குலக்கல்வி சில சிந்தனைகள்

This entry is part [part not set] of 28 in the series 20060106_Issue

கற்பக விநாயகம்


குலக்கல்வித்திட்டம் குறித்து மலர்மன்னன் சிலாகித்து எழுதியிருக்கிறார். அதற்கு உதாரணமாய் எந்திரப்பட்டறைத்தொழில் நடத்தும் தந்தை, மகனைக் குறிப்பிட்டிருந்தார்.

குலக்கல்வி அமுலுக்கு வந்திருந்தால் கீழ்க்கண்ட தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழர்களின் குழந்தைகளும் அதே தொழிலில் தேர்ந்த நிபுணராகி இருப்பர்தான்.

1) மலம் அள்ளுதல் 2) செத்த மாட்டை அப்புறப்படுத்தல் 3) தெருவைச் சுத்தம் செய்தல் 4) முடி வெட்டுதல் 5) துணி வெளுத்தல் 6) கள் இறக்குதல் 7) சாராயம் காய்ச்சுதல்

8) செருப்பு தைத்தல் 9) கோவிலில் பொட்டுக்கட்டுதல் 10) சாவு மேளம் அடித்தல்

இந்த இழிவில்லாத தொழில்களை எல்லாம் விட்டு விட்டு மக்கள், காமராஜ் பேச்சைக் கேட்டு டாக்டர்,என்ஜினியர்,வக்கீல் ஆகி நிறையக் குளறுபடி ஆகி விட்டது.

(ம்ம்ம் அந்தக் காலம் மாதிரியா இருக்கு.. நம்ம சாதின்னா எவ்வளோ மதிப்பு இருந்தது… கால்ல செருப்புப் போட்டுட்டெல்லாம் நடக்க ஆரம்பிச்சுட்டான்..காலேஜ் படிச்சுட்டானாம் அந்த …சாதிப்பய.. அவன் அப்பன் நம்ம பரம்பரைக்கே செரச்சவன்.. எல்லாம் இந்தக் காமராஜாலே வந்தது… ராஜாஜி இருந்திருந்தா இதெல்லாம் நடக்குமா ? ? கலி முத்திடுச்சு..)

சில தொழில்லாம் சாதி அடிப்ப்டையில் வருவனதான்; ஆனால் அவை இழிவான தொழில் அல்ல என்று சொல்லும் மலர்மன்னன் என்ன சொல்ல வருகிறார் ?

அவனவன் தத்தம் சாதித்தொழில்களையே பார்க்கவேண்டும் என்பதுதானே அவருடைய/ராஜாஜியுடைய விருப்பம்!!!

ராஜாஜியின் பேச்சைக்கேட்டு வாழ்க்கையில் முன்னேறிய எந்திரப் பட்டரைக்காரர்கள் அவரை சிலாகித்து தினமணி என்ன, மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவுக்கே கடிதம் எழுதிட முடியும்தான். ஆனால் மலம் அள்ளப்போன/துணி வெளுக்கப் போன/இன்ன பிற ஆட்களால் உங்கள் கட்டுரையைப் படிக்கும் அளவுக்காவது எழுத்தறிவு இருந்திருக்குமா ?

குலக்கல்வி என்பதே ஒட்டு மொத்த தமிழர்களை வர்ணாசிரம/சாதிப்பாகுபாட்டில் வதைக்கத்தான் என்பதை 1950 களிலேயே தெளிவாய்ப் புரிந்து கொண்டவர்கள்தாம் நாம்.

****

vellaram@yahoo.com

Series Navigation

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்