ஜெ.மோவின் சுவாரசியம் என்பது என்ன என்கிற கட்டுரை பற்றி

This entry is part [part not set] of 37 in the series 20070830_Issue

ஸ்ரீனி


அன்பர் திரு.ஜெ.மோவின் சுவாரசியம் என்பது என்ன
என்கிற கட்டுரை பற்றியது இது.

வணிக எழுத்துக்கள் இலக்கியமாகாது என்ற ஒரு கருத்து பெரும்பான்மையாக உள்ளது.அதே போல ஜனரஞ்சகம் என்பதும் இலக்கியவாதிகளுக்கு ஒரு கெட்ட வார்த்தை. சுவாரசியமா..கிட்டவே வரக் கூடாது!ஜெ.மோ அவர்கள் குறிப்பிட்டது போல கல்கி அவர்களின் எழுத்து ஜனரஞ்சக,சுவாரசிய வகைக்கு நல்ல உதாரணம்.அவர் குறிப்பிட்ட சிலருடன், இன்னும் சில நல்ல எழுத்தாளர்களும் தமிழில் உண்டு.ஆனால் அவர்கள் தங்கள் சுவாரசிய ஜனரஞ்சக எழுத்தினால் இலக்கியவாதிகளாக ஏற்கப்படவில்லை.

இலக்கியம் என்பது இதுதான் அது என்று என சுட்டிக் காட்ட முடியாத ஒன்று என்பது என் கருத்து.வாழ்வின் ஓட்டத்தில் வந்த அநுபவங்கள், யதார்த்தங்களை வேறு கோணங்களில் பரவலாக பார்க்க வைத்து விட்டது. ஜெ.மோ அவர்கள் முன்பு ஒரு முறை கூறியது போல “இங்கயும் தண்ணி மேலேர்ந்துதானே விழுது” என்கிற அந்த கிராமத்து மனைவியின் நிலைதான் நிஜமான யதார்த்தமாகப் படுகிறது.நிறைய அருவிகள் பார்த்த பிறகுதான் இது புரிகிறது.ரியலிசம் என்பதே பற்பல variablesகளை உள்ளடக்கிய கற்பனையின் ஒரு domainதானே.

நல்ல எழுத்து அது கற்பனைக் கதையானாலும் சரி,கனமான சமாச்சாரமானாலும் சரி,வாசகர்களை தன்னுடன் கூட்டிச் செல்லும். ஜெ.மோ அவர்கள் கூறியது போல,கனத்த நூலையும் சுவாரசியமாக ரசித்து படிக்க முடியும் என்றால்,அது அந்த எழுத்தின் வெற்றி. வாசகனை தக்க வைத்து தன்னுடன் கூட்டிச் செல்லும் எழுத்தின் கருத்துக்களுக்கு வீச்சும் அதிகம்,ஆயுளும் அதிகம்.இதுதான் கல்கி போன்றோரின் எழுத்துக்களில் பல ஆண்டுகளுக்குப் பின்னும் சுவை கம் சுவாரசியம் குன்றாததின் ரகசியம்.

வாசகனை குறை மதிப்பிட்டு எழுதும் எழுத்தும்,கற்பனைக் கதைக்குக் கூட பரியும் அதன் மேல் அழகரும் வந்துதான் புரிய வைக்க வேண்டும் என்கிற எழுத்தும்தான் இலக்கியம் என்றில்லாமல்,சுவாரசியத்திலும்,ஜனரஞ்சகத்திலும் கூட இலக்கியம் மலரும் என்கிற உண்மையை மொழிந்த ஜெ.மோ அவர்களுக்கு ஒரு வாசகனாக என் நன்றி.

ஸ்ரீனி


kmnsri@rediffmail.com

Series Navigation

ஸ்ரீனி

ஸ்ரீனி