நாகூர் ரூமிக்கு எனது பதில்

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

விஸ்வாமித்திரா


———————

திண்ணையில் நாகூர் ரூமி என்பவர் இலக்கிய விமர்சகர் திரு.வெ சா அவர்கள் மீது வீசிய அவதூறுகளைக் கண்டித்தும், ரூமி ஒரு மதத் தீவீரவாதி என்பதை நீரூபித்தும் நான் எழுதிய கடிதத்திற்கு, தமக்குத் வசதியான சில பகுதிகளை மட்டும் எடுத்துக் கொண்டு அபத்தமாக தன் வாதங்களை எடுத்து வைத்து மீண்டும் மீண்டும் தான் ஒரு மத அடிப்படைவாதிதான் என்பதை மிகத் தெளிவாக ஒத்துக் கொண்டு நிரூபித்துள்ளார். அவரது ஒப்புதல் வாக்குமூலத்துக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி ரூமி எழுதிய பதில்களுக்கு எனது பதில்கள். அடைப்புக் குறிக்குள் இருப்பது ரூமி எழுதியது:

<< கொஞ்ச காலமாகவே திண்ணையில் இஸ்லாத்தைப் பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சிலர் இஸ்லாத்தின் மீதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், என்னைப் போன்ற தனிப்பட்டவர்கள் மீதும் வெறுப்பையும் அவதூறையும் சொல்வதற்கு வாய்ப்பாக திண்ணையைப் பயன்படுத்தி வருகின்றனர். நான் ஒரு அடிப்படைவாதி, பத்ரி ஒரு இரட்டை வேடதாரி இப்படி. >>

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நீங்கள் பரப்பிய அவதூறுக்களையும், விடுத்த கொலை மிரட்டல்களையும் விடவா இங்கு வேறு யாரும் தவறாக எழுதி விட்டோம். நீங்கள் ஒரு அடிப்படைவாதி என்பதனை உங்கள் பதிலே மிகத் தெளிவாகக் கூறுகிறதே. அதைத் தானே நானும் பிறரும் சொல்லுகிறோம். அதற்கு ஏன் கோபித்துக் கொள்ளுகிறீர்கள் ? நீங்கள் சொன்னதை நாங்கள் திருப்பிச் சொன்னால் ஏன் கோபம் ? நீங்கள் அடிப்படைவாதி போல் பேசினால் அப்படித்தான் நாலு பேர் சொல்வார்கள். நீங்கள் அடுத்தவனைக் கொலை செய்ய வேண்டும் என்று சொல்வீர்கள், ஆனால் மற்றவர்கள் அதைச் சுட்டிக் காட்டினால் அதுதான் ஆம்பூர் நியாயமோ ? மீண்டும் சொல்கிறேன் ரூமி சொன்னது ஒரு கடைந்தெடுத்த மத அடிப்படைவாதமே. இதில் எள்ளளவும் சந்தேகம் யாருக்கும் இல்லை. உங்கள் வாதங்கள் அதை மீண்டும் மீண்டும் படிப்பவர்களுக்கு எவ்வித சந்தேகங்களுக்கும் இடம் இல்லாமல் நிரூபிக்கின்றன.

<< புனை பெயர்களில் எழுதுவது தவறல்ல. நானும் புனைபெயரில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் எங்கே இருக்கிறேன் என்பதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. ஏனெனில் நான் இறைவனுக்கு மட்டுமே அஞ்சுகிறேன். >>

ஆம் நீங்கள் உங்கள் பெயர் போட்டு படம் போட்டு தாராளமாக எழுதலாம், ஏனென்றால் உங்களை கண்டிப்பதுடன் எதிர் கருத்து உள்ளவர்கள் நின்று விடுவார்கள். ஆனால் இஸ்லாமை எதிர்த்து யாராவது கருத்துச் சொன்னால் கொலை செய்ய வேண்டும் என்கிறீர்கள். அப்படி ஒரு சகிப்புத்தன்மை இல்லாத தீவீரவாதிகள் நிறைந்த உலகில், நாங்கள் நினைப்பதைச் சொல்லவும் வேண்டும் அதைச் சொல்வதற்கு எங்களுக்கு உயிரும் வேண்டும் என்ற நிலையில் இஸ்லாமியத் தீவீரவாதிகளை எதிர்த்து இங்கு புகைப் படம் போட்டுக் கொண்டா விமர்சனம் செய்ய இயலும் ? உங்களை யாரும் தாக்கப் போவதில்லை, நீங்கள் தான் ருஷ்டியைக் கொல்ல வேண்டும் என்று மிரட்டுகிறீர்கள். ஆனால் இந்துக்களின் நிலைமையை சற்று நினைத்துப் பாருங்கள் ? தன் முகத்தைக் காட்டி விமர்சனம் செய்த நஸ்ரீனுக்கும், வான் கோவுக்கும், சல்மான் ருஷ்டிக்கும் என்ன நடந்ததது? ஆம் நாங்கள் இறைவனுக்கும் இஸ்லாமியத் தீவீரவாதிகளுக்கும் சேர்த்தே அஞ்சு வேண்டிய நிலையில் உள்ளோம் என்ன செய்வது ? நிலைமை அப்படி இருக்கிறதே ?

<< ஆனால் நேசகுமார் போன்றவர்கள் ஒளிந்து கொண்டு தாக்குகிறார்கள். நேசகுமார் என்பது அவருடைய உண்மையான பெயரல்ல என்பது தெரிந்ததே. ஆனால் சென்னையில் உள்ள என் நண்பர் ஒருவரிடம் அவர் தனது சென்னை முகவரியை என்னிடம் தெரிவித்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அவர் தெரிவித்தாலும் தெரிவிக்காவிட்டாலும் ஒன்றுதான். என்னால் யாருக்கும் எந்த ஆபத்தும் வரப்போவதில்லை. மற்றவர்களால் எனக்கு வரலாம். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. >>

இதற்கு என்ன அர்த்தம் ? உங்களால் யாருக்கும் ஆபத்து வராது என்பதை நீங்கள் ருஷ்டிக்கு இட்ட கொலை மிரட்டலை வைத்தே நாங்கள் யாவ்ரும் தெரிந்து கொண்டோம். எங்கேயோ இருக்கும் ஒரு ரஷ்டியையே கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று எழுதும் நீங்கள் பக்கத்தில் உள்ள நேச குமாரின் அடையாளம் தெரிந்தால் சும்மாவா விடுவீர்கள் ? உங்கள் நல்ல உள்ளம் குறித்து நன்றாகவே தெரியும் ஐயா. வேறு யாரிடமாவது போய் கதையுங்கள். நேசகுமார் போன்றவர்கள் தங்கள் படத்தைப் போட்டே தன் கருத்தை வெளியிடும் சுதந்திரமான சூழ்நிலை என்றைக்கு உருவாகிறதோ என்றைக்கு உங்களைப் போன்றவர்கள் திருந்துகிறார்களோ அன்றைக்கு வந்து சொல்லுங்கள் இதே வார்த்தையை நாங்களும் நம்புகிறோம். அது இந்த உலகில் இஸ்லாமிய அடிப்படைவாதம் இருக்கும் வரை நிகழப் போவதே இல்லை, நேசகுமாரும் தன் அடையாளங்களைக் காட்டப் போவதே இல்லை. நேசகுமார் ஒளிந்து கொண்டு தாக்குகிறார்கள், திண்ணையில் ஒரு பெரிய கும்பலே பல பெயர்களில் மிரட்டல் விடுகிறதே அவையெல்லாம் உண்மையான ஒளிந்து கொள்ளாமல் எழுதுகிறார்களோ ? உங்களுக்கு யாரால் ஆபத்து வரப்போகிறது ? நீங்கள் என்ன இஸ்லாமிய அடிப்படைவாதத்தை எதிர்த்தா எழுதுகிறீர்கள் ? அதை ஆதரிப்பவர்களைக் கண்டு நாங்கள் அல்லவா பயப்பட வேண்டும்?

<< ஆனால் அடிப்படைவாதி, அருகதையற்றவன் என்றெல்லாம் சொல்வதை நினைத்தால் எனக்கு சிரிப்பாக வருகிற்து. தாக்குவதற்கென்றே ஒரு குழுவாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இணையத்தில் இப்படி எழுதுவதென்பது ஒரு நிழல் யுத்தம் மாதிரிதான். >

திண்ணையில் உங்களுக்கு ஒத்து ஊதுபவர்கள் எல்லோரும் முகமூடி போடாமல் உண்மைப் பெயரில்தான் எழுதுகிறார்களோ ? உங்களைப் போல இங்கு யாரும் எதற்கும் குழுவாக இயங்குவதில்லை. உங்களைப் போலவே மற்றவர்களை எண்ணாதீர்கள். அவரவர் மனசாட்சிக்குத் தோன்றியதை எழுதுகிறோம், இதில் குழு சேர்க்க நாங்கள் என்ன அல் குவைடா தீவீரவாதிகளா?

<< எனக்கு சரி என்று பட்ட கருத்துக்களை யாரும் காயப்படாத வகையில் எடுத்துச் சொல்கிறேன். இதுவரை நான் ?¢ந்து, கிறிஸ்தவ மதம் சம்பந்தப்பட்ட கடவுளையோ, தீர்க்க தரிசியையோ பற்றி தரக்குறைவாக ஒரு வார்த்தைகூட சொன்னது கிடையாது. சொல்லவும் மாட்டேன். நான் பகவத் கீதை பற்றியும், தீபாவளி பற்றியும், ஓஷோ, ரமணர்,ஜே கிருஷ்ணமூர்த்தி பற்றியெல்லாம் எழுதியதைப் படித்திருந்தால் நான் சொல்வது உண்மை என்று புரியும். ஆனால் படித்தாலும் அதிலும் குற்றம் கண்டு பிடிப்பவர்களைப் பற்றி ஒன்றும் சொல்ல முடியாது. >>

அப்படியா?, காயப் படாமல் எடுத்துச் சொல்லுகிறீர்களா ? எது காயப் படாமல் எழுதுவது ? உங்களுக்கு அன்னையர் போன்றவர்களைத் தாக்குபவனைக் கொல்வேன் என்கிறீர்கள் ஆனால் இந்துக்களுக்கு முழு முதற்கடவுளாகிய விநாயகப் பெருமானுக்கு செருப்பு மாலை போட்ட அயோக்கியனை நீங்கள் புகழ்வது எதைக் காட்டுகிறது? இந்து மதத்தின் மீதான உங்கள் அபிமானத்தையா ? உங்கள் கட்டுரைகளின் ஒவ்வொரு வார்த்தையையும் எடுத்துக் கொண்டு அதில் உள் ஒளிந்து கொண்டிருக்கும் குசும்புக்களை வெளிச்சம் போட்டுக் காட்ட அதிக நேரம் பிடிக்காது ரூமி, பக்கம் பார்த்து புளுகுங்கள். நீங்கள் எல்லாம் இந்து மதத்தைப் பற்றி எதுவும் எழுதாமல் இருந்தாலே பெரிய ஷேமம் ஐயா.

<< The fault-finder wil find fault even in Paradise என்று ¦?ன்ரி டேவிட் தோரோ அழகாகச் சொன்னார். அதுதான் என் விஷயத்தில் நடந்து கொண்டுள்ளது. >>

நரகத்தில் உட்கார்ந்து கொண்டு அதை சொர்க்கம் என்று குருட்டுத்தனமாக நம்பிக் கொண்டிருந்தால் அதற்கு யாரும் பொறுப்பல்ல.

<< சமீபத்தில் விஸ்வாமித்திரா என்பவர் வெ.சா.வுக்கு ஆதரவாக எழுதுகின்ற தோரணையில் என்னைப் பற்றிய அவருடைய 'கருத்துக்களை'யெல்லாம் திண்ணையில் கொட்டியிருக்கிறார். >>

நான் யாருக்கும் ஆதரவாக எழுத வேண்டிய அவசியமில்லை. உங்கள் எழுத்துக்களில் எண்ணங்களில் இருந்த இரட்டை வேடங்களை எடுத்து மட்டுமே திண்ணையில் கொட்டினேன். நான் உங்களைப் போல மத வெறி என்னும் விஷத்தைக் கொட்டவில்லை. வெ சா அவர்கள் யாருடைய ஆதரவையும் எதிர் நோக்கி எழுதுபவர் அல்லர் என்பது தமிழ் இலக்கியம் அறிந்தவர்களுக்குத் நன்கு தெரியும். உங்களைப் போன்ற அதி மேதாவிகளுக்குத் தெரியாமல் போனதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. வெ சா நான் எழுதித் தாங்க வேண்டிய அளவிற்கு, நீங்கள் போட்ட பெரிய லிஸ்ட் போல் சிபாரி கடிதம் எழுதிப் போட்டுத் தாங்கப் பட்டுக் கொண்டிருக்கும் இஸ்லாமிய மதம் அல்லர். அவர் எழுத்துப் போதும் அவருக்கு. உங்களைப் போல பல்லக்குத் தூக்கிகள் துதிபாட அவர் ஒன்றும் மு,கருணாநிதி அல்லர். கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கி நீங்கள் ஜெய மோகனை ஆபாசமாக அர்ச்சித்ததை இங்கு யாரும் இன்னும் மறந்து விடவில்லை ரூமி, ஆதாரம் வேண்டுமா ? வெ சா மீது நீங்கள் குற்றம் சொல்ல உங்களுக்கு எவ்வித அருகதையும் கிடையாது என்று எனக்குத் தோன்றியது சொன்னேன் அவ்வளவுதான். எனக்கு அதனால் எவ்வித பயனும் கிடையாது. பலனை எதிர்ப்பார்த்து ஜால்ரா போட வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது.

<< திரும்பத் திரும்ப நான் ரஷ்டி பற்றி எழுதியதையே, எந்தக் காரணமுமில்லாமல் இஸ்லாமிய எதிர்ப்பும் வெறுப்பும் கொண்ட பல மனங்கள் துருப்புச் சீட்டு போல பயன்படுத்தி வருகின்றன. அந்த குழுவில் இப்போது விஸ்வாமித்திராவும் உண்டு என்று தெரிந்து கொள்கிறேன். >>

அப்படி எழுதியது தவறு, மனிதாபிமானம் இல்லாத செயல், தீவீரவாதம், அசிங்கம், மதத் தீவீரவாதம், ரவுடித்தனம், கொலை வெறி, மிருகத் தன்மை, அரக்கக் குணம் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்ளாதவரை மீண்டும், மீண்டும் யாராவது சொல்லிக் காண்பித்துக் கொண்டேதான் இருப்பார்கள். சும்மா அழுவாச்சி காவியம் பாடுவதில் அர்த்தம் இல்லை ரூமி. புலம்பாமல் உங்களை ஒரு சுய ஆத்ம பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுங்கள் உங்கள் மனசாட்சியும் விஸ்வாமித்திரா கேட்கும் அதே கேள்விகளைத்தான் கேட்கும். வெறுப்பு யாருக்கு இங்கே இருக்கிறது. எதிர் கருத்து சொல்பவனை வெட்டிக் கொல்லு என்று வெறி பிடித்து அலையும் உங்களுக்கா எனக்கா ?

<< ஒரு மதத்தை விமர்சன ரீதியில் அணுகுவதில் தவறில்லை. உதாரணமாக அஸ்கர் அலி எஞ்சினியர் இந்த காரியத்தை அழகாகச் செய்து கொண்டுள்ளார். ஆனால் ஒரு மதம் சம்பந்தப்பட்ட தனி மனிதர்களைக் குறிவைத்துத் தரக்குறைவாகப் பேசுவதும் எழுதுவதும் தவறு. அதுவும் முஸ்லிம்களால் தங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கப்படும் மு?ம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி அநாகரீகமாகப் பேசுவதையோ எழுதுவதையோ எந்த சரியான முஸ்லிமும் பொறுத்துக் கொள்ள மாட்டார். >>

அது எப்படி இந்து மதத்தைத் தரக்குறைவாகவே எப்பொழுதும் எழுதுவதையும் பேசுவதையும் தங்கள் தொழிலாகக் கொண்ட ஈ வெ ராவும், மு கருணாநிதியும் உங்களுக்கு தேவ தூதர்களாகத் தெரிகிறார்கள் ? சல் என்பவராவது ஒரு ஆசா பாசங்கள் உள்ள ஒரு மனிதப் பிறவி ஆனால் எங்கள் கடவுள்களையே அசிங்கப் படுத்தும் ஈ வெ ராவை நீங்கள் புகழ்வீர்கள், உங்களுக்கு அது சரி அப்படித்தானே ? ஆனால் சல்லைப் பற்றி யாரும் சல்லிசாகப் பேசி விட்டால் உடனே கொல்லு என்பீர்கள். இந்து மதக் கடவுள்களை ஈ வெ ராவைக் காட்டிலும் அசிங்கப் படுத்தியவர் வேறு யாரும் கிடையாது. ஆனால் அந்த ஈ வெ ராவைக் கூட இது நாள் வரை எந்த இந்துவும் அடி, வெட்டு, கொல்லு என்று சொன்னதில்லை. ஆனால் உங்களின் மத குருவான முகமதுவின் மனைவிகளைப் பற்றி ஏதோ எழுதி விட்டார் என்பதற்காக வெட்டு, குத்து கொல்லு என்கிறீர்கள்.

இதில் யாருக்கு மத வெறி ? ஒருவன் தவறாகப் பேசினார் என்றால் அதைத் தவறு என்று சொல்லுங்கள், கண்டனம் செய்யுங்கள் அதை விடுத்து அவனின் உயிரைப் பறிக்கும் உரிமையை உங்களுக்கு யார் வழங்கியது ? சல்லா ? அவரது மனைவிமார்களா? அல்லது குரானா ? எது கொடுத்தது அந்த கொலை செய்யும் உரிமையை சொல்ல முடியுமா ? கேட்டால் அது உங்கள் மதக் கடமை என்பீர்கள் அப்படித்தானே ? ஆக இன்னொரு உயிரைக் கொல்லு என்று உங்களுக்குச் சொல்லுவது எது ? உங்கள் மதம், சரியா? அதனால் தான் இஸ்லாம் கொலை வெறியைத் தூண்டுகிறது என்று எல்லோரும் நம்புகிறார்கள். நீங்களும் அதை உறுதி செய்துள்ளீர்கள். அப்புறம் என்ன கூப்பாடு?

அப்படி உங்களுக்கு உங்கள் மதம் அந்த உரிமையை வழ்ங்குமானால், இந்த நாகரீக உலகில் அது போன்ற மதங்களுக்கு இடமில்லை. மன்னிக்கவும் உங்கள் மதத்தில் நிறைய கோளாறுகள் உள்ளன மாற்றிக் கொள்ளூங்கள். உங்களது கொலை வெறி எண்ணம் சரியில்லை. நாகரீகமான பிற மதத்தினரால் உங்களது காட்டுமிராண்டித்தனமான எண்ணங்களை ஏற்றுக் கொள்ள இயலாது. மாற்றிக் கொள்ளுங்கள் அல்லது இந்த உலகம் உங்களை அதி விரைவிலேயே நிராகரித்து விடும். காட்டுமிராண்டிகள் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு கொண்டு போய் வைத்து விடும். சுவற்றில் எழுதப் பட்டுள்ள எச்சரிக்கைகளை படிக்கக் கூட முடியாமல் உங்கள் கண்களை மதவெறி மறைக்கும் பொழுது நாங்கள் சொல்வதையாவது காதில் கேளுங்கள், மனதில் வாங்குங்கள்.

<< ரஷ்டி விஷயத்தில் நடந்தது அதுதான். சர்வதேசப் புகழ் பெற்ற அந்த எழுத்தாளர், இஸ்லாத்தின் மீதான ஆக்கப்பூர்வமான விமர்சனமாக 'சாத்தானின் கவிதைகள்' என்ற நாவலை எழுதவில்லை. தனிப்பட்ட முறையில் மு?ம்மது நபியையும் அவர்களது மனைவிமார்களையும் பற்றி அசிங்கமாக எழுதினார். இலக்கியம் என்ற போர்வையில். >>

ரஷ்டி அப்படி எழுதியதாக நீங்கள் நினைத்தால் அவரைக் கண்டித்து எழுதும் உரிமையையோ அல்லது அவதூறு வழக்குப் போடும் உரிமையையோதான் நாகரீக உலகின் சட்டங்கள் வழங்குகின்றன. கொல்லும் உரிமையை உங்களுக்கு எந்த சட்டமாவது அளிக்கும்னாலால் அது மிருகத்தனமான காட்டுமிராண்டிச் சட்டமாகவே இருக்க முடியும். ரஷ்டியை விட பல மடங்கு ஆபாசமாக இந்துக் கடவுள்களை தி க கும்பல் அனு தினமும் அர்ச்சிக்கிறது. இந்துக்கள் அவர்களை அதிக பட்சம் மனதால் சபித்து விட்டுப் போவார்களே ஒழிய யாரும் அவர்களை கொலை செய் என்று சொல்வது கிடையாது, நினைப்பது கிடையாது.

<< அதைத்தான் நான் கண்டித்து எழுதினேன். உங்கள் தாயைப் பற்றித் தரக்குறைவாகப் பேசுகிற ஒருவனை நீங்கள் கண்டித்தால், திட்டினால் அதை வன்முறை என்று சொல்வீர்களா? ஆனால் அந்த வார்த்தைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது எவ்வளவு காலத்துக்குத் தாக்குப் பிடிக்கும்? >>

நீங்கள் கண்டிப்பதுடன் நிறுத்தி இருந்தால் இங்கு யாருக்கும் ஆட்சேபணை இருக்கப் போவதில்லை அதையும் மீறி அவரைக் கொல்ல வேண்டும் என்ற உங்களது மத வெறியை அங்கு காட்டியிருந்தீர்கள். ஆம் நீங்கள் எழுதியது வன்முறை . இங்கு ருஷ்டியின் வார்த்தையைப் பிடித்துத் தொங்கியது நீங்கள்தான் நான் அல்ல. நீங்கள் எல்லாம் ஒரு இலக்கியவாதி, ஒரு ஆசிரியர், ஒரு எழுத்தாளர் என்று வெளியில் சொல்லாதீர்கள் வெட்கக்கேடு. சல்லின் மனைவி என்ன உங்கள் தாயாரையே யாராவது அசிங்கமாக எழுதினால் கூட அப்படிச் செய்பவனை கொல்லும் உரிமை உங்களுக்குக் கிடையாது. அதிக பட்சம் நீங்கள் வழக்குத் தொடரலாம். அப்படி சட்டத்தை உங்கள் கையில் எடுப்பீர்களானால் அதற்குப் பெயர் கொலைவெறி, வன்முறை. இது கிரஹாம் பாதிரியாரை எரித்த தாராசிங்குக்கும் பொருந்தும், நாகூர் ரூமிக்கும் பொருந்தும்.

<< இஸ்லாம் அமைதியான மார்க்கம்தான். ஆனால் நீங்கள் அடித்தால் நாங்கள் வாங்கிக் கொண்டே இருப்போம் என்று அதற்குப் பொருளல்ல. ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்று சொன்ன இயேசுகூட ஒரு கட்டத்தில் கோயிலின் புனிதத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தவர்களை சாட்டையால் அடித்து விரட்டியதாக புனித பைபிள் கூறுகிறது. >>

இஸ்லாம் அமைதியான மார்க்கம் என்று இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் காதில் பூ சுற்றுவீர்களோ ? அப்படி அது அமைதியான மார்க்கம் என்றால் அதில் ஏன் அது தோன்றிய காலம் முதல் இன்னாள் வரை இத்தனை வன்முறை ? இத்தனை கொலைகள் ? விளக்க முடியுமா ? அது சரி யார் உங்களை அடித்தது ? இஸ்லாமியர்கள் அல்லவா உலகம் முழுக்கப் போய் குண்டு வைக்கிறார்கள் ? நீங்கள் மற்றவர்களைக் கொல்லுவீர்கள், கொல்ல வேண்டும் என்று வெறித்தனமாக தூண்டுவீர்கள் அப்புறம் அமைதி மார்க்கம் என்று ஜல்லி அடிப்பீர்கள். என் மதத்தலைவனின் மனைவி மார்களை திட்டி விட்டான் என்பதற்காக அந்த எழுத்தாளனை கொல்லு என்று சொல்லும் சமூகம் எப்படி அமைதியான மார்க்கமாக இருக்க முடியும்? சொல்லுங்கள் ரூமி ? முதலில் அப்படிச் சொன்னது தப்பு என்பதை ஒத்துக் கொண்டு விட்டாவது இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று புளுகினீர்களாயின் யாராவது ஒருவராவது நம்புவார்கள். கையில் கத்தியுடன் திரியும் கசாப்புக் கடைக் காரன் நான் வெட்டுவது ஜீவகாருண்யம் என்று சொல்லுவது போல் உள்ளது உங்கள் பேச்சு.

<< நீங்கள் என்னை என் வீட்டில் வந்து அடிக்க வந்தீர்களென்றால் உங்களைத் திருப்பி அடிக்கும் உரிமையோ அல்லது குறைந்த பட்சமாக என்னை உங்கள் வன்முறையிலிருந்து தற்காத்துக் கொள்ளும் உரிமையோ எனக்கு இருக்கிறது. அமைதி மார்க்கம் என்று சொல்லி கோழையாக இருந்து உயிரை விட அங்கே அனுமதி இல்லை. >>

என்ன சொல்ல வருகிறீர்கள் இங்கே ? ஒரே அபத்தமாக இருக்கிறதே ? உங்களை யார் அடித்து விட்டார்கள் என்று கூக்குரலிடுகிறீர்கள் ? எந்தவொரு முஸ்லிம் வந்து குண்டு வைத்துக் கொன்றாலும் அவனை மன்னித்து விட வேண்டும் என்றல்லாவா ஒட்டு மொத்த இந்திய சமுதாயமும் கூறுகிறது. புரியவில்லையே ? ஒரு வேளை இந்துக்கள் கோழையாக இருக்கக் கூடாது என்று சொல்ல வருகிறீர்களா ? அப்படி என்றால் சரிதான்.

<< இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போர்கள் அனைத்துமே இப்படிப்பட்ட தற்காப்புப் போர்கள்தான். அடித்தவனை, அடிக்க வந்தவனை திருப்பி அடித்ததுதான். இது எல்லா சமுதாயங்களிலும், எல்லா மதங்களிலும் இருந்த, இருக்க வேண்டிய குணம்தான். >>

அப்படியா ? இதை தைரியமாக, உங்களுக்கு இஸ்லாமிய அறிவு அரைகுறையாக இல்லாமல் முழுக்க இருக்குமானால், நீங்கள் சொல்லுவதில் உண்மை இருக்குமானால் நேச குமார் அழைத்த பொழுதே அவருடன் விவாதம் புரிந்து அதை நிரூபித்திருக்கலாமே ? அவர் அழைத்த பொழுது ஓடி ஒளிந்து கொண்டு இப்பொழுது என்னிடம் வந்து சொற்சிலம்பம் ஆடுவது என்ன வீரம் ? இப்பொழுதும் அவர் உங்களை விவாதத்திற்கு அழைத்துள்ளாரே தாராளமாக் இஸ்லாமில் நடந்த போர் அமைதி காரணமானவை என்று தாராளமாக நிரூபிக்கலாமே யார் தடுத்தது ? எல்லா சமுதாயங்களிலும் இருக்க வேண்டிய குணம் என்றால் கோத்ராவுக்காக குஜராத்தில் திருப்பி அடித்தால் ஏன் புலம்புகிறீர்கள் ? இருக்க வேண்டிய குணம்தானே ? அடித்தவனைத்தானே திருப்பி அடித்தான் அதில் என்ன தவறு இருக்க முடியும் ?

<< வன்முறையும் போரும் எல்லாக் காலத்திலும் எல்லாச் சமுதாயத்தாராலும் நடத்தப்பட்டே வந்திருக்கின்றன. உலக வரலாறு தெரிந்தவர்களுக்கு இந்த உண்மை தெரியும். >>

ஆமாம்.

<< ஆனால் வெ.சா. ஒரு கற்பனையான குற்றச்சாட்டை அந்தக் கட்டுரையில் தேவையே இல்லாமல் வைத்திருந்தார். யாரோ கலிமா சொல்லு என்று அவரை வற்புறுத்துகிறார்களாம். உன் பெயரை முஸ்லிம் பெயராக மாற்றிக்கொள் என்று சொல்கிறார்களாம். >>

அட வெ சா சொன்னதில் தப்பில்லை விவாதிக்க வாருங்கள் என்று நேசகுமார் அழைக்கிறாரே, போய் அங்க போய் சொல்ல வேண்டியதுதானே ? தயாரா ?

<< எந்த மதத்தின் பெயரால் வன்முறை நடந்தாலும் அது குற்றம்தான். பாபர் மசூதியை மதவெறியர்கள் இடித்ததும் குற்றம்தான். பள்ளி வாசலுக்குள் மத வெறியர்கள் குண்டு வைத்ததும் குற்றம்தான். இஸ்லாத்தின் பெயரால் அல்லா?¤ அக்பர் என்று சொல்லி அப்பாவிகளில் கழுத்தை அறுப்பது, மண்ணில் புதைத்து கல்லால் அடிப்பது போன்ற கொடுமைகள் எல்லாம் குற்றம்தான். >>

அந்தக் குற்றங்கள் மதத்தின் பெயரால், இஸ்லாமின் பெயரால் செய்யப் படுவதால் நாங்கள் அதன் அடிப்படையையே சந்தேகப் படுகிறோம். ஒரு முறை காலியான பாழடைந்த கட்டிடத்தை இடித்ததை இன்று வரை சொல்லிக் காண்பிக்கிறீர்கள் ஆனால் அன்றாடம் குண்டு வைக்கப் பட்டு மனிதன் லட்சக்கணக்கில் இஸ்லாமின் பெயரால் நடக்கும் வெறிச்செயல்களில் சாகிறானே அதற்கு மூல முழுக் காரணம் இஸ்லாமின் காலத்துக்கொவ்வாத தத்துவங்கள் போதனைகள் என்று நாங்கள் சொன்னால் தப்பா ? அதைச் சொல்லும் உரிமை பாதிக்கப் பட்ட எங்களுக்குக் கிடையாதா ? மேலே நீங்கள் சொன்னவை மட்டுமே குற்றங்கள் அல்ல, தனக்குப் பிடிக்காத கருத்தை எழுதிய ஒரு எழுத்தாளனைக் கொல்ல வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றும் எண்ணமும் குற்றம்தான். கொலைக் குற்றத்தில் சின்னது பெரியது கிடையாது எல்லாமே இஸ்லாமிய அடிப்படைவாதங்கள்தான். ஐயா இஸாமின் காலத்துக்கொவ்வாத மத போதனைகளால் வெறியர்கள் சொர்க்கத்தில் மதுவும் மங்கையும் கிடைப்பார்கள் என்று நம்பிக் கொண்டு மாற்று மதத்தினரைக் கொல்வதால் கேட்க்கிறோம், தயவு செய்து அது போன்ற கருத்துக்களை களைந்தெறியுங்கள். நீங்களும் வாழுங்கள் எங்களையும் வாழ விடுங்கள். நீங்கள் யாரை வேண்டுமானாலும் வணங்குங்கள், எப்படி வேண்டுமானாலும் வணங்குங்கள் எங்களுக்கு அக்கறை இல்லை. ஆனால் எங்களை உங்கள் நம்பிக்கைகள் பாதிக்கும் பொழுது எதிர்க்கத் தான் செய்வோம்.

<< ஆனால் இதையெல்லாம் குற்றம் என்று ஒத்துக் கொள்ளாத பல முஸ்லிம்கள் இருக்கலாம். ஆனால் என்னுடைய பார்வையில் இவை யாவும் குற்றம்தான். (இதையெல்லாம் பற்றி நான் ஏற்கனவே என் தளத்தில் கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏனெனில் அது என்னைத் திட்டுபவர்களது உள்நோக்கத்துக்கு ஊறு விளைவிப்பதாக அமைந்துவிடும். தெரியும்). >>

ஆமாம் நீங்கள் ஏற்கனவே எழுதியுள்ளீர்கள். ஆனாலும் அப்படி அவையெல்லாம் குற்றம் என்றும் காட்டுமிராண்டித்தனம் என்று நீங்கள் ஒப்புக் கொண்ட போதிலும், மிக சாதுர்யமாக அது போன்ற குற்றங்களுக்கும் குரானுக்கும் சம்பந்தமில்லை என்று எழுதும் போதுதான் உங்கள் சாயம் வெளுத்து உங்கள் ஆழ்மனத்து வக்கிரங்கள் வெளிப்பட்டு விடுகிறது. எங்கள் மதம் இப்படி போதிக்கிறது ஆக இந்தக் குற்றங்களுக்கெல்லாம் காரணம் எங்கள் மதத்தில் உள்ள ஒரு சில போதனைகள்தான், அவையாவும் காலத்துக்கு ஒவ்வாதவை, கற்காலச் சட்டங்கள் ஆகவே இஸ்லாம் சீர்திருத்தப் பட வேண்டும் என்று எழுதியிருந்தால் நிஜமாகவே உங்களுக்கு அக்கறை இருக்கிறது என்று ஒத்துக் கொண்டு உங்கள் நேர்மையையைப் பாராட்டலாம். அதுக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமேயில்லை என்று முழுப் பூசணிக்காயையே சோற்றில் மறைத்த பொழுதுதான் உங்க்ள் மதவாதம் வெளிப்பட்டது. ஊருக்கு, ஒப்புக்கு, வேடம் போட எழுதுகிறீர்கள் என்பது உறுதியாயிற்று. ஊரை ஏமாற்ற போலித்தனமாக எழுதுவதை நிறுத்தி விட்டு மனசாட்சி என்று ஒன்று இருக்குமானால் அதன் படி எழுதுங்கள் ரூமி, அப்பொழுது நீங்கள் கேட்கும் மரியாதை தானகவே கிடைக்கும்.

கோவை குண்டு வெடிப்பின் போது மயிரிழையில் உயிர் தப்பியவன் நான். அந்த வலியும் வேதனையும் எனக்குத்தான் தெரியும். அந்த அச்சத்தில் இருந்து கேட்கிறேன் தயவுசெய்து உங்கள் மதத்தின் குருட்டு நம்பிக்கைகளில் இருந்து வெளியே வாருங்கள். உங்களது நம்பிக்கை எதுவாக இருப்பினும் பிற மதத்தவைரை பாதிக்காத வரை யாருக்கும் கவலை இல்லை. ஆனால் உங்களது மத நம்பிக்கைகள் அடுத்தவரின் உடலுக்கும், உயிருக்கும், உடமைக்கும் ஊறு விளைவிக்கும் பொழுது உங்கள் நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள், திட்டத்தான் செய்வார்கள், சாபம் இடத்தான் செய்வார்கள். அதற்கெல்லாம் ஊளையிடாதீர்கள், மனிதனாக பரிணாம வளர்ச்சி அடையப் பாருங்கள்.

<< குஜராத்தில் அப்பாவி ஏழைக் கன்னிப் பெண்களைக் கதறக் கதறக் கற்பழித்துவிட்டு வீட்டு மொட்டை மாடியில் அவர்களைக் கட்டி வைத்துத் தீ வைத்துக் கொளுத்திவிட்ட ?¢ந்து வெறியர்களைப் பற்றி நீங்கள் எப்போதாவது கண்டித்து எழுதியுள்ளீர்களா? கர்ப்பிணிப் பெண்ணொருத்தியின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியில் எடுத்து தீயில் வீசிய வெறிச்செயலை என்றைக்காவது கண்டித்துள்ளீர்களா? வேனில் தூங்கிக் கொண்டிருந்த அப்பாவிக் குழந்தைகளை அவர்களின் தந்தையான பாதிரியுடன் சேர்த்துக் கொளுத்திவிட்டார்களே அதைக் கண்டித்துள்ளீர்களா? கோயம்புத்தூரும் குஜராத்தும் சொல்வது என்ன என்று என்றைக்காவது கேட்டிருக்கிறீர்களா? >>

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்துக் கொன்றிருந்தால் அவன் மனிதனே அல்ல. ஆனால் நீங்கள் சொல்லும் குற்றசாட்டுக்கு ஆதாரம் என்ன ? சும்மா பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறினால் அது உண்மையாகி விடாது. ஆதாரம் காட்டுங்கள் கண்டிக்கிறேன். உங்களைப் போல அது போன்ற கொலைகளை இங்கு யாரும் ஆதரிக்கவும் இல்லை அதற்கு வக்காலத்து வாங்கவும் இல்லை. தவறு செய்தவன் யாராக இருந்தாலும் தூக்கில் போடுங்கள். அது போன்ற மிருகங்களுக்கு மன்னிப்பு கேட்கப் போவதில்லை. குஜராத்தும் கோவையும் சொல்வது என்ன என்று நன்றாகவே கேட்டிருக்கிறேன். பதிலும் கிடைத்தது. பதிலைக் கேட்கிறீர்களா ? கோத்ராவில் அப்பாவிப் பெண்களையும், குழந்தைகளையும் கொளுத்தியதன் எதிர் வினைதான் குஜராத். நீங்கள்தானே சொன்னீர்கள் மறு கன்னத்தை எத்தனை நாள் காட்டுவது? திருப்பி அடிக்க வேண்டும், உங்கள் போதனையைத்தானே குஜராத் மக்கள் செய்தார்கள் அதற்கு போய் ஏன் ரூமி வருத்தப் படுகிறீர்கள். எத்தனை நாள் தான் குஜராத் மக்கள் பொறுப்பார்கள், நீங்கள் சொன்னபடியே அவர்கள் பொங்கி எழுந்தனர். குஜராத்தில் மட்டும் அல்ல இன்னும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அப்படி பொங்கி எழப் போகும் நாட்கள் அதிக தூரத்தில் இல்லை. புரிந்து கொள்ளுங்கள். எல்லோரும் இந்துக்களைப் போல கோழைகளாக இருக்க மாட்டார்கள். ஆக திருப்பி அடிப்பது இஸ்லாமுக்கு மட்டும் சொந்தம் இல்லையே எல்லோருக்கும் அந்த உரிமை இருக்கிறதல்லவா ? இருந்தாலும் உங்களைப் போல அது போன்ற செயல்களுக்கு நான் வக்காலத்து வாங்கப் போவதில்லை. அவர்கள் செய்தது தவறுதான்.

அது சரி கோவையில் என்ன நடந்தது ? ரவுடித்தனம் செய்த ஒருவனை போலீஸ் விசாரரித்தால் குண்டு வைப்பீர்களா? அதை நியாயப் படுத்துகிறீர்களே கொஞ்சமும் மனித உணர்வு இன்றி. கோவை என்ன சொல்லுகிறது. இஸ்லாமியர்கள் குண்டு வைத்து தாயாய் பிள்ளையாய் பழகியவர்களைக் கூட ஈவு இரக்கமின்றி கொலை செய்வார்கள் குண்டு வைப்பார்கள். அவர்களை எதிர்த்து யார் கேட்டாலும் குண்டு வைத்துதான் பதில் சொல்வார்கள் என்று. அதைத்தான் கோவை சொல்லுகிறது. பாதிரியைக் கொன்றவனை தூக்கில் போடுங்கள் என்கிறோம் தயங்காமல் அவனுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கவில்லை இங்கு எவரும். ஆனால் ஒரு அப்சலுக்கு எத்தனை கோரிக்கைகள் மிரட்டல்கள் ? ஒரு மதானியை விடுதலை செய்ய எத்தனை கோரிக்கைகள் ? இது போன்று தாரா சிங்குக்கு யாராவது மன்னிப்புக் கேட்டார்களா? கோவையில் போலீசாரை அடித்ததால் போலீஸ் திருப்பி அடித்தார்கள். அவர்களை இந்துக்கள் அடித்திருந்தாலும் அதே நடவடிக்கைதான் எடுத்திருப்பார்கள். ஆனால் ஒரு முஸ்லிமை அடித்து விட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காகவோ, ஒரு தலைவரைக் கொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காகவோ அப்பாவி மக்களைக் கொன்றதை ஈவு இரக்கமின்றி நியாயப் படுத்துகிறீர்களே. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா ரூமி? நீங்கள் எல்லாம் மனிதர்கள்தானா?

<< கடந்தகால வரலாறு என்பது நாம் கண்ணால் காண்பது அல்ல. எழுதப்பட்டதிலிருந்து யூகிப்பதாகவே அது உள்ளது. வரலாற்றாசிரியர்கள் அனைவருமே தங்களுடைய பார்வையின் வெளிப்பாடாகத்தான் வரலாற்றை வடிக்கிறார்கள். எனவே ஒருவிதமான நம்பிக்கை சார்ந்ததாகவே, ஒரு சார்பான பார்வை கொண்டாதாகவே எல்லா வரலாறும் நமக்கு கிடைக்கிறது என்று சொல்லலாம். >>

அதையும் மீறி ஒரு சில ஆவணங்களும் வழி வழி வந்த தகவல்களும் உண்மைகளைக் கூறுகின்றன அவற்றை மறைக்கவோ, மறுக்கவோ இயலாது.

<< இந்திய வரலாற்றில் சோமநாதபுரக் கோயிலுக்குள் நடந்த சண்டையை ஒரு ?¢ந்து படித்தால் அது அவருக்கு கஜினி மு?ம்மதுமீது வெறுப்பேற்றுவதாக இருக்கலாம். ஒரு முஸ்லிம் படித்தால் அவருக்கு அது நியாயமாகப் படலாம். சிலுவைப் போர்களைப் பற்றி ஒரு கிறிஸ்தவர் படித்தால் அது அவருக்கு சரியாகப் படலாம். லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்த ?¢ட்லருக்கு அப்படுகொலைகள் சரியானதாகத்தான் பட்டிருக்கிறது. ஒரு நாட்டையே ஆக்கிரமித்துக் கொண்டு முஸ்லிம்களுக்கு சொல்லவொண்ணாத துயரங்களை வழங்கிக் கொண்டிருக்கும் யூதர்களுக்கு பாலஸ்தீனில் நடத்திக் கொண்டிருப்பது சரியென்று தோன்றலாம். அமெரிக்க மனப்பான்மை கொண்ட ஏரியல் ஷரோன்களுக்கும் அது சரிதான் என்று படலாம். >>

இடது சாரிகளால் திருத்தப் பட்ட வரலாறை ஆதாரமாகச் சொல்லவில்லை. அன்று சோமநாத புரம் இன்று இரட்டைக் கோபுரம் வரை வரலாறு ஒரே ஒரு உண்மையைத்தான் உரக்கச் சொல்லுகிறது, இஸ்லாம் ஒரு தீவீரவாத மதம்.

<< வெள்ளைக்காரர்களிடம் கேட்டால் வாஞ்சிநாதன் செய்தது கொலை என்பான். ஆனால் இந்திய மனம் அதை அப்படிப் பார்ப்பதில்லை. ஜாலியன் வாலாபாக்கில் நடந்தது நமக்குப் படுகொலை. ஆனால் ஜெனரல் டயருக்கு அது கிறிஸ்தவத் தொண்டாகப் பட்டிருக்கலாம். எது சரி, எது உண்மை என்பது இரண்டுக்கும் நடுவில் எங்கோ இருக்கிறது. >>

இப்பொழுது என்ன சொல்ல வருகிறீர்கள், , தெளிவாகச் சொல்லுங்கள் நான் ஒன்றும் அதிர்ச்சி அடைய மாட்டேன். அப்சல் ஒரு தியாகி அவனை விடுதலை செய்ய வேண்டும் என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டுப் போங்களேன் ஏன் இத்தனை சுற்றி வளைப்பு ? இரண்டுக்கும் நடுவிலோ ஓரத்திலோ உண்மை ஒளிந்து கிடக்கவில்லை. ஒரு சில விஷயங்களில் உண்மை காலத்தால் அழிக்க முடியாத கறையாகப் படிந்து கிடக்கிறது. நீங்கள் அதைக் காண மறுப்பதனாலேயே இந்தியா முழுவதும் படுகொலை செய்யப் பட்ட கோடிக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப் படவில்லை என்று ஆகி விடாது. இருந்தாலும் அதை மறந்துதான் வாழ்கிறோம். மன்னித்தும் வாழ்கிறோம். ஆனால் அதே கொடுமைகள் இன்று குண்டு வெடிப்புக்களாகத் தொடரும் பொழுதுதான் எங்களால் பொறுக்க இயலவில்லை. நிறுத்துங்கள் என்று கேட்கிறோம். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் கேட்பது கூட உங்களுக்கு குற்றமாகத் தெரிகிறது.

<< கடந்த காலத்தைச் சுட்டிக் காட்டி நிகழ் காலத்தில் வெறுப்பை விதைப்பது சரியல்ல. ஒரு சில தனி மனிதர்கள், அல்லது இயக்கங்கள் செய்யும் தவறுகளை அல்லது குற்றங்களையெல்லாம் ஒரு மதத்தின் மீது ஏற்றி பொதுமைப்படுத்துவதுதான் இஸ்லாத்தைக் குறை சொல்பவர்கள் செய்யும் தவறு.. >>

முதலில் கடந்த காலத்தில் தவறு நடந்தது என்பதை ஒத்துக் கொள்ளும் மனநிலை வர வேண்டும். வரலாறு அதற்குத்தான் இருக்கிறது. ஆனால் கடந்த காலத்தில் நடந்த தவறே நிகழ்காலத்திலும் தொடர்ந்தால் ????? அதற்கு என்ன அர்த்தம் ? ஒரு சோமநாதபுரம் ஆலயம் சூறையாடப் பட்டதும், ஒரு ஸ்ரீரங்கம் சூறையாடப் பட்டதும் கடந்த காலத்துடன் நின்று விட்டதா? இன்று ஏன் ஒரு பாமியன் அழிப்பு நடக்கிறது ? இன்று ஏன் ஒரு 9 11 நடக்கிறது ? இன்றும் ஏன் ஒரு 7 11 தொடர்கிறது ? ஆக வரலாற்றின் தவறுகளில் இருந்து நீங்கள் எவ்விதப் பாடமும் படிக்கவில்லை என்பது உறுதியாகிறது. கடந்த காலத்தில் மட்டுமே நடந்து முடிந்து இன்று இஸ்லாமியர்கள் அனைவரும் நாகரீகம் அடைந்து மனிதர்களாக மாறி இருந்தால் இன்று யாரும் உங்களைக் குற்றம் சொல்லப் போவதில்லை. இன்றும் தொடர்வதால் இனி நாளையும் தொடரப் போவதால் உங்களைக் குற்றம் சாட்டுகிறோம். அமெரிக்காவில் இருந்து பாலி வரை , செசன்யாவிலிருந்து கோவை வரை இஸ்லாமியத் தீவிரவாதம் ஒரே விதத்தில் பரவினால் என்ன அர்த்தம். அதற்குப் பொதுக் காரணி யாது? மதம் ? மதத்தில் தவறு உள்ளது அதுதான் உலகம் முழுக்க ஒரே விதமான கொடூரங்களை இழைக்கத் தூண்டுகிறது. அந்த மதத்தைச் சொல்லாமல் யாரைக் குற்றம் சொல்வது. ருஷ்டியைக் கல்லால் அடித்துக் கொல்லு என்று சொல்லும் ரூமிக்கும் , தன் கடவுள்களை இகழ்ந்த ஈ வெ ராவை கண்டிப்பதுடன் நின்று கொள்ளும் விஸ்வாமித்திராவுக்குன் என்ன வித்தியாசம் ? மதம் ஐயா மதம் . இப்பொழுதாவது புரிகிதா ?

<< இந்த பொதுமைப் படுத்தும் காரியத்தை எப்போதும் எந்த மதத்தின் மீதும் யாரும் செய்யலாம். >>

தேவையில்லாமல் காரணமில்லாமல் செய்ய யாரும் எதையும் பொதுமைப் படுத்துவதில்லை.

<< இது ஒரு வீண் வேலை. கால விரயம். உதாரணமாக, மு?ம்மது நபி இறுதித் தூதர் அல்ல என்று நேசகுமார் கட்டுரை கட்டுரையாக எழுதினார். இன்னும்கூட எழுதிக் கொண்டிருக்கலாம். >>

அதை ஏன் என்னிடம் சொல்லுகிறீர்கள், உங்கள் வாதத்தில், தர்க்கத்தில் நேர்மையிருந்தால் காத்திருக்கும் நேசக்குமாரிடம் போய் பேசுவதுதானே ? உங்களுக்கு அந்த அறிவு, தார்மீகப் பலம், மதத்தில் ஆழமான அறிவு இல்லாத காரணத்தினால்தானே ஒவ்வொரு சமயமும் அவரை எதிர் கொள்ள ஒவ்வொரு அடியாளை அனுப்புகிறீர்கள் ? உங்களுக்குச் சவால் விடுகிறேன், ஒரு நேர்மையான விவாதத்தில் இறங்கும் துணிவு, நேர்மை அறிவு உங்களுக்கு உண்டா ?

<< மு?ம்மது நபி இறுதித் தூதராக இருப்பதில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு என்ன பிரச்சனை? மற்றவர்கள் அதை ஒத்துக்கொள்ள வேண்டும் என்பதில்லையே! >>

எங்களுக்கு எவ்விதப் பிரச்சினையுமில்லை அவர் முதல் தூதுவராகவோ, இறுதித் தூதுவராகவோ, கடவுளாகக் கூட வேண்டுமானலும் இருந்து விட்டுப் போகட்டுமே. அப்படியே யாராவது ஒத்துக் கொள்ளா விட்டாலும் அதில் உங்களுக்கு ஏது பிரச்சினை. நாங்கள் அனுமனைக் கடவுள் என்கிறோம், நீங்கள் குரங்கு வானரம் என்று ஏளனமாக எழுதுகிறீர்கள். அதற்காக நாங்கள் என்ன உங்களுக்கு பட்வாவா விதிக்கிறோம்? ஒரு சிலர் ஏற்றுக் கொள்ளலாம், ஒரு சிலர் மறுக்கலாம், நரி இடம் போனால் என்ன, வலம் போனால் என்ன, மேலே விழுந்து கடிக்காமல் போனால் சரி. உங்கள் நம்பிக்கை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அது அடுத்தவரின் உயிரை வாங்காமால் இருக்குமாறு பார்த்துக் கொள்ளூங்கள். அப்படி பிறர் உயிரை உங்கள் நம்பிக்கைகள் பறிக்கும் பொழுது உங்கள் நம்பிக்கைகள் குறித்தும், அதில் புதைந்துள்ள வன்முறையின் மூல காரணத்தைக் குறித்தும் நிறைய பேர் ஆராயக் கிளம்பத்தான் செய்வார்கள்.

<< வந்தே மாதரம் என்ற பாடலை ஒரு முஸ்லிம் விரும்பினால் பாடிக்கொள்ளட்டும். அதனால் இஸ்லாத்துக்கு நஷ்டம் ஒன்றும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. இன்னும் சொல்லப்போனால், ஏ.ஆர்.ர?மான் இசையமைத்து அந்தப் பாடலைப் பாடிய பிறகுதான் அதற்கு இதுவரை இல்லாத புகழ் வந்தது என்றே சொல்லலாம். மனம் சரியாக இருக்கும்போது வாயால் எழுப்பப்படும் சப்தங்களை வைத்து விவாதம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதைப் பாடித்தான் ஆக வேண்டும். கட்டாயமாக்க வேண்டும் என்றெல்லாம் சொல்வதில் எந்த நியாயமுமில்லை என்றுதான் சொல்கிறேன். அப்படிச் சொல்வது கலாச்சார வன்முறையல்லவா? அப்பாடல் பயன்படுத்தப்பட்டுள்ள ஆனந்த மடம் என்ற நாவல்கூட முஸ்லிம்களுக்கு, குறிப்பாக வங்காள முஸ்லிம்களுக்கு, எதிரானதென்ற ஒரு கருத்தும் உள்ளது. >>

சும்மா, சும்மா அரைத்த மாவையே அரைக்காதீர்கள். ஏதும் புதிதாக இருந்தால் சொல்லுங்கள். வந்தே மாதரம் என்பது ஒரு தேசீய கீதம். ஒரு தேசீயக் குறியீடு. அதை அந்த தேசத்தைச் சேர்ந்த அனைவரும் மதிக்க வேண்டும் போற்ற வேண்டும் என்று எண்ணுகிறோம். எப்படி தேசியக் கொடியை மதிக்க வேண்டும் என்று எண்ணுகிறோமோ அது போலத்தான் இதுவும். அதை எதிர்ப்பவன் யாராக இருந்தாலும் தேசத் துரோகியே. இது விஷயமாக திண்ணையில் ஏற்கனவே ஜடாயு என்பவர் மிக அற்புதமானதொரு கட்டுரையை எழுதியுள்ளார். படித்துப் பாருங்கள் உங்கள் கேள்விகளுக்கெல்லாம் அதில் விடையுள்ளது. இருந்தாலும் உங்களைப் போன்ற பிரிவினைவாதிகளுக்கு அவையெல்லாம் புரியப் போவதில்லை. எண்ணற்ற முஸ்லீம்களுக்கு வந்தே மாதரம் பாடுவதில் எவ்விதப் பிரச்சினையுமில்லை. மத வெறியர்களும் தேசத் துரோகிகளும் மட்டுமே அவர்களைக் கெடுப்பது. அது சரி வந்தே மாதரம் பாடுவதில் பிரச்சினை என்கிறீர்களே, எங்கள் மாநிலத்தாயினை வணங்குதல் என்போம் என்று சொன்ன பாரதி முஸ்லிம்களுக்கு எதிரானவரா? வந்தேமாதரம் பாட மறுக்கும் நீங்கள் தமிழ்த் தாய் பாடல் எப்படிப் பாடுகிறீர்கள் ? அதுவும் தமிழைத் தாயாகக் கருதி வணங்கும் பாடல்தானே ? அதையும் பாட மாட்டேன் என்று சொல்லும் தைரியம் உள்ளதா ?

<< 'அட்லாண்டிக்குக்கு அப்பால்' நூலின் பல கட்டுரைகளை சிலாகிக்கும் விஸ்வாமித்திரா நேசகுமாரைப் பற்றி சிவகுமார் சொல்வது மட்டும் தவறு என்று வாதிடுவதில் உள்ள உள்நோக்கம் என்ன? >>

யார் யாருக்கு அறிவுரை சொல்வது ரூமி, உங்களுக்கு என்ன செலக்டிவ் அம்னிஷியாவா ? ஒரு நூலில் ஒரு கட்டுரை போலியாக என் கருத்துக்கு ஒவ்வாதவையாக இருப்பதால் அந்தக் கட்டுரைத் தொகுப்பு முழுவதையுமே குப்பை என்று எழுதுவதற்கு நான் என்ன நாகூர் ரூமியா ?

சிவக்குமாரின் கட்டுரைத் தொகுப்புகளில் ஒரு கட்டுரை அவரது மதச்சார்பின்மை போலித்தனத்தைக் காட்டுகிறது என்கிறேன். அதற்காக அவர் உருப்படியாக எழுதியது ஏதேனும் இருந்தால் அதையும் சேர்த்துக் குப்பையில் போடு என்று உங்களைப் போல எனக்குச் சொல்லத் தெரியாதுதான். ஐயா ரூமி, ஜெயமோகனின் விஷ்ணு புரத்தைப் படிக்காமலேயே அதைக் குப்பை என்று எழுதியது இந்த விஸ்வாமித்திரா அல்ல ? ஐயா எனக்கு எழுத்தாளரின் ஒரு கருத்துடன் ஒத்துப் போகததால் அந்த எழுத்தாளரின் அத்தனை எழுத்தையும் குப்பை என்று கேடு கெட்டத்தனமாகச் சொல்லத் தெரியாது ஐயா. ஒரு கூடை மாம்பழங்களில் ஒரு மாம்பழம் சொத்தை அழுகல் என்றால் வியாபாரியிடம் சொல்லத்தான் செய்வேன் ஒரு பழம் சொத்தை என்று, அதற்காக ஒரு கூடை பழங்களையும் சாக்கடையில் எறிய மாட்டேன். அந்த வியாபாரியை அடித்துக் கொல்லு என்று வெறித்தனமாக எழுத மாட்டென். இதில் என்னத்த பெரிய உள்நோக்கத்தைக் கண்டு விட்டீர்கள். ஒரு கட்டுரை நன்றாக இருக்கிறது, ஒரு கட்டுரை போலித்தனமாக இருக்கிறது, ஒரு கட்டுரை அபத்தமாக இருக்கிறது என்றால் அதைச் சொல்லத்தான் செய்வான் ஒரு வாசகன். இதில் உள்நோக்கம் புடலங்காய் எல்லாம் எங்கிருந்து வருகிறது ? ஆனால் ஒரு நாவலைப் படிக்காமலேயே ஜெயமோகனின் மீது உள்ள வெறுப்பினால், பொறாமையினால் அந்த நாவலே மட்டம் குப்பைக் கூடைக்குத்தான் லாயக்கு என்று தீர்ப்பு வழங்கும் உங்களுக்குத்தான் இருக்கிறது உள்நோக்கம், அழுகிய எண்ணம்.

<< எனவே மறுபடியும் சொல்கிறேன். இஸ்லாத்தை விமர்சிப்பது வேறு. தனி மனிதர்களை இழிவு படுத்துவது வேறு. சல்மான் ரஷ்டிக்கு தண்டனை தரவேண்டும் என்று சொன்னது அவர் இஸ்லாத்தை விமர்சித்தார் என்பதற்காக அல்ல. அவர் விமர்சிக்கவும் இல்லை. மு?ம்மது நபியையும் அவர்களது மனைவிமார்களையும் பற்றி தரக்குறைவாக எழுதினார். அவ்வளவுதான். >>

எனவே மறுபடியும் சொல்கிறேன், முகமதுவையும் அவரது மனைவிகளையும் விமர்சித்து இருந்தாலும், ஏன் எல்லா வல்ல இறைவனான அல்லாவையே கூட அவர் விமர்சிதித்து இருந்தாலும் அவருக்கு மரண தண்டனை கொடுக்க ஒரு ரூமிக்கு உரிமை கிடையாது. அப்படி இருக்கும் என்று ரூமி நினைத்தால் அவர் ஒரு மனிதனாக இருக்க முடியாது, அப்படிக் கொல்ல வேண்டும் என்று ஒரு மதம் சொல்லுமானால் அந்த மதம் மனித நேயமுள்ள ஒரு மதமாக இருக்க முடியாது. அப்படிக் கொல்ல வேண்டும் என்று அந்த மதம் உங்களைத் தூண்டுவது போலவே உங்களைப் போன்ற கோடிக்கனக்கான மதவாதிகளை உலகம் முழுவதும் தூண்டுவதால் அந்த மதத்தை பிறர் அச்சத்துடன் பார்க்கின்றனர். தரக்குறைவாக எழுதியது தவறென்றால் தாராளமாக கண்டனம் செய்யுங்கள் அதை மீறி கொல் என்று சொன்னால் உங்களை மீண்டும் மீண்டும் ஒரு மத வெறியன் என்று எல்லோரும் இகழத்தான் செய்வார்கள் உங்களை அருவருப்புடனே நாகரீகமுள்ள எந்தவொரு மனிதனும் நோக்குவான்.

<< "இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்றால் ஏனய்யா ருஷ்டிக்கும் சல்மாவுக்கு ·பத்வா தெரிவிக்கிறீர்கள்?" என்று விஸ்வாமித்திரா கேட்கிறார். >>

ஆமாம் அதில் என்ன சந்தேகம். இஸ்லாம் வாளால் பரப்பப் பட்டதினால்தானே ஒரு ருஷ்டி மீது கூட அச்சம் ஏற்படுகிறது. எங்கே அவன் இந்த மதத்தின் கோர முகத்தைக் காட்டி விடுவானோ என்ற பயம் ஏற்படுகிறது, அவனைக் கொல்லச் சொல்லுகிறது. ஆகவே ருஷ்டி கொல்லப் பட வேண்டும் என்ற உங்களது வெறித்தனமே இந்த மதம் வாளாலும், வெடிகுண்டுகளாலும் பரப்பப் பட்ட ஒரு மதம் தான் என்பதை உறுதி செய்கிறது.

<< சல்மான் ரஷ்டியும் சல்மாவும் முஸ்லிமாக இருக்கும்போது, அவர்களை தண்டிப்பதானது எப்படி இஸ்லாத்தை வாளால் பரப்பும் காரியமாகும்? அது முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் குறைக்கவல்லவா செய்யும்? ஒரு மதத்தை அந்த மதத்துக்குள் இருப்பவர்களிடமே பரப்புவார்களா?! இஸ்லாத்தைப் பரப்புவது என்ற அடிப்படைக்கே அது எதிரானதல்லவா? என்ன சொல்ல வருகிறார் விஸ்வாமித்திரர்? >>

உங்களுக்கு கொஞ்சமாவது புரிந்து கொள்ளூம் சக்தி இருக்கும் என்று தப்புக் கணக்குப் போட்டு அந்தக் கேள்வியைக் கேட்டு விட்டென். ¡ன் கேட்டது மிக மிக எளிமையானதொரு கேள்வி. அது கூடவா புரியவில்லை ?

ஐயா, உங்கள் மதம் நீங்கள் சொல்வது போல் வாளால் பரப்பப் படவில்லையெனில், ஏன் ஒரு சாதாரண ருஷ்டி மீதும். சல்மா மீதும், தஸ்லிமா நஸ்ரீன் மீதும், வான்கோ, நேசகுமார் மீதும் இத்தனை அச்சம்? அடிப்படை பலமாயிருந்தால் ஒரு சாதாரண ருஷ்டியும், நேசகுமாரும் அதை அசைத்து விட முடியுமா? அஸ்திவாரம் பலமில்லாததன் காரணமாகத்தானே சாதாரண மனிதர்கள் இஸ்லாத்தை விமர்சித்தால் கூட் அச்சம் ஏற்பட்டு அவர்களைக் கொல்லத் தூண்டுகிறது. வாளால் பரப்பப் பட்டதால்தானே அதே புத்தி இன்றும் வெளிப்படுகிறது. வாளால் பரப்பப பட்டதால்தானே ஒரு ரூமியைக் கூட ரஷ்டியைக் கொல்லு என்று சொல்ல வைக்கிறது ? அதனால்தான் அப்படிக் கேட்டென். வாளால் வளர்ந்த ஒரு மதம்தான் எதிர்ப்பவர்களை விமர்சிப்பவர்களை அழிக்க முயலும், அப்படி எதிர்ப்பவர்கள் தன் மதத்தினராக இருந்த போதிலும், கம்சன் தன் சொந்தத் தங்கை மக்களையே கொல்லவில்லையா என்ன ? காரணம் ஏன்? அவன் சொந்த பந்தங்களைக் கூட அவன் ஏன் கொன்றான் ? இப்பொழுதாவது புரிகிறதா விஸ்வாமித்திரா என்ன சொல்ல வருகிறார் என்று. நான் உங்களிடம் குறைந்த பட்ச ஐ க்யூவாவது இருக்கும் என்று நினைத்து அவ்வாறு எழுதி விட்டேன். அல்லா உங்களுக்கு சிந்திக்கும் திறனை மீண்டும் வழங்கட்டும்.

என்னை இவ்வளவு கேட்கும் ரூமி மிக வசதியாக நான் கேட்ட ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளிக்க மறந்து விட்டாரே? ஒரு வேளை செலக்டிவ் அம்னீஷியாவோ ? ஐயா நான் இஸ்லாமிலிருந்து மீண்டும் மதம் மாற உரிமை உண்டா என்று கேட்டிருந்தேன் ஏன் அதற்கு பதிலைக் காணோம் ? அப்படி மதம் மாறியவர்களுக்கு என்ன தண்டனை என்று கூற முடியுமா ரூமி ? சமீபத்தில் ஆப்கானில் அப்படி கிறிஸ்துவத்துக்கு மாற முயன்ற ஒருவருக்கு மரண தண்டனை விதித்தது இஸ்லாமிய கோர்ட் ? மறுக்க முடியுமா ? சொல்லுங்கள். அதற்கு பதில் சொன்னால் நீங்கள் சுரயா பற்றி என்னிடம் கேட்கும் கேள்விக்கும், பங்களாதேசத்திலும், பாக்கிஸ்தானிலும் இருந்த இந்துக்கள் என்ன ஆனார்கள் என்பதற்கான பதிலும் கிடைக்கும். வசதியாக அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் அளிக்காமல் ஓடுவதில் தெரிகிறது உங்கள் கயமை. ஒரு மதத்தில் இணைந்தவ்ர்கள் மீண்டும் மாறி தங்களது சொந்த மதத்திற்கோ அல்லது பிற மதத்திற்கோ செல்லும் உரிமையை ஏன் மறுக்க வேண்டும் ? ஏன் மரண தண்டனை விதிக்க வேண்டும் ? இந்து மதமோ, கிறிஸ்துவ மதமோ அப்படி விதிக்கிறதா ? ஏன் அப்படிப் பட்ட ஒரு தண்டனை இஸ்லாமில் மட்டும் உள்ளது? அச்சம் தானே காரணம். எங்கே மிரட்டி மாறியவர்கள் விலகி விடுவார்களோ என்ற அச்சம் தானே. அப்படிப் பட்ட ஒரு சட்டம் உள்ளவரை அந்த மதத்தை வாளாளால் பரப்பப் பட்ட மதம் தான் என்றுதான் எல்லோரும் சொல்லுவார்கள். அதை மாற்றி விட்டு வாருங்கள் முதலில்.

<< விஸ்வாமித்திராவின் கேள்வியிலிருந்தே அவர் இஸ்லாத்தை எவ்வளவு தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார் அல்லது எவ்வளவு அறியாமையில் இருக்கிறார் என்று தெரிகிறது. >>

யார் அறியாமையில் இருக்கிறார் என்பது எனது மேற்கண்ட விளக்கங்களில் இருந்து தெளிவாகப் புரிந்திருக்குமே ?

<< இங்கேயும் அங்கேயும் இருந்த கோடிக்கணக்கான மாற்று மதத்தினர் எங்கே போனார்கள் என்று கேட்கிறார். யாருக்குத் தெரியும்? வன்முறையால் அவர்கள் மதம் மாற்றப் பட்டிருந்தால், இஸ்லாமிய ஆட்சி போனபிறகு மறுபடியும் தங்கள் தாய் மதத்துக்கே திரும்பிச் சென்றிருக்கலாமல்லவா? ஏன் செல்லவில்லை? இதிலிருந்தே அந்த கோடிக்கணக்கான மக்களும் வாளாலோ வன்முறையாலோ இஸ்லாத்துகு வரவில்லை, மாறாக மனமாற்றத்தால் வந்தவர்கள் என்பது புரியவில்லையா? ஏன் இப்படி சிந்திக்கக் கூடாது? >>

ரூமி நீங்கள்தான் சொன்னீர்கள் இஸ்லாம் வாளால் பரப்பப் படவில்லையென்று. சரியா ? உடனே நான் கேட்டேன் அப்படியானால் பாக்கிஸ்தானிலும், பங்களாதேசத்திலும் இருந்த கோடிக்காண இந்துக்கள் என்ன ஆனார்கள் என்று ? அவர்கள் என்ன ஆனார்கள் என்று இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று கிளிப்பிள்ளை போல உளறும் நீங்கள் அல்லவா பதில் சொல்ல வேண்டும். யாருக்குத் தெரியும் என்று முட்டாள்தனமாக பதில் கேள்வி கேட்டால் என்ன அர்த்தம்? சொல்லுங்கள் அவர்கள் என்ன ஆனார்கள் என்று ? நான் சொல்லுகிறேன், இஸ்லாம் அவர்களை வாள் முனையில் ஒன்று மதம் மாற்றி விட்டது அல்லது கொன்று விட்டது என்று. அதற்கு ஆதாரம் இருக்கிறது. அந்த ஆதாரங்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் இஸ்லாம் கொடூரமாக வாளாலும், சித்ரவதையின் மூலமாகவும் மட்டுமே வளர்க்கப் பட்டவொரு மதம் என்பதை மீண்டும் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன.

எப்படி அவர்கள் தாய் மதத்துக்குத் திரும்ப முடியும்? ஒரு முறை ஒருவன் இஸ்லாமைத் தழுவி விட்டான் என்றால் அது மரணத் தழுவல் அல்லவா? ஒரு வழிப் பாதை அல்லவா ? அதை மறுக்க முடியுமா ? அப்படி மீண்டும் மதம் மாறினால் மரண தண்டனை என்று சொன்ன பிறகு யாரால் தாய் மதம் திரும்ப முடியும். எவ்வளவு தந்திரமாக அந்த மதம் செயல் படுகிறது. வாளால் மாற்று, திரும்ப மாற முயன்றால் அதே வாளால் கொல்லு. மனமாற்றத்தால் கோடிக்கணக்கான இந்துக்களும், புத்தர்களும் மாறினார்கள் என்பதை எவனாவது ஏமாந்தவர்களிடம் சொல்லுங்கள். நம்பினாலும் நம்புவான். யாரை ஏமாற்றுகிறீர்கள் ?

<< பல நூறு ஆண்டுகள் முகலாயர்கள் இந்தியாவை ஆண்டும் இந்தியாவில் இன்னும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருப்பதே இஸ்லாம் வன்முறையால் பரப்பப்படவில்லை என்பதற்கு சான்றாக உள்ளது என்ற கருத்தைத்தான் சொன்னேன்.முகலாயர்கள் ஆட்சியில் ம்தம் மாறியவர்கள் எல்லாம் இஸ்லாத்தின் மேன்மைகளை அறிந்து மதம் மாறியவர்கள்தான் என்று நான் எங்குமே சொல்லவில்லை. நான் சொன்னதைத் திரித்து விஸ்வாமித்திரா சொல்கிறார். >>

அபத்தமான பதில். இந்தியா என்பது பல சிறு நாடுகள் சேர்ந்த ஒரு பெரிய நிலப் பிரதேசமாக இருந்தது. இஸ்லாமிய மன்னர்களின் வெறித்தனமான மதமாற்றம் முழுமையாக நாட்டின் மூலை முடுக்குக்கெல்லாம் கொண்டு செல்ல இயலவில்லை. முடிந்தவரை மாற்றினார்கள் வாளால். அதையும் மீறி தப்பிப் பிழைத்தவர்களும் உறுதியாக நின்ற இந்துக்களாலும் இன்று மிச்ச மீதி இருக்கிறோம். அவர்களையும் மதானிகளும், பாச்சாக்களும், இமாம் அலிகளும், அப்சல்களும் கொன்று தீர்க்கிறார்கள். பொய் சொல்லாதீர்கள் ரூமி. கொஞ்சம் முந்திய பாராவை படியுங்கள் ஒரு பாரவில் இருந்து மறு பாரா வருவதற்குள்ளேயே இப்படி ஒரு அப்பட்டமான பொய்யா ?

<< கமலாதாஸ் மதம் மடுத்து என்று சொன்னார் என்று நேசகுமார் முதலில் ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டார். அது அப்படியில்லை என்று நிரூபணமானதும், வேறு வழியில்லாமல் 'வயதான பெண்மணியின் தற்காப்பு முயற்சிகள்' என்று சொல்லி இப்போது விஸ்வாமித்திரா 'ஜகா' வாங்குகிறார். >>

கமலா தாஸ் அச்சத்தால் தான் சொன்னதை இல்லையென்று மறுக்கிறார். அதுதான் உண்மை. வாளால் பரப்பபட்ட இஸ்லாமியத் தீவீரவாதிகள் அவரைக் கொன்று விடுவார்கள் என்ற அச்சம் இருக்கிறது. அதைத்தான் நான் சொன்னென். இதில் என்ன ஜகாவைக் கண்டு விட்டீர்கள். நேசகுமார் சொன்னதில் எவ்விதத் தவறும் இல்லை. இன்றும் அதுதான் உண்மை. ஒரு வயதான பெண்மனியை மிரட்டி, பேட்டி வாங்குவது வாளால பரப்பிய ஒரு மதம் செய்யக் கூடியதுதான். அவர் சொன்னதை மாற்றி பேட்டி கொடுத்ததில் ஒன்றும் அதிசயம் இல்லை. ஒரு கமலா தாஸின் விமர்சனத்தைக் கூட தாங்கிக் கொள்ளாமல் மிரட்டும் மதம் என்ன மதம் ? அவர் மீண்டும் தன் தாய் மதத்திற்கு சென்றால் அவர் கொல்லப் படுவார் என்று அவருக்கு நன்கு தெரியும் அதனால்தான் பயந்து கொண்டு பேட்டி கொடுத்து தன் உயிரைக் காத்துக் கொள்கிறார்.

<< "இன்று மக்கள் தாங்கள் செல்லும் பஸ்ஸீல் ஒரு சக இஸ்லாமியப் பயணியைக் கண்டு விட்டால் அடுத்த பஸ்ஸில் போகலாம் என்று தயங்க வைக்கும் காரணம் என்ன ?" -- என்று கேட்கிறார் விஸ்வாமித்திரா. >>

நான் தமிழ் நாட்டிலும் பிற மாநிலங்களிலும் அடிக்கடி பயணம் செய்பவன். ஒவ்வொரு முறை இஸ்லாமியத் தீவீரவாதிகள் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொல்லும் பொழுதும் நான் ஏதாவதொரு பயணத்தில்தான் இருந்ந்தேன். நான் கண்டதை கேட்டதைத்தான் கூறினேன், ஆம்பூர் மூலையில் உட்கார்ந்து கொண்டு உலகமே இருண்டு விட்டது என்று நினைக்கும் குண்டு சட்டிப் பூனைக்கு, சாதாரண மனிதர்களுக்கு கண்டவுடன் ஏற்படும் அச்சம் புரியாது. கொலைகாரர்களுக்கு கொலைகாரர்களைக் கண்டால் அச்சம் வராது. பாதிக்கப் படுபவர்களுக்குத் தான் வரும். எது உண்மைக்குப் புறம்பானது என்று இன்று மும்பையில் கோவையில் டெல்லியில் நியூயார்க்கில் பயணம் செய்யும் பிற மதத்தினரைக் கேளுங்கள் சொல்லுவார்கள்.

<< விஸ்வாமித்திரா போன்றவர்கள் செய்யும் காரியம் இதுதான். மேலே எழுப்பியிருக்கும் கேள்வி உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, கற்பனையான ஒரு சூழ்நிலை பரவலாக இருப்பதாக பொதுமைப்படுத்த முயல்வது. >>

பொய், கட்டுக்கதை. இன்று உலகமே இஸ்லாமைக் கண்டு மிரண்டு ஒதுங்குகிறது என்பதுதான் உண்மை. பூனை கண்ணை மூடிக் கொண்டால் என்ன செய்வது?

<< இஸ்லாத்தைப் பற்றியும் மு?ம்மது நபியைப் பற்றியும் மாற்று மதத்தினர், அதுவும் உலகப் புகழ் பெற்ற, அதிகாரத்திலும் அந்தஸ்திலும் இருந்தவர்கள், தலைவர்கள், என்ன சொன்னார்கள் என்று கீழே சில உதாரணங்கள் கொடுத்திருக்கிறேன். உண்மை அப்படி இருக்கும்போது இஸ்லாத்தை அசைத்துப் பார்த்துவிட முயலும் முயலும் முயற்சிகள் எங்கேபோய் முடியும் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்:. >>

உலகில் உள்ள எந்தவொரு மதத்தைப் பற்றியும் நாலு அறிவு ஜீவிகள் நாலு வார்த்தை நல்ல விதமாகத்தான் சொல்லியிருப்பார்கள். இஸ்லாமிலும் தீவீர்வாதப் பிரச்சாரங்களுக்கு நடுவே நாலு நல்ல விஷயங்களும் இருக்க்லாம். வீரப்பனிடம் கூடத்தான் நாலு நல்ல விஷயம் இருக்கும், காட்டிற்கு சென்ற பலரும் அவனது நல்ல குணங்களைச் சிலாகித்துத்தான் பேசினார்கள். ராவணனிடமும், துரியோதனனிடமும் கூடத்தான் நல்ல குணங்கள் சில இருந்தன. பொதுவாக அறிவு ஜீவிகள் எல்லோரும் மதங்களை எதிர்த்து அதில் உள்ள கெட்ட விஷயங்களைச் சொல்ல மாட்டார்கள். அது அவர்களது பொதுக்குணம் தனியாகக் கேட்டால் வண்டி வண்டியாக வண்டவாளங்களை எடுத்து விடுவார்கள். இரட்டை நாக்கு என்பது அறிவாளிகளின் பொதுப் புத்தி. ஆயிரம் பேர் ஆயிரம் நல்ல விஷயங்களைக் கூறினாலும், சாதாரண மனிதனாகிய என்னைப் பாதிப்பது இஸ்லாமியத் தீவீரவாதிகள் வைக்கும் குண்டுகள். மனிதனைக் கொல்லும் அந்த அரக்கக் குணம் இருக்கும் பொழுது வேறு ஆயிரம் நல்ல விஷயங்கள் இருந்தால் என்ன போனால் என்ன? என் உயிருக்கு உத்திர்வாதம் கேட்டால் அவன் அப்படிச் சொன்னான் இவன் இப்படிச் சொன்னான் என்று போதனையை யார் கேட்டார்கள். நான் கேட்பது ஐயா உங்கள் மதத்தின் காரணமாக உலக மக்களை அச்சுறுத்தும் வன்முறையை நிறுத்துங்கள் என்பது. நீங்கள் சொல்வது குண்டு வைத்தாலும் பாதகமில்லை இஸ்லாம் நல்ல மார்க்கம் என்று யார் யார் சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள் என்று பட்டியல் படிக்கிறீர்கள். யாருக்கு வேண்டும் இவர்களின் சர்ட்டிபி·கேட்டுக்க ? உங்கள் நோக்கத்தை நடவடிக்கைகளில் காண்பியுங்கள். நாளையில் இருந்து இஸ்லாமின் பேரில் குண்டுகள் வெடிக்காமல் இருக்குமானால் அதுதான் இந்தப் பெரிய மனிதர்கள் எல்லோரும் சொல்வதை விட மிக நம்பிக்கையான, நாணயமான நற்சான்றிதழ். போயும், போயும் இஸ்லாத்தை நிறுவ அற்ப மனிதர்களின் சர்ட்டிபி·கேட்டுக்கள் தேவைப்படும் நிலைமைக்கு வந்து விட்டதே. அப்புறம் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இஸ்லாம் வேகமாக வளருகிறது என்றொரு புருடாவை அடிக்கடி அவிழ்த்து விடுகிறீர்கள். ஒவ்வொரு முஸ்லிமும் குடும்பக் கட்டுப்பாடு செய்ய மறுத்து அதிகம் பெற்றால் இஸ்லாம் வளராமல் என்ன செய்யும்? எப்பொழுது இந்தியாவில் எப்பொழுது கணக்கெடுப்பு நடத்தினாலும் அதிக குழந்தைகள் பெற்றதில் முதல் பத்து பேர்கள் அனைவருமே இஸ்லாமியர்களாக இருப்பது எப்படி ?

மீண்டும் சொல்கிறேன், மனிதனாக வளருங்கள் ரூமி, நீங்கள் மனிதனாக மாற உங்கள் மதம் தடையாக இருக்குமானால் அதைச் சத்தமாக்ச் சொல்லுங்கள் அதையும் மீறி மனிதனாக வளர முயலுங்கள். அந்த நம்பிக்கை எனக்கு இல்லையென்றாலும் சொல்வதைச் சொல்லி வைக்கிறேன். என்றாவது என் கேள்விகள் உங்கள் மனசாட்சியை சிறிதாவது உறுத்துமானால் அந்த அல்லாவுக்கு ஆயிரம் நன்றிகள் சொல்வேன். இந்த விஸ்வாமித்திராவுக்கு வேறு எந்த வரங்களும் தேவையில்லை. இந்த வரம் மட்டும் போதும். கிடைக்குமா என்ற ஆதங்கத்துடன். மற்றபடி எனக்கு எந்த மதம் மீதும் எவ்வித துவேஷமும் கிடையாது.

விஸ்வாமித்திரா

Series Navigation

விஸ்வாமித்திரா

விஸ்வாமித்திரா