தலைவாசல்

This entry is part [part not set] of 32 in the series 20090512_Issue

கி.பென்னேஸ்வரன்


அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

தலைநகரில் நடைபெறும் கலை மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள் தொடர்பான பதிவுகளை ஒவ்வொரு வாரமும் வடக்கு வாசல் இணையதளத்தில் (http://www.vadakkuvaasal.com) தலைவாசல் என்னும் பெயரில் ஒரு தனி இணைப்பாக வெளிக் கொண்டுவருவதாக அறிவித்து இருந்தோம்.

அந்த முயற்சியின் முதல் அடியாக இந்த வாரம் ஏப்ரல் இறுதி வாரத்தில் இருந்து மே மாதம் முதல் வாரம் வரை எங்களுக்குக் கிட்டிய நிழற்படங்கள் மற்றும் செய்திகளை வைத்து இந்தப் பக்கத்தைத் துவக்கி இருக்கிறோம்.

தற்போதைக்கு டெல்லியில் நடந்த நிகழ்வுகளைப் பதிவேற்றம் செய்திருந்தாலும் வரும் வாரம் முதல் உலகனைத்தும் உள்ள தமிழ் அமைப்புக்கள், கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளின் நிகழ்வுகள் குறித்த பதிவுகளை இங்கே வலையேற்றம் செய்ய இருக்கிறோம்.

http://www.vadakkuvaasal.com என்னும் எங்கள் தளத்துக்கு நீங்கள் வருகை புரிந்தால் தலைவாசல் என்னும் பெயரில் இந்தப் பக்கங்களை நீங்கள் பார்க்கலாம்.

இதுதவிர ஏற்கனவே ராகவன் தம்பி பக்கங்கள் என்னும் பெயரில் என்னுடைய பதிவுகளை முகப்புப் பக்கத்தில் எழுதி வருகிறேன். உங்கள் அனைவரிடமிருந்தும் அன்பும் ஆதரவும் கலந்த ஊக்க வார்த்தைகள் எங்களுக்குக் கிட்டி வருகின்றன.

http://www.vadakkuvaasal.com என்னும் எங்கள் இணைய தளத்துக்கு வருகை புரிந்து ஒவ்வொரு வாரமும் நாங்கள் பதிவேற்றும் தலைவாசல் பக்கங்களை வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தலைநகர் மட்டுமல்லாது உலகம் முழுமைக்கும் உள்ள படைப்பாளிகள், கலைஞர்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள் இந்தப் பக்கத்தை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் தொடர்பான பதிவுகளை நிழற்படங்களுடன் அனுப்பி வைத்தால் தலைவாசல் பகுதியில் மகிழ்ச்சியுடன் வெளியிடுவோம். இயன்றவரை தமிழிலேயே நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புக்களை அனுப்ப வேண்டுகிறோம்.

அன்புடன்

கி.பென்னேஸ்வரன்
ஆசிரியர்


K.PENNESSWARAN
VADAKKU VAASAL
09910031958/09211310455
011-65858656/25815476(Telefax)
http://www.vadakkuvaasal.com

Series Navigation

கி.பென்னேஸ்வரன்

கி.பென்னேஸ்வரன்