‘மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்’ – ஜெயானந்தன் எழுதிய புத்தக மதிப்புரை

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

தேவமைந்தன்


அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.
‘மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்’ –
ஜெயானந்தன் எழுதிய புத்தக மதிப்புரை கண்டேன். எளிமையாகவும் சுருக்கமாகவும் இருந்தது.
முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் மாணவ முயற்சி இந்நூல் என்றறிய வியப்பாகவுள்ளது.
“மராட்டியர்கள் இங்கு கொள்ளையடிக்க வரவில்லை; தமிழ் மன்னர்களுக்கு உதவத்தான் வந்தனர்” என்பது காத்திரமான அவதானிப்பாகவுள்ளது.
மூன்று இயல்களாலான இந்தப் புத்தகம் மராத்திய மன்னர்களைக் குறித்த மறுபார்வையை நம்முன் வைக்கிறது என்பதை ஜெயானந்தன் வரிகளால் உணர்கிறேன்.
புத்தக மதிப்புரையில் தாம் முன்வைக்கும் கருத்தாடலுக்கு புத்தகத்திலிருந்து ஒரு சான்றையேனும் முன்வைக்கலாமல்லவா என்று ஜெயானந்தனைக் கேட்டுக் கொள்கிறேன்.
நான் இதுவரை செய்துள்ள புத்தக மதிப்புரைகளில் அவ்வாறே செய்துவந்துள்ளதைத் திண்ணையில் வாசித்து வந்திருந்தால், ஜெயானந்தன் மறுக்க மாட்டாரென்று நம்புகிறேன்.

அன்புடன்,
தேவமைந்தன்


pasu2tamil@yahoo.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்