நேச குமார் என்ற பெயரில் எழுதுபவர் கவனத்திற்கு:

This entry is part [part not set] of 35 in the series 20061012_Issue

பாபுஜி


நேச குமார் என்ற பெயரில் எழுதும் இஸ்லாமோஃபோபிக் நபர், தன்னுடைய கருத்துக்களையும், எழுத்துக்களையும் ‘இனங்’கண்டுக்கொண்டவர்களுக்குப் பொதுவான ஒரு பதிலைக் கடந்த வாரத் திண்ணையில் கடை பரப்பியிருக்கிறார்.
‘இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்’ என்ற நூலுக்கு (இலவச விளம்பரமாக) எதிர்வினை ஆற்றிய பாங்கிலிருந்தும் ஜெயேந்திரர் கைதான போது சக இந்துக்களுக்குக் ‘கனிவான’ வேண்டுகோளொன்றை இதே திண்ணையில் வைத்த நாளிலிருந்தும் நேச குமார் எழுதுவதை நான் அவதானித்தே வருகிறேன்.

முந்தைய என் திண்ணை கடிதத்தில் ‘இஸ்லாம் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு’ அப்துல்லாஹ், அபூமுஹை போன்ற பதிவர்கள் தரும் விளக்கங்களையும் எதிர்க்கேள்விகளையும் ஏன் நேச குமார் எதிர்கொள்ள இயலுவதில்லை என்று கேட்டிருந்தேன். வழக்கம் போல எனது ‘இந்தக் கேள்வியையும்’ நேச குமார் கண்டு கொள்ளவில்லை.

எனினும், அவருடைய செலெக்டிவ் ஞாபக மறதியை மனதில் கொண்டு ஓரிரு கேள்விகளை மீண்டும் இங்கு வைக்க விரும்புகிறேன்.

சென்ற ஆண்டு, மே மாதம் என்று நினைவு, ‘அபூ சுஃப்யான் என்ற நபித்தோழர் (இவர் நபிகள் நாயகத்தின் மாமனாருமாவார்) வாள்முனையில் இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டார்’ என்று ரஹீக் என்கிற இஸ்லாமிய வரலாற்று நூலின் வார்த்தைகள் சிலவற்றை நேச குமார் திரித்திருந்தார். அதற்கு மறுப்பாக, அப்துல்லாஹ் என்பவர் அதே ரஹீக் என்ற நூலிலிருந்தே நேச குமார் ‘ஞாபகமாகக்’ குறிப்பிட மறந்த பகுதிகளை எடுத்துக்காட்டி ‘மாற்றத்தை’ த் தெளிவுபடுத்தியிருந்தார்.’அபூ சுஃப்யான் (ரலி), இஸ்லாத்தைத் தழுவிய பின்னர் இயற்றிய ஆத்மார்த்த கவிதை ஒன்றையும் கூட அப்துல்லாஹ் குறிப்பிட்டிருந்தார். ( சுட்டி 01).

நேச குமார், இன்று வரை அப்துல்லாஹ்வுக்குப் பதிலளிக்கவோ, தன் தவறை ஒப்புக்கொள்ளவோ முயலாதது ஏன்?

என்னுடைய இக்கேள்வியை, அப்போதே நேச குமாரை பேட்டி எடுத்து ஃபிலிம் காட்டிய ஒரு ‘பெட்டிக்கடை’யிலும் பின்னூட்டமாக வைத்திருந்தேன். வழக்கம் போல் பதில் தான் இல்லை.ஆனால் யாரேனும் இவருடைய திரித்தல்களை கேள்வி கேட்டால் ‘இஸ்லாமிஸ்ட்’ என்று முத்திரை குத்த மட்டும் தயங்குவதில்லை – இவர் நினைப்பது போல அது கெட்ட வார்த்தையாக இல்லாவிட்டாலும் .

அதுபோல இப்போதும், அபூ சுஃப்யானுடைய மனைவி ஹிந்தா என்பவர் (தொடக்கத்தில் இஸ்லாத்தின் பரம வைரியாக இருந்தார்) மக்காவெற்றியின் போது, இஸ்லாத்தில் இணைய வந்து, நபிகளாருடன் நிகழ்த்திய உரையாடலைக் குறிப்பிட வந்த நேச குமார், அந்த வார்த்தைகளினூடாக எப்படி தன் வெறுப்பை விருப்பமுடன் இணைத்துக்கொள்கிறார் என்பதை அபூமுஹையும் குறிப்பிட்டுள்ளார் . (சுட்டி 2)

ஹிந்துத்துவ சனாதனத்தைத் தூக்கியும் இஸ்லாத்தைத் தாக்கியும் ‘ஆராய்ச்சி’ செய்தவரான கோயன்ராட் எல்ஸ்ட் என்பவரை கொண்டுவந்து சென்ற வருடம், தமிழோவியத்தில் ‘ஆர்வமுடன்’ குடியமர்த்திய நேச குமார், அடுத்துவந்த நல்லடியார் என்பாரின் தொடரால் மூக்குடைய, அவர்தம் பரிவாரங்கள், பதிவிலிருந்து பார்வையாளரை விலக்க பின்னூட்டத்தில் ‘வரம்புமீறி’ பிரயத்தனப்பட்டனர்.

புதிது புதிதாக விவாதத்தைத்(?) தொடங்குவதில் ஆர்வங்காட்டும் நேச குமார் அவற்றைத் தொடர்வதில் ஈடுபடாதது ஏன்? கருத்துச் சுதந்திரத்தை அவதூறுகளுக்குப் பயன்படுத்தாமல் ஆக்கப்பூர்வமாக ப் பயன்படுத்துவதில் அவருக்கு என்ன பிரச்சினை?

சுட்டிகள்:
1. http://islamicreply.blogspot.com/2005/06/3.html
2. http://abumuhai.blogspot.com/2006/09/blog-post_26.html

Series Navigation

பாபுஜி

பாபுஜி