அவசரமாய், அவசியமாய் ஒரு வேண்டுகோள்

This entry is part [part not set] of 27 in the series 20050930_Issue

லதா ராமகிருஷ்ணன்


—-

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல் ஆகியவற்றையெல்லாம் விட பெரியது ‘ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் ‘ என்பார்கள். அப்படிபட்டதொரு சேவையை கடந்த 13 வருடங்களுக்கும் மேலாக, தனியொரு மனிதராக, தமிழகத்திலுள்ள செங்கல்பட்டை அடுத்துள்ள ‘தரமணி என்ற கிராமத்தில் செய்து வருபவர் இளைஞர் பாஸ்கரன். தனது பொறியியற் கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டு விட்டு க்ராமப்புறக் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக உழைத்து வரும் இவர் ஏழைக் கிராமப்புறக் குழந்தைகளின் கல்வி பாதியில் நின்று போய்விடாமல் இருக்க ‘திருவள்ளுவர் அறக்கட்டளை ‘ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நிறுவி மாலை நேர வகுப்புகள் நடத்தியும், சுற்றுவட்டாரத்திலுள்ள மாணாக்கர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வாங்கித் தந்தும், பலவகையாக உதவி வருகிறார். போதிய நிதியுதவி இன்மையால் மிகவும் அல்லலுறும் நிலையிலும் தளராமல் தன் சமூகப்பணியைத் தொடர்ந்து வரும் இவர் சுற்ருவட்டாரத்திலுள்ள ஏழைப் பெற்றோர்கள் விரும்பிக் கேட்டுக் கொண்டதால் கடந்த மூன்று வருடங்களாக ‘திருவள்ளுவர் ஆங்கிலப் பள்ளி ‘ யை 21/2 முதல் 5 வயதிற்குட்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கென நடத்தி வருகிறார். மாதம் 30 ரூபாய் முதல் 50 ரூபாய் மட்டுமே கட்டணம். இந்தப் பள்ளியில் 25 குழந்தைகள் படித்து வருகிறர்கள். இரண்டு ஆசிரியைகள், ஒரு ஆயா வேலைப் பார்த்து வருகிறார்கள். லாபநோக்கமின்றி நடத்தப்பட்டு வரும் இந்தப் பள்ளிக்கு அரசு அங்கீகாரம் பெறுவதற்கு வேண்டிய நிதியாதாரமும், மற்ற கல்விசார் நலப் பணிகளை சீரிய முறையில் செயல்படுத்தத் தேவையான நிதியாதாரமும் இல்லாத நிலை. முடிந்தவர்கள் காலதாமதமின்றி உதவ முன்வந்தால் பாஸ்கரனின் சேவையின் முழுப் பலனும் மேற்படி ஏழைக் கிராமக் குழந்தைகளை எட்டும் என்பது உறுதி.

உதவ விழைவோர் அணுக வேண்டிய தொலைபேசி எண்: 04114 231426/ அல்லது, என் இ-மெயில் முகவரிக்கு விவரம் தெரிவித்தாலும் சரி.

—-

ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்