லண்டன் பூபாளராகங்கள் -2006 விழாக்குழு தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து நடாத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி

This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue

அறிவிப்பு


வல்வெட்டித்துறை,கொம்மந்தறை கம்பர்மலை வித்தியாலயம் பழைய மாணவர் சங்கத்தின் ஐக்கிய ராச்சியக் கிளை வருடந்தோறும் நடாத்திவரும் லண்டன் ‘ ‘ பூபாளராகங்கள் ‘ ‘ கழ்வு இம்முறை ஜூலை 22 இல் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு மூன்றாவது உலகளாவிய சிறுகதைப் போட்டி நடாத்தத் தீர்மானிக்கப் பட்டுள்ளது.

இப்போட்டிக்கான பந்தனைகள்

1. இப்போட்டியில் உலகின் எப்பகுதியில் இருப்பவரும் பங்குபற்றலாம்.

2. போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதை இதுவரை எங்கும் பிரசுரிக்கப்படாததாக இருக்கவேண்டும்.

3. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

4. கணனிப்பிரதியாயின் A4 அளவுத்தாளில் 5 பக்கத்துக்கும் கையெழுத்து பிரதியாயின் 8 பக்கத்துக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

5. சிறுகதை புனைவிற்கு எந்தக் கருப்பொருளையும் கையாளலாம்.

6. சிறுகதை எழுதப்பட்டுள்ள தாள்களில் பெயரோ ,புனைபெயரோ எழுதலாகாது.

7. போட்டியில் பங்கேற்கும் எழுத்தாளர்கள் தமது சுயவிபரக்கோவையை தனியாக இணைத்து அனுப்புதல் வேண்டும்.

கம்பர்மலை வித்தியாலய பழைய மாணவர் சங்க ஐக்கிய ராச்சியக் கிளை ர்வாக சபையினர் பூபாளராகங்கள் 2006 விழாக்குழுவினர் மற்றும் தினக்குரல் றுவன ஊழியர்கள் இப்போட்டியில் பங்குபற்ற முடியாது.

பரிசுபெறும் 13 கதைகளும் பூபாளராகங்கள் சிறுகதைத் தொகுதி -2006 என்ற மலராக வெளியிடப்படும்.

முதலாம் பரிசு ரூபா.15 000

இரண்டாம் பரிசு ரூபா.10 000

மூன்றாம் பரிசு ரூபா.5 000

மற்றும் ரூபா. 1000 வீதம் 10 ஆறுதல் பரிசுகள்

முடிவுத்திகதி ஏப்ரல் 10

கதைகள் அனுப்ப வேண்டிய முகவரி

THE CHIEF EDITOR ,

‘ ‘POOBALA RAGANGKAL ‘ ‘

‘ ‘SELVA SIKARAM ‘ ‘

72, MINTERNE WAYE,HAYES,

MIDDLE SEX

UB4 OPF, LONDON ,U.K.

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு