பெண்கள் சந்திப்பு மலர் விமர்சனக் கூட்டம் ஜூன் மாதம் 26ம் திகதி ஸ்காபுரோ சிவிக் சென்றர் அறிவித்தல்.

This entry is part of 30 in the series 20050616_Issue

சுமதி ரூபன்


2004ம் ஆண்டு பெண்கள் சந்திப்பு மலர் விமர்சனக் கூட்டம் ஜூன் மாதம் 26ம் திகதி ஸ்காபுரோ சிவிக் சென்றர் மண்டபத்தில் அறை இலக்கம் 1இல் மாலை ஆறு மணிக்கு இடம்பெற உள்ளது.

“1990இல் முதல் முதலாக ஜேர்மனியில் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை இச்சந்திப்புக்களில் ஆராயப்பட்ட, விவாதிக்கப்பட்ட, விடைகாணா விடையங்கள் ஏராளம். ஆனால் இவைகள் பெண்களால் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. விவாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆண் சிந்தனையில் உருவாக்கப்பட்டுள்ள பெண்ணின் மீள்உருவாக்கம் பற்றிய கேள்விகள். பெண் பெண்ணாகவே – ஒரு மனிதராக இல்லாததை விமர்சிக்க சந்தர்ப்பங்களை இச்சந்திப்புக்கள் உருவாக்கிக் கொடுத்தன. ஆக்க – செயல்திறனுக்கு ஊக்கமளித்தன. புலம்பெயர் பெண்களை எழுதுவதற்கு ஊக்கம் கொடுத்தது”.

தேவா(ஜேர்மனி)

பெண்ணிச் சிந்தனை கொண்ட இலக்கிய விரும்பிகள் இவ் விமர்சனக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும்.

2004ம் ஆண்டு பெண்கள் சந்திப்பு மலரை முருகன் புத்தகசாலையிலும் 416-282-2834 எனும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுவதன் மூலமும் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலதிக விபரங்களுக்கு

சுமதி ரூபன்

416-282-2834

sbalaram@ieccan.com

Series Navigation