கண்ணன்
ஹெச்,ஜி. ரஸ¥ல் அவர்கள், இஸ்லாத்தின் ஏக இறை தத்துவத்தைப் பற்றியும் இஸ்லாத்தின் வணக்க முறைகள், நோன்புகள் பற்றியும், ஒரு இஸ்லாமானவருக்கே உள்ள பெருமையொடு சொல்கிறார். நல்லது. அதில் அவருக்கு உ¡¢மையுள்ளது. நமக்கும் ஆட்சேபிக்க ஒன்றுமில்லை.
அனால், ஒரு சில விஷயங்களில் கொஞ்சம் தெளிவிருந்தால் நல்லது.
ஒன்று: பசு வதைத் தடை மூலமாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் ஆகியோ¡¢ன் மலிவான உணவுப் பழக்கத்திற்கு வேத மார்க்கம் ஊறு விளைவிப்பதாகச் சொல்கிறார்.
முதலில் தாழ்த்தப் பட்டோர் அனைவருமே பசு மாமிசம் சாப்பிடுபவர் அல்லர்; அதனாலேய அவர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்திருக்கிறார்கள். பசு மாமிசம் தள்ளுபடி இல்லை என்று இருக்கும் பிரிவினர்கூட அதைச்சாப்பிடுவதே எங்கள் உரிமை; அந்த உரிமையை நான்கள் என்னாளும் விட்டுத்தரமாட்டோம் என்று பிடிவாதம் பிடிப்பவர்களாக இல்லை. மாறாக, நியாயத்தை எடுத்துச் சொன்னால் அந்தப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ப்வராகவே இருக்கிறார்கள்; எனவே தாழ்த்தப்பட்டவர் உணவுப்பழக்கம் பற்றிய பிரச்சனை எதுவும் இல்லை.
சா¢, இந்த விஷயதில் சிறுபான்மையோர் அதிலும் குறிப்பாக இஸ்லமானவா¢ன் மன நிலை என்ன?
தம்முடைய இறை நம்பிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புள்ள இவர்கள், இந்த நாட்டில் வழும் மக்களில் பெரும்பான்மையோர்களால் இறை அம்சம் உள்ளதாக நம்பப்படும பசுக்களை ‘குர்பானி’ கொடுக்காமல் தவிர்த்தால் என்ன? தம் நம்பிக்ககளைப் பற்றி பெருமையோடு நினக்கும் இவர்கள் அடுத்தவா¢ன் நம்பிக்கைககுக்கும் மரியாதை கொடுத்தால் என்ன? அதுதானே உண்மையான நல்லிணக்கம்.
மேலும், பசு வம்சங்களின் விவசாயத்திற்கான பயன்பாடு இன்றும் குறைந்து விடவில்லை. இன்னும் அந்தத் தேவை அதிகமாகவே இருக்கிறது. விவசாயத்தின் மொத்தப் பணித்தேவைகளுக்கான ட்ராக்டர், டில்லர் போன்ற இயந்திரங்களின் உற்பத்தியும் இன்னும் முழுமையடையவில்லை; அவை குறைவாக இருப்பதும் நல்லதே.
அந்த இயந்திரங்களால் தொடர்ந்து ஏற்படும் எண்ணைச் செலவு-அன்னிய செலாவணி இழப்பு, அவை உற்பத்தி செய்யும் சுற்றுப்புற மாசு, நமது சிறு விவசாயிகளின் குறைவான வாங்கும் சக்தி இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது மாட்டைக் கொண்டு பணிகளை நடத்துவதே லாபகரமானது. தின்னும் வக்கோலுக்கு சாணி போட்டுவிடும்; அது புதுப்பிக்கத்தக்க மாற்று எரி சக்தி-இயற்க்கையான உரம். இறந்தபின் தோல் பயன்படும்; சுற்றுப்புற மாசுமில்லை, நஷ்டமுமில்லை.
நல்லது, முக்யமான விஷயத்திற்கு வருவோம். நான்கு வேதங்களும் இன்னபிற ஹிந்து நூல்களும் ஓர் இறைக் கொள்கையையே எடுத்து ஓதுவதாகச்சொல்கிறார். இதே விஷயத்தை வேறு வலைத்தளங்களில் இன்னும் சில இஸ்லாமான அன்பர்களும் எழுதியிருந்த்தைப் படித்தேன். ஆச்சர்யமாக இருந்தது; அப்படியானால் இவர்கள் வேதங்களையும், கீதையையும் ஒப்புக்கொள்கிறார்களா!
ஸ்ரீமத் பகவத் கீதையில் ‘என் ஒருவனையே சரணடை’ என்று பகவான் கிருஷ்ணர் சொல்கிறார். சரணடையப்படவேண்டியவர் ஸ்ரீ கிருஷ்ணன்தான் என்பதை ஒப்புக்கொள்கிறார்களா!
எல்லாவற்றையும் சொல்லிவிட்டு கடைசீயில் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனைப் பார்த்து, “அப்பனே! நான் சொல்ல வேண்டியவைகளையெல்லாம் சொல்லிவிட்டேன்; எல்லாவற்றையும் நீ நன்கு யோசித்து உனக்கு ஏற்றதை தீர்மானம் செய்து கொள்” என்று சொல்கிறார். இப்படியே குரானும் சொல்கிறதா?
நான் பு¡¢ந்து கொண்டவரை, இஸ்லாம் சொல்லும் ‘ஒன்று’ என்பது ஒன்று எனும் எண்ணிக்கையையே குறிப்பிடுகிறது; வேதாந்தம் சொல்லும் ‘ஒன்று’ என்பது ஒருமையைக் குறிக்கிறது.
அதாவது, அங்கிருப்பதுதான் இங்கும் இருக்கிற்அது, இங்கிருப்பதுதான் எங்கும் இருக்கிறது அந்த வகையில் அனைத்தும் ஒன்றுபட்டதே. அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்பதே வேதாந்தக் கருத்தாக உள்ளது.
படைத்தவனும் படைக்கப்பட்ட பொருளும் ஒன்றே எனபதையே வேதாந்தம் சொல்கிறது. இதைத்தான் குரானும் சொல்கிறதா?
அப்படியானால் இரண்டாவதைப்பற்றிப் பேசுபவனை இஸ்லாமானவர்கள் கா·பிர் என்கிறார்களே ஏன்? வேதாந்திகள் முப்பத்து முக்கோடி என்று பேசினாலும் அந்த ஒன்றின் ஒடுக்கத்தில் அடங்குகிறார்கள்.
வேதங்களும் சிவ, விஷ்ணுவைப் பற்றிப் பேசுகிறது; அதன் அடிப்படையில் அமைந்ததாகச்சொல்லப்படுகிற புராணங்களும் அவதாரங்களைப் பற்றிப் பேசுகின்றன; அத்வைத சிந்தாந்தை நிறுவிய ஸ்ரீ ஆதி சங்கரரும் அறு வகைச் சமயத்தை ஒழுங்குபடுத்தினார்; அத்வைதத்தின் அடிப்படையில் அவற்றை மறுதலிக்கவில்லை–அவை, சிவனைப்போற்றும் சைவம், விஷ்ணுவைப் போற்றும் வைணவம், சக்தியைப் போற்றும் சாக்தம், குமரனைப் போற்றும் கௌமாரம், ஸ¥ர்யனைப் போற்றும் சௌரம், கணபதியைப் போற்றும் காணாபத்யம்–இவை ‘அத்வைததிற்கு’ தடையுமில்லை; வேதத்திற்கு முரணும்¢ல்லை.
வேதமும் “ஏகம் ஸத்-விப்ராஹா பகுதா வதந்தி” என்றே சொல்கிறது; அதாவது சத்தியம் ஒன்றே; அதை விவரம் அறிந்தவர்கள் பலவிதமாக வர்ணித்துச் சொல்கிறார்கள் என்று சொல்லி மனித சிந்தனைக்கு சுதந்திரம் கொடுக்கிறது.
இது குரானுக்கு ஆகுமானதா?
கண்ணன்
கும்பகோணம்.
kannankumbakonam@yahoo.com
- 7 th FILCA International Film Festival
- காதல் நாற்பது (17) என்னிடத்தைத் தேர்ந்தெடு !
- தில்லியில் ஒரு நாடக விழா
- யாகாவராயினும் �நா�காக்க
- இலை போட்டாச்சு ! -25 – எலுமிச்சம்பழச் சாதம்
- தமிழ்நூற்கடல் தி.வே. கோபாலையர் மறைவு (22.01.1926 – 01.04.2007)
- காரைக்கால் அம்மையார் பின்தள்ளப் பெற்றதன் சூழலும் அதில் உள்ள ஆணாதிக்க அரசியலும்
- ஆவுடையக்காள் பற்றிப் பாரதியார் கூறாது மறைத்ததேன்?-ஆய்வறிஞர் சு.வேங்கடராமனின் கேள்வி
- தமிழரைத் தேடி – 1
- திருக்குறள் விழாவில் விளம்பரமோகம்
- இராணுவ ஏவுகணைகள் படைத்த இந்திய மேதை டாக்டர் அப்துல் கலாம் -3
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 15
- திண்ணையில், எச். ஜி. ரசூல் மதங்கள் குறித்து
- காந்தி-பெரியார் பற்றி அருணகிரி
- நண்பர் அருணகிரிக்கு அன்புடன் ஓர் மறுமொழி.
- ஒன்று என்றால் ஒன்றுதானா?
- கி.மு. – கி.பி.க்களின் கட்டுடைப்பு
- கடிதம்
- மடியில் நெருப்பு – 34
- நட்பா, காதலா
- ஒரு சொல்.. தேடி..
- புரியாத புதிர்
- பெரியபுராணம்- 129 44. கணநாத நாயனார் புராணம்.
- காலமும் காலமும்/ பாரதியார் சாலை
- வார்த்தைகளாய் மாறிய சூபியின் ரத்தம்
- அம்மாவுக்காக சில வரிகள்
- கண்ணீர் விட்டு வளர்த்த கதை!
- ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – காந்தி கிரியும்,கருத்துச் சுதந்திரமும்
- சிறுபான்மை, பெரும்பான்மை, மனப்பான்மை..
- நாதஸ்வாமி
- நாவல்: அமெரிக்கா II – அத்தியாயம் ஆறு: மழையில் மயங்கும் மனது!
- கால நதிக்கரையில்… – அத்தியாயம் – 3
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:8)
- மாத்தா ஹரி – அத்தியாயம் 6