உள்ளூர் கோயபல்ஸ்கள்!

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

நல்லடியார்



முஸ்லிம்: ஐயா உங்க பேரென்ன?
மலர் மன்னன்!
முஸ்லிம்: நீங்க எந்த ஊரு?
கும்பகோணம்!
முஸ்லிம்: கும்பகோணத்துல எந்த இடம்?
மேல அக்ரஹாரம்!
முஸ்லிம்: உங்களை நான் காஞ்சிபுரம் கீழ அக்ரஹாரம் கலர் கண்ணன் என்றுதான் அழைப்பேன்!
நான்தான் கும்பகோணம் மேல அக்ரஹாரம் மலர் மன்னன்னு தெளிவாச் சொல்லிட்டேனே! அதனால அப்படியே அழையுங்கள்!
முஸ்லிம்: காஞ்சிபுரம் கீழ அக்ரஹாரம் கலர் கண்ணன்னு உங்களை அழைப்பதை யாரும் ஆட்சேபிக்கவில்லையே! தவிர உங்கள் கண்ணில் வெள்ளை கருப்பு என்று இரு ‘கலர்’கள் இருக்கிறதுதானே? அதை ‘இல்லை’ என்று உங்களால் மறுக்க முடியுமா? அதனால இனி  நீங்க காஞ்சிபுரம்  கீழ அக்ரஹாரம் கலர் கண்ணன்தான்!
மன்னிக்கவும்! என்னைப் பிறர் எப்படி அழைப்பது என்று முடிவு எடுப்பதற்கு பிறரின் ஆட்சேபனையோ ஒப்புதலோ தேவையில்லை. நான் எப்படி அழைக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறேனோ அப்படித்தான் அழைக்க வேண்டும்!
முஸ்லிம்: ஐயா! காஞ்சிபுரத்திலும் அக்ரஹாரம் உண்டு; கும்பகோணத்திலும் அக்ரஹாரம் உண்டு! உங்களைப் பார்த்து காஞ்சிபுரம் கீழ அக்ரஹாரம் கலர் கண்ணன்னு சொன்னால் அதை ஏன் இழிவு படுத்துவதாக எடுத்துக் கொள்கிறீர்கள்? பிரிட்டிஷார் காலத்தில் கூட கலர் கண்ணன் (அல்லது காமாலைக் கண்ணன்)என்ற பெயர் பயன்படுத்தப் பட்டிருக்கிறது தெரியுமா?
மீண்டும் சொல்கிறேன்! நான் எப்படி அழைக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்ய வேண்டியவன் நான் மட்டுமே!கும்பகோணம் கீழ அக்ரஹாரத்தை காஞ்சிபுரம் மேல அக்ரஹாரம் என்று குறிப்பிடுவதால், அது நானல்ல!.
முஸ்லிம்: ஐயா! கும்பகோணம் மேலஅக்ரஹாரம் என்று சொல்வதெல்லாம் ஒரு சம்பிரதாயம்தான்.  எந்த அக்ரஹாரமாக இருந்தாலென்ன? ஏதோ ஒரு அக்ரஹாரம்! இதைப் பெரிதுபடுத்தாமல் விடுங்களய்யா! கும்பகோணம் அக்ரஹாரத்தை விட காஞ்சிபுரம் அக்ரஹாரம் கொஞ்சம் பிரபலமானது (POPULAR) தெரியுமா? அதனால கும்பகோணம் மேல அக்ரஹாரம் என்பதை விட காஞ்சிபுரம் கீழஅக்ரஹாரம் என்பதே சரியானது!
திரும்பத் திரும்ப அரைச்சமாவையே அரைக்கிறீங்க! என்னதான் நீங்கள் கும்பகோணத்து மேல அக்ரஹாரத்து மலர் மன்னனை காஞ்சிபுரம் கீழ அக்ரஹாரம் கலர் கண்ணன் என்றழைத்தாலும், கலர் கண்ணன் மலர் மன்னன் ஆகமாட்டார்! உங்கள் கூற்றிற்கு என்னுடைய ஆதரவு (SUPPORT) என்றுமே இருக்காது; கும்பகோணம் மேல அக்ரஹாரம் மலர் மன்னன் என்பதே (POPULAR) பிரபலமானது;காஞ்சிபுரம் கீழ அக்ரஹாரம் கலர் கண்ணன்  (NOT POPULAR).
POPULAR/SUPPORT என்பதற்குச்  சரியான விளக்கத்தை கொடுத்துள்ளேன்.  முதலில் அதைப் படித்து விட்டு வாருங்கள்! பிறகு பேசலாம்!!
****
முஹம்மதியம்/முஸ்லிம்கள் குறித்த மலர் மன்னனின் வாதங்களை வாசித்து வரும் திண்ணை வாசகர்களுக்கு மேற்கண்ட உரையாடல் எரிச்சலைத்  தந்திருக்காது என்று நினைக்கிறேன்.  முஹம்மதியர் என்ற சொற்பிரயோகம் முஸ்லிம்களைக் முழுமையாக அடையாளப்படுத்துவது ஆகாது  என்று பலரும் பலமுறைச் சொல்லியும் விடாப்பிடியாக முஸ்லிம்களை, முஹம்மதியர் என்றுதான் அழைப்பேன் என்று தனது நீண்டகால அறியாமையை நியாயப்படுத்த முனைந்துள்ளார்.(சுட்டி #1 )

முஹம்மதியர் என்பது இழிசொல்லல்ல. முஹம்மது  நபியை  மட்டும்  முஸ்லிம்கள் நபியாகக் கருதவில்லை. நபிமார்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதியானவர் என்பதையே நம்புபவர்களே முஸ்லிம்கள்!   இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றும் முஸ்லிம்ககளின் பூர்வீக அடையாளத்தைச் சிதைப்பதாக இருப்பதாலேயே, முஹம்மதியர் என்ற சொற்பிரயோகம்  முஸ்லிம்களைக் முழுமையாக அடையாளப்படுத்தாது என்பதே வஹ்ஹாபி  மற்றும்  இப்னு பஷீரின்  வாதம்! 
//முகமதியம், முகமதியர் என்ற பெயர்கள் முகமதியரிடையே பிரபலமாக இல்லை என்றுதான் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு அவர்கள் இடையே எதிர்ப்போ மறுப்போ ஆதரவின்மையோ இருப்பதாகத் தெரிவிக்க வில்லை. முகமதியர் அல்லாதோர் அவ்வாறு பயன்படுத்தலாகாது என்று முகமதியர் கருதுவதாகவும் அவர் கூறவில்லை.//
என்று தலைக்கீழாக நின்று தண்ணீர் குடிக்க முயன்றுள்ளதன் நோக்கம் விளங்கவில்லை. ஒரே கருத்தை ஆங்கிலத்தில் வெவ்வேறு சொற்களில் சொல்லலாம் என்பதும்,முஸ்லிம்கள் குறித்து நூலெழுதிய நூலாசிரியர் முஹம்மதியர் என்பது முஸ்லிம்களைக் குறிக்காது என்று  தெளிவாகச்  சொல்லி  இருந்தும், முஹம்மதியர் என்று விளிப்பதற்கு முஸ்லிம்களிடம் எதிர்ப்போ மறுப்போ ஆதரவின்மையோ இருப்பதாகத் தெரிவிக்கவில்லை என்று மீண்டும் மீண்டும்  திருகுதாளம் செய்கிறார்.
முஸ்லிம்கள் எவ்வாறு தங்கள் எதிர்ப்பை/மறுப்பை/ தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்? இப்னு பஷீரும் வஹ்ஹாபியும் முஸ்லிம்கள்தான் என்பதையும், அவர்கள் பதில் கருத்துக்களால் எதிர்ப்பதையும் மலர் மன்னன் அறிந்தும் தன்னைத் திருத்திக் கொள்ள முன்வராததன் மூலம், தனது முதிர்ச்சியின்மையை அம்பலப்படுத்திக் கொள்ள வேண்டுமா என்பதை அவரின் முடிவுக்கே விட்டுவிடுவோம்!
//பிரஸ்தாப ஆங்கிலச் சொல்லான ‘பாப்புலர்’ என்பதன் சரியான பொருள் “பிரபலம்’ என்பதாகும். “ஆதரவு’ என்று மொழியாக்கம் செய்வதானால் ஆங்கிலச் சொல் “ஸப்போர்ட்’ என்பதாக இருக்க வேண்டும். முகமதியம், முகமதியர் என்ற பெயர்கள் முகமதியரிடையே பிரபலமாக இல்லை என்றுதான் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். //
POPULAR என்ற ஆங்கிலச் சொல்லுக்கு “Regarded with great favor, approval, or affection especially by the general public” பொதுமக்களின் அபிமானத்திற்கும் ஒப்புதலுக்கும் உட்பட்டு பரவலாக மதிக்கப்படுதல்” என்று அர்த்தம் கொடுக்கப்படுகிறது. Not popular among muslims என்றால் முஸ்லிம்களின் அபிமானத்தைப் பெறாத/ ஏற்கப் படாத சொற்பிரயோகம் என்றே பொருள் கொள்ளல் வேண்டும். பலராலும் ஏற்கப்படாத ஒன்று நிச்சயம் ஆதரவு (SUPPORT) இல்லாத ஒன்றே என்பதைப் புரிந்து கொள்வதில் மலர் மன்னனுக்கு என்ன சிரமமோ தெரியவில்லை!
கோயபல்ஸ் பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம்! ஹிட்லர் காலத்தில் இருந்த விதூஷகர்களில் ஒருவன்! ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தால் மக்களிடம் பிரபலமாகி பிற்காலத்தில் அதுதான் உண்மையோ என்ற சந்தேகம் எழுந்து, பிறகு அதுவே உண்மையாகிவிடும் என்ற புரட்டுக் கருத்துருவாக்கத்தைக் கொண்டிருந்தான்!
பலருக்கும் பிரபலமல்லாத (UNPOPULAR) முஹம்மதியர் என்ற பதத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கும் மலர் மன்னன் மற்றும் ஆதரவாளர்களை (Supporters) காணும்போது, கோயபல்ஸ்கள்  உள்ளூரிலும்  இருக்கிறார்களோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.
URL : http://athusari.blogspot.com
Email: nalladiyar@gmail.com
====================
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80805152&format=html

Series Navigation

நல்லடியார்

நல்லடியார்