரம்…
எஸ்ஸார்சி யானே யமி நீ என் சகோதரன் யமன் நம் பிதா விசுவான் என்னிலே நம் புதல்வனை நிர்ணயிப்போம் நீ என்ன சொல்கிறாய் யமா நமக்கு மூலம் ஒருவன் நீ யோ என் சகோதரி…