கடிதம் ஜனவரி 20,2005

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

அருளடியான்


அன்புள்ள திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு,

திண்ணையின் மீதான எழுத்தாளர் ஞாநியின் விமர்சனத்துக்கு, ‘கட்டுரைகளின் கருத்துக்கள் அதனை எழுதியவர்களின் சொந்தக் கருத்துக்களே தவிர திண்ணையின் கருத்தாக இருக்க அவசியமில்லை ‘ என்றே பதில் சொல்வீர்கள் என நினைத்தேன். நீங்கள் ஞாநிக்கு எழுதியுள்ள பதில் ஒரு தரப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது போல் தெரிகிறது. பல கட்டுரைகளை எடிட் செய்து வெளியிடும் திண்ணை ஆசிரியர் குழு ஞாநியின் மனம் புண்படும் வண்ணம் உள்ள வாசகத்தை சம்பத்தப் பட்ட கட்டுரையில் இருந்து நீங்கள் நீக்கி இருக்கலாம். அந்த வாசகத்தை நியாயப் படுத்துவது போல் மீண்டும் உங்கள் கடிதத்திலும் குறிப்பிட்டது எனக்குச் சரியாகப் படவில்லை. எனக்குத் தெரிந்த வரை, சுட்டி விகடன் பத்திரிக்கையை பிற சிறுவர் இதழ்களில் இருந்து மாறுபட்டு வெளியிட்டது ஞாநி தான். அப்பத்திரிக்கை குறுகிய காலத்தில் பிற சிறுவர் இதழ்களின் விற்பனையை விட அதிகரித்தது. விகடன் குழுமம் வெளியிட்ட மாலை நாளிதழ் வெற்றியடையாமல் நிறுத்தப் பட்டது. இதில் இருந்து பிரபலமான நிறுவனம் வெளியிடுவதாலேயே ஒரு பத்திரிக்கை விற்பனையாகாது என்பதை அறியலாம். தமிழின் மதச்சார்பற்ற எழுத்தாளர்களில் ஞாநி தனியிடம் பெறுகிறார். மாற்றுக் கருத்துகளுக்கு திண்ணை தொடர்ந்து இடமளிக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி!

அன்புடன்

அருளடியான்

aruladiyan@netscape.net

Series Navigation

அருளடியான்

அருளடியான்