செழியன்
தான் யாரென்று தெரியாமலே இறந்து போன முன்னை நாள் அமெரிக்க ஜனாதிபதி!
“ஐயோ! நான் வைச்சிருந்த என்ட நகை ஒன்டையுமே காணேலைஸ. அதை என்ட மகள் களவெடுத்திட்டாள்.”
எழுபது வயது நிரம்பிய ஒரு மூதாட்டி தெருவில் நின்று அழுது புலம்புகின்றாள். அந்த மூதாட்டியின் கண்ணீரும், கதறலும் நிச்சயமாக உங்களை வேதனைப்படுத்தும். பெற்ற தாயின் உடமைகளை யாராவது களவெடுக்கலாமா ? அவர்களுக்கு மனச்சாட்சிதான் உள்ளதா ?
“என்ட கடவுளே! என்ட அம்மாவின்ட நகைகள் எனக்கு எதுக்கு. அவதானே இந்த வீட்டையும், காணியையும், அதோட ஐம்பது பவுண் நகையையும் எனக்குத் தந்தவ. அவ தந்த வாழ்கை இது. அவவின்ட நகை எனக்கு எதுக்கு அம்மாவின்ட நகையை யாரும் களவெடுப்பினமோ ?”
அதே தெருவில் நின்று மகள் இவ்வாறு அழுது பிதற்றுகின்றாள்.
இதில் யாரை நீங்கள் நம்புவது ?
அல்சிமர் என்கின்ற மறதி நோய் வந்த குடும்பங்களில் வந்து தொலைக்கின்ற ஒரு பெரிய பிரச்சனை இது.
கடைசியில் கண்டு பிடிக்கப்பட்டது – அந்த மூதாட்டி தனது நகைகள் அனைத்தையும் ஆட்டுக் கொட்டிலில் இருந்து ஒரு பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்தார் என்பது. தான் ஒளித்து வைத்ததை மறந்துவிட்டார் அந்த மூதாட்டி.
“இந்த படத்தில் இருக்கிறது யார் ?”
திருமதி ராகவனிடம், அவரும் அவருடைய கணவனும் இருக்கின்ற புகைப் படத்தைக் காட்டி கேட்கப்பட்ட கேள்வி இது.
“ஓ மை கோட். ராகவன். He is here.” என்று அந்தப் படத்தைப் பார்த்ததும் மிகுந்த சந்தோசமாக அந்த மூதாட்டி கூறினார்.
“ராகவனுக்குப் பக்கத்தில் இருப்பது யார் ?” என்று மறுபடி கேட்ட போது அவர் கூறிய பதில் “எனக்குத் தெரியாது.”
ராகவனுக்குப் பக்கத்தில் இருப்பது தான் என்பது அந்த மூதாட்டிக்குத் தெரியவில்லை.
உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா ?
இன்னும் ஆச்சரியங்கள் உண்டு.
“மிஸ்டர் சுழயெடன சுநயபயெ! முன்பு ஒரு காலத்தில், அமெரிக்காவின் ஜனாதிபதியாக நீங்கள் இருந்தீர்கள். அது உங்களுக்கு நினைவில் உள்ளதா ?”
முன்னை நாள் அமெரிக்க ஜனாதிபதி சுழயெடன சுநயபயெ இடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி இது.
“இல்லை! நான் அப்படி இருந்ததே இல்லை!”- இது முன்னைநாள் அமெரிக்க ஜனாதிபதி சுழயெடன சுநயபயெ னின் பதில்.
சுழயெடன சுநயபயெ என்ன பொய்யா சொல்லுகின்றார் ?
அதுதான் இல்லை.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக தான் இருந்தது மட்டுமல்ல, தான் யார் ? தனது பெயர் என்ன ? தனது வயது என்ன ? தனக்கு மனைவி, பிள்ளைகள் இருக்கின்றனரா ? தான் இப்போது எங்கு உள்ளேன் ? இன்றைய திகதி என்ன ? நேரம் என்ன ? இவை எல்லாமே மறந்து போய்விட்டது இந்த முன்னை நாள் அமெரிக்க ஜனாதிபதிக்கு.
இன்றைய அமெரிக்க ஜனாதிபதி மட்டுமல்ல, பல முன்னை நாள் அமெரிக்க ஜனாதிபதிகள் அஞ்சலி செலுத்திய போதும்- இந்த முன்னைநாள் அமெரிக்க ஜனாதிபதி சுழயெடன சுநயபயெ தான் யார் என்பது தெரியாமலே யடணாநைஅநச நோயினால்; இறந்து போனார்.
இந்த முன்னை நாள் அமெரிக்க ஜனாதிபதியை விட்டுவிடுங்கள். கடவுளுக்கே இந்த யடணாநைஅநச நோய் வந்தால் கூட அவருக்கும் தான் யார் என்பது மறந்து போய்விடும்.
இந்த நோய் வந்தவர்களுக்கு இறப்பு நிச்சயம். அது எப்போது ஏற்படும் என்பது சொல்லமுடியாது ? ஆனால் நிச்சயமாக 3 வருடங்களில் இருந்து 20 வருடங்களுக்குள் அந்த மரணம் நிகழ்ந்து விடும். ஒன்பது வருடங்களுக்குள் மரணம் நிகழலாம் என்ற ஒரு கருத்தும் உண்டு.
கனடாவில் அறுபத்தி ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களில் இருபதில் ஒருவருக்கு இந்த மறதி நோய் உள்ளது. 85வயதுக்கு மேற்பட்டவர்களில் நாலில் ஒருவருக்கு உள்ளது.
2000ம் ஆண்டு 300 ஆயிரம் பேருக்கு இந்த அல்சிமர் நோய் இருந்தது. இது 2011ம் ஆண்டு 500 ஆயிரமாகவும், 2031ல் 750 ஆயிரமாகவும் உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மூளையில் உள்ள நேசஎந கலங்கள் இறந்து போகின்ற படியால் இந்த நோய் ஏற்படுகின்றது.
வழமையாகவே வயது போகப் போக மூளையில் உள்ள நேசஎந கலங்கள் இறந்து கொண்டுதான் இருக்கின்றன. அதனால் மறதி உட்பட பல பிரச்சனைகள் மனிதருக்கு உருவாகுகின்றது. ஆனால் அதுவும் அல்சமர் என்கின்ற மறதி நோயும் ஒன்றல்ல.
“பிள்ளை தம்பி எங்க போட்டான் ?”
“அண்ணை வேலைக்குப் போயிட்டார் அப்பா!”
சில நிமிடங்கள் கழிகின்றது.
“பிள்ளை தம்பி எங்க போட்டான் ?”
“அண்ணை வேலைக்குப் போயிட்டாரப்பா!” – பதில் சற்று எரிச்சலுடன் வருகின்றது.
இன்னம் சில நிமிடங்கள் கழிகின்றது.
“பிள்ளை தம்பி எங்க போய்ட்டான் ?”
“எத்தனை தரம் அப்பா சொல்லுறது.. ஒருக்கா சொன்னா விளங்காதா ?”
இப்படி ஒரு உரையாடல் ஒரு வீட்டில் நடக்கின்றது என்றால் அந்த வீட்டில் அல்சிமர் நோய் புகுந்து விட்டது என்று சந்தேகம் கொள்ளலாம்.
அப்பா ஏன் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியை கேட்கின்றார் என்று புரிந்து கொள்ள வேண்டும். அது ஒரு நோயின் அடையாளம் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். அதை விடுத்து அப்பா மீது எரிச்லும், கோபமும் கொள்வதினால் ஒரு பயனும் இல்லை.
அல்சிமர் நோய் வந்தவர்களுக்கு சில குணங்கள்; ஏற்படும்.
திரும்பத் திரும்ப ஒரே கேள்வியை கேட்பார்கள்.
சிறுநீர் கழிக்கப் போவார்கள் பிறகு மறுபடியும் தமது அறைக்குப் போகவேண்டும் என்பதை மறந்து வேறு வழியாக சமையல் அறைக்குள் புகுந்து விடுவார்கள்.
சயைல் அறைக்கு சமைக்க வருவார்கள். அடுப்பை திறந்து விட்டுப் பிறகு திடாரென அது மறந்து போய் தமது அறைக்குள் போய் படுத்து விடுவார்கள்.
பணத்தை எங்காவது ஒளித்து வைப்பார்கள். பிறகு தாம் எங்கு பணத்தை வைத்தோம் என்பதை மறந்து போய்விடுவார்கள். ஆனால் பணத்தை காணவில்லை. அதை தனது பிள்ளைகள் களவெடுத்துவிட்டார்கள் என்று சண்டை பிடிப்பார்கள்.
ஐம்பது வருடங்களாக தம்மோடு வாழ்ந்த தமது மனைவியின் மீது சந்தேகம் கொள்வார்கள். மனைவியின் மீது திருட்டுப் பட்டம் கட்டுவார்கள்.
தொடர்ச்சியான செயல்முறைகள் எல்லாம் அவர்களுக்கு மறந்து போய்விடும்.
கடிதம் எழுதுவார்கள். பிறகு அதை உறையில் இட்டு மூடி, முத்திரை ஒட்டி, பின்னர் தபால் பெட்டியில் போட வேண்டும் என்பது தெரியாது.
“அப்பா குளிச்சு, சாப்பிட்டு, வேட்டி சால்லை கட்டி வெளிக்கிட்டு வாங்கோ! கலியாண வீட்டை போகவேண்டும்” என்று சொன்னால் என்ன செய்வது என்று தெரியாமல் பேசாமல் கதிரையில் அமைதியாக இருப்பார்கள்.
தொடர்ச்சியான உங்கள் கட்டளைகளை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.
கத்தரிக்காய் படத்தை காட்டி என்ன என்றால் அது கத்தரிக்காய் என்று சொல்வார்கள்.
பார்த்த படத்தை கீறித்தருமாரு கேட்டால் தாம் என்ன படத்தை பார்த்தோம் என்பதை மறந்து போயிருப்பார்கள்.
இதற்கு எல்லாம் காரணம் மூளையில் உள்ள நேசஎந கலங்கள் இறந்து போவதும், அதன் காரணமாக ஒரு தொழில் பாட்டுக்கும், இன்னோரு தொழில் பாட்டுக்கும் உள்ள நரம்பு தொடர்ச்சி அற்றுப் போவதுமே ஆகும்.
அத்தோடு அல்சிமர் நோய் உள்ளவர்களுக்கு உடனடியாக நினைவுகள் எதுவும் மூளையில் பதிவு செய்யப்பட மாட்டாது.
“அண்ணா வேலைக்குப் போயிட்டார் அப்பா” என்ற பதில் அல்சிமர் நோயாளிகளின் மூளையில் பதிவு செய்யப்பட மாட்டாது. ஏன் என்றால் அப்படி பதிவு செய்ய வேண்டிய மூளைக்கலங்கள் அழிந்து போய்விட்டன.
ஆனால் தனக்கு ஒரு மகன் இருந்தான் என்ற பழைய விடயம் மூளையில் பதிந்து கிடக்கும். காலக்கிரமத்தில் அதுவும் பின்னர் மறந்து போய்விடும். பின்னர் பதினைந்து வயதில் தான் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்தது மட்டும் நினைவில் நிற்கும்.
ஒரு பொது இடத்தில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது தெரியாமல் இருப்பார்கள். சட்டையை போட்டு விட்டு அதற்குரிய பொத்தானை அரை மணி நேரமாக திரும்பத் திரும் போட்டுக் கொண்டிருப்பார்கள்.
இலங்கையில் இருந்து கனடாவுக்கு வந்த ஒருவருக்கு அல்சிமர் நோய் ஏற்பட்டால் அவர் தான் கனடாவில் இருக்கின்றேன் என்பதை மறந்துவிடுவார். அவருடைய நினைவைப் பொறுத்த வரை அவர் தான் யாழ்ப்பாணத்தில் இருப்பதாகவே வாழ்வார். அதனால் யாழ்ப்பாணத்தில் எப்படி வேலிக்குப் பின்னால் சிறு நீர் கழித்தாரோ அது போல, கனடாவில் தான் இருக்கின்ற அறையின் ஒரு மூலையில், அல்லது கட்டிலுக்குப் பின்னால் சிறுநீர் கழிப்பார்.
தந்தைக்கு வந்துள்ளது அல்சிமர் என்கின்ற பயங்கரமான நோய் என்பதை புரிந்து கொள்ளாத பிள்ளைகள் “இந்த கிழவன் அசிங்கம் செய்கின்றான்” என்று சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.
அல்சிமர் நோய் வந்தவர்கள் நாட்கள் செல்லச் செல்லச் செல்ல பாலியல் ஒழுக்கம் அற்ற முறையிலும் நடந்து கொள்ளலாம்.
பேசுவது குறைந்துவிடும். ஏன் என்றால் அவர்களுடைய மூளையில் உள்ள வங்கியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சொற்கள் எல்லாம் அழிந்து போயிருக்கும்.
நெஞ்சு நோ அவர்களுக்கு ஏற்பட்டாலும் அதை சொல்ல மாட்டார்கள். ஏன் என்றால் அதை சொல்வதுக்குரிய சொற்களை அவர்கள் மறந்து விட்டார்கள்.
“நெஞ்சு நோகின்றதா ?” என்று நாம் கேட்டால் “ஓம்” என்று சொல்லுவார்கள். “எங்க நோகுது ?” என்று கேட்டால் அதை சொல்ல முடியாமல் தவிப்பார்கள்.
காலக்கிரமத்தில் காலை எழுந்ததும் முகம் கழுவ வேண்டும், சாப்பிட வேண்டும், சிறுநீர் கழிக்க வேண்டும் என்பன எல்லாமே அவர்களுக்கு மறந்து விடும். சாப்பிட மாட்டார்கள். சிறுநீர், மலம் எல்லாமே நின்ற இடத்தில் போகும். அது பற்றி உணர்வு அவர்களுக்கு இருக்காது.
இந்த நோய் வந்தவர்களை எப்படிக் கையாளுவது ? என்பது மிக முக்கியமான ஒரு பிரச்சனை.
அது பற்றி அடுத்த கட்ரையில் பார்க்கலாம்.
செழியன்.
—-
யுடணாநைஅநச
மறதி நோய்-2
தான் யாரென்று தெரியாமலே இறந்து போன முன்னை நாள் அமெரிக்க ஜனாதிபதி!
“எனக்கு ஊரில மனுசி, பிள்ளையள் எல்லாம் இருக்கினம். அவையளை நான் பார்க்கவேணும்” திருநாவுக்கரசு மிகுந்த கவலையோடு கூறிக்கொண்டிருந்தார்.
“ஓ! அவையளுக்கு என்ன வயசாகுது ?”
“மனுசிக்கு வயசு முப்பது இருக்கும். பிள்ளையளுக்கு ஆறு, ஏழு வயசுதான். இப்பத்தான் பள்ளிக் கூடம் போகத்தொடங்கியிருக்கினம். அவையளை ஒருக்காப்போய் பாத்திட்டு வருவம் என்டால்.. அம்மா போறதுக்கு விடுறா இல்லை.”
கனடாவில் நடந்த உரையாடல் இது.
என்ன திருநாவுக்கரசின் அம்மா இவ்வளவு கொடுமைக்காரியா ? என்று ஆத்திரம் அடைந்து விடாதீர்கள்.
திருநாவுக்கரசிற்கு உண்மையில் இலங்கையில் தற்போது யாருமே இல்லை. அவருடைய பிள்ளைகள் எல்லாம் கனடாவுக்கு வந்து, திருமணமாகி தனிக்குடித்தனம் போய்விட்டனர். திருநாவுக்கரசு ‘அம்மா’ என்று கூறியது அவருடைய மனைவியைத்தான். அது தன்னுடைய மனைவி என்று திருநாவுக்கரசுவின் மூளையில் பதிவுகள் எதுவும் இல்லை.
திருநாவுக்கரசின் மூளையில் இப்போதும் மனைவியாக இருப்பது முப்பது வருடங்களுக்கு முன்பு இளமையாக இருந்த அவருடைய இளமைக்கால மனைவி. அவருடைய மூளை பதிவு செய்து வைத்திருக்கின்ற மனைவிக்கும், அவர் முன்னால் இருக்கின்ற உண்மையான மனைவிக்கும் இடையில் நிறைய வேறுபாடு. அதனால் அறுபது வயதில் உள்ள அவருடைய மனைவி அவருக்கு அம்மா என்று தோன்றுகின்றது
இன்னோரு சம்பவமும் மிக அண்மையில் நடந்தது.
சரியான குளிர். வெப்பநிலை -18 க்கு கீழ் இறங்கி விட்டது. எந்த விதமான குளிர் உடுப்புகளும், பாதணிகளும் அணியாமல் ஒரு வயோதிபர் தெருவில் காத்துக் கொண்டிருந்தார். இன்னம் சில நிமிடங்கள் அந்தக் குளிரில் அவர் நின்றிருந்தால் கோமா நிலைமைக்குப் போயிருப்பார்.
அவருடைய நல்ல காலம். யாரோ பொலிசாருக்குத் தகவல் கொடுத்ததினால் காப்பாற்றப்பட்டார்.
வீட்டில் மகனுடனும், மருமகளுடனும் சண்டை போட்டுக் கொண்டு அந்தப் பெரியவர் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார் என்று தப்பாக புரிந்து விடாதீர்கள்.
“அப்பா என்னத்துக்கு குளிர் உடுப்பு ஒன்றும் போடாமல் வெளியில போய் நின்டனீங்கள் ?” மிக ஆறுதலாக ஒரு நாள் மகன் கேட்டார்.
“பனை தறிக்க ஆட்கள் வாறம் என்டு சொன்னவை. அதான் அவையளைப் பார்த்துக் கொண்டிருந்தனான்.”
எல்லாமே அல்சிமர் என்ற இந்த நோயின் விளைவுகள்.
யாரையாவது எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.
நாற்பது வருடங்களுக்கு முன் இறந்து போன மகளுக்கு கொள்ளிவைத்தது இவராகத்தான் இருக்கும். அந்த மகளை எதிர்பார்த்து இன்று இவர் காத்துக்கொண்டிருப்பார்.
“அவள் வாறன் என்டு சொன்னவள் ஏன் இன்னமும் வரேல்லை ?” என்று அடிக்கடி கேள்வி எழுப்புவார்கள். அவளைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்;.
தமது பொருட்களையெல்லாம் யாராவது திருடிவிடுவார்கள் என்ற பயம் இந்த நோயாளிகளுக்கு எப்போதும் உண்டு. அதனால் கத்தி, பேனா, நகை, பணம், உடுப்பு என்று எதையாவது எங்காவது ஒளித்து வைப்பார்கள். பின்னர் அதை மறந்து போய் தமது பொருட்களைக் காணவில்லை யாரோ களவெடுத்துவிட்டார்கள் என்று சண்டை போடுவார்கள்.
“இன்டைக்கு வெள்ளிக் கிழமை.”
“இல்லையம்மா, இன்டைக்கு ஞாயிற்றுக் கிழமை.”
“இல்லை இன்டைக்கு வெள்ளிக் கிழமை.”
“அம்மா. கலண்டரைப் பாருங்கள். இன்டைக்கு ஞாயிற்றுக் கிழமை.”
“இல்லை இன்டைக்கு வெள்ளிக் கிழமை.”
இப்படி சண்டை போடுவார்கள்.
மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு, அதை மறந்து போய் “எனக்கு ஏன் இன்டைக்கு சாப்பாடு தரேலை ?” என்று சத்தம் போடுவார்கள். ஆனால் தனது எட்டாம் வகுப்பில் தமிழ் படிப்பித்த ஆசிரியரின் பெயரை மறக்காமல் ஞாபகம் வைத்திருப்பார்கள்.
அல்சிமர் நோய் வந்தவர்களை மாற்ற முடியாது. ஏன் என்றால் அவர்களுடைய மூளையில் ஏற்பட்ட பாதிப்பினாலேயே அவர்கள் அவ்வாறு செயல்படுகின்றார்கள். அவர்களை ஏசுவதாலோ, சத்தம் இடுவதாலோ, குறை கூறுவதாலோ, அடிப்பதினாலோ மாற்ற முடியாது.
அல்சிமர் நோய் நமது வீட்டில் யாருக்காவது வந்து விட்டால் எங்களைத்தான் நாங்கள் மாற்ற வேண்டும்.
“இன்டைக்கு வெள்ளிக் கிழமை.”
“இல்லையம்மா, இன்டைக்கு ஞாயிற்றுக் கிழமை.”
“இல்லை இன்டைக்கு வெள்ளிக் கிழமை.”
“ஓம் அம்மா இன்டைக்கு வெள்ளிக் கிழமைதான். நான் தான் மறந்து போனன்.” என்று நாம் தான் கிழமையை அவர்களுக்கா மாற்றிக் கொள்ள வேண்டும்.
“மகள் இன்டைக்கு வாறன் என்டு சொன்னவள். என்ன இன்னம் காணேலை” என்டு காத்திருக்கின்ற தந்தையிடம் “அவள் செத்துப் போய் முப்பது வருசமாச்சு.” என்று கூறக் கூடாது.
“ஓம் அப்பா வாறன் என்டுதான் சொன்னவள்பிறகு ஏதோ அலுவலாய் கொழும்புக்கு போட்டாள். அடுத்த மாதம் வாறன் என்டு சொன்னவள்” என்று புளுகு மூட்டையை அவிழ்த்து விடவேண்டும்.
அல்லது “அப்பா, ஏன் அப்பா அவளில உங்களுக்கு ஒரு தனியான பாசம் ?” என்று கதை கேட்டு அவரை திசைதிருப்பி விடவேண்டும்.
பிறகு மகள் வரவில்லையே என்ற பிரச்சனையை மறந்து, மகளைப்பற்றி பாசமாக கதைத்துக் கொண்டிருப்பார்
அல்சிமர் நோய் உள்ளவர்களுக்காக நம்மை நாம் மாற்றிக் கொள்வதினால் ஒரு நட்டமும் கிடையாது.
“அம்மா, குளிச்சிட்டு, உடுப்பு மாத்தி வெளிக்கிட்டு வாங்கோ” என்ற கட்டளை அவர்களுக்கு புரியாது.
“அம்மா குளிச்சிட்டு வாங்கோ” என்று மட்டும் சொல்வது அவர்களுக்குப் புரியலாம். அல்லது துவாய், சவர்க்காரம் என்பனவற்றைக் காட்டி “குளிச்சிட்டு வாங்கோ” என்று சொல்வதுதான் சமயத்தில் புரியலாம். இதற்குக் காரணம், வார்த்தைகளை புரியமுடியாவிட்டாலும், சைகைகளையும், பொருட்களையும் சமயத்தில் புரிந்து கொள்ளக் கூடியதாக அவர்களுக்கு இருக்கலாம்.
குளித்து விட்டு வந்த பின்னர், “அலுமாரிக்குள் இருந்து உங்களுக்கு விருப்பமான ஒரு உடுப்பை போட்டுக் கொண்டு வாங்கோ” என்று கூறக் கூடாது.
அப்படிக் கூறினால் அவர்களுக்குப் புரியாது. அலுமாரி எங்கிருக்கின்றது, அதற்குள் என்ன இருக்கின்றது என்பதெல்லாம் அவர்களின் மூளையில் இருந்து துடைக்கப்பட்டு வெகுநாட்கள் ஆகியிருக்கும். ஓரளவு நினைவுள்ளவர்கள் நீல நிற சீலைக்கு எவ்விதமும் பொருத்தம் இல்லாத வகையில் கடும் சிவப்பு நிற சட்டையைப் போட்டுக்கொண்டு வருவார்கள்.
காற்சட்டையை போட்டபின் அதற்கு மேல் ஜட்டியை ஒருவர் அணிந்து கொண்டும் வரலாம்.
“அம்மா இந்த நீல நிற உடுப்பு உங்களுக்கு விருப்பமா ? அல்லாட்டி சிவப்பு நிற உடுபு;பு விருப்பமா ? என்று கேட்க வேண்டும். அதில் இருந்து ஒன்றை அவர் தெரிவு செய்வார்.
“செம்பில தண்ணி கொண்டுவா” என்பார்கள்.
‘கிளாஸ்’, அல்லது ‘கோப்பை’ என்ற சொல்லை மறந்து விட்டிருப்பார்கள். அந்த சொற்கள் அவர்களுடை மூளையில் இருந்து அழிந்து போயிருக்கும். செம்பு இன்னமும் மூளையில் பதிவாய் இருக்கும். சின்ன வயதில் செம்பில் தண்ணீர் குடித்த பழைய ஞாபகம் மட்டும் அவர்களுக்கு இருக்கின்றது.
“ஓம்” என்று சொல்லி தண்ணீர் கொடுக்க வேண்டியது மட்டும்தான் நமது வேலை.
“சாப்பாடு மேசையில் இருக்கு. போட்டு சாப்பிடுங்கோ” என்றால் அது அவர்களால் செய்ய முடியாது.
சாப்பிடுவது என்றால் எவ்வளவு படி முறைகள் உள்ளன என்பதை முதலில் நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
1. முதலில் சமையல் அறைக்குப் போக வேண்டும்.
2. பிறகு கை கழுவ வேண்டும்.
3. கோப்பை எங்கிருக்கின்றது என்று கண்டுபிடிக்க வேண்டும்.
4. அதில் சோறு கறிகளை போடுவதற்குரிய கரண்டியை கண்டு பிடிக்க வேண்டும்.
5. பின்னர் கோப்பைில் அவற்றை போட வேண்டும்
6. பின்னர் அதை எடுத்துக் கொண்டு மேசையில் அமர வேண்டும்
7. அதன் பின்னர் அதை குழைக்க வேண்டும்
8. பின்னர் வாய்க்குள் வைக்க வேண்டும்.
9. அதை பற்களால் கடித்து அரைக்க வேண்டும்.
10. பின்னர் விழுங்க வேண்டும்.
11. அதன் பிறகு மறுபடியும் உணவை வாய்க்குள் வைக்க வேண்டும்..
இந்த தொடர்ச்சியான செயல்முறைகள் எல்லாம் அல்சிமர் நோய் வந்தவர்களுக்கு நினைவுக்கு வராது.
சாப்பிட என்று போனவர் சமயல் அறையில் சிறுநீர்கழித்து விட்டும் வரலாம். அல்லது சாப்பாட்டுத் தட்டை எடுத்துக்கொண்டு வந்து அதை மணிக் கணக்கில் வைத்துக் கொண்டும் இருக்கலாம்.
இதற்குப் பதிலாக நாம் அவர்களுடைய சாப்பாட்டை தட்டில் போட்டுக் குழைத்து, ஊட்டிவிட வேண்டும்.
அப்போதும் கூட அதை அவர்கள் விழுங்காமல் வாயினுள் வைத்துக் கொண்டிருக்கலாம். இத்தகைய நிலையில் நாமும் உணவை சாப்பிட்டு வாயைத் திறந்து ஒன்றும் இல்லை,அதை விழுங்க வேண்டும் என்று அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
அல்சிமர் நோய் ஏற்பட்டவருக்கு அல்சிமர் நோயைப் பற்றி எதுவும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அதைப்பற்றி மட்டும் இல்லை, எதைப்பற்றியும் எதுவுமே தெரிந்து கொள்ள முடியாத நிலையிலேயே அவர்கள் இருக்கின்றனர்.
அல்சிமர் நோய் வராதவர்களே இந்த நோயைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நோயைப் பற்றி நாங்கள் தெரிந்து கொண்டால் தான், இந் நோய் வந்தவர்களை எம்மால் புரிந்து கொள்ளமுடியும். அது மட்டுமல்ல அவர்களை தகுந்த முறையில் நம்மால் பராமரிக்கவும் முடியும்.
—-
chelian@rogers.com
- நவீன கலை இலக்கிய பரிமாற்றம்
- தி கிங் மேக்கர் : திரைப்படம்
- பெண்ணுடலை எழுதுதல்
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -2 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- “மங்கலான கதைச் சொல்லல்கள்” (எம்.ஜி . சுரேஷின் “37”)
- எச்.முஜீப் ரஹ்மானின் தேவதைகளின் சொந்தக் குழந்தை என்ற பின்நவீனச் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா
- பாரதி தரிசனம்
- சாதனைகள் பலதைத் தனதாக்கிக் கொண்ட சைவமங்கையாின் நவரச மேளா
- சேரனிடம் யார் சொன்னார்கள் ?
- வெகுஜன இஸ்லாம் (Popular Islam)
- விளக்கி, விளக்கித் தேய்ந்தன விரல்கள்
- நார்னியா, ஹாரி பாட்டர், மேட்ரிக்ஸ் – கிருஸ்துவ அடிப்படைவாதம், ஹிந்து மதம் மற்றும் புதுயுக நம்பிக்கைகள்
- கடிதம் (ஆங்கிலம்)
- காப்பாற்றப்படட்டும் மதச்சார்பின்மை : மடிந்தழியட்டும் காஃபீர்கள்
- அரைகுறை நிஜங்களின் ஊர்வலம்
- கடிதம் – ஆங்கிலம்
- கடிதம்
- சண்டக்கோழி – செயல் துண்டுதலும், சமரசமும்
- நான் கண்ட சிஷெல்ஸ் – 15. சிஷெல்ஸ் விநாயகர் கோயில்
- தமிழ் மையம் – மோஸார்ட் இந்தியாவைச் சந்திக்கிறார்
- லண்டன் பூபாளராகங்கள் -2006 விழாக்குழு தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து நடாத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி
- தற்காலத் தமிழ்ப்பெண்ணியம் பற்றி ஓர் ஆணின் சில பதிவுகள்
- ராகு கேது ரங்கசாமி – 2
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-13) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- வரி விளம்பரம்
- அந்த நான்கு பேருக்கும் நன்றி!
- ஈ.வே.ரா. சிறியார் அல்ல
- குழந்தைத் திருமணமும், வைதீகமும்
- பின் நவீன இஸ்லாம் (POST MODERN ISLAM)
- (புதிய) விதியை ஏற்பதா ? (2) கிறிக்கற்
- நேற்றின் மாடல் குல மாணிக்கங்கள்
- புலம் பெயர் வாழ்வு (5) – கென்டயினர் பயணம்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 13
- பெரியபுராணம் –81 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கீதாஞ்சலி (65) என்விழி மூலம் உன் படைப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- சுடாக்கு
- வெள்ளிக்கிழமை யூலை மாதம் (2002-07-12)
- மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்.
- வலியின் மொழி
- கவிதைகள்
- Alzhemier- மறதி நோய்-1
- யாருக்காக அறிவியல் ?