திரு பத்மநாப ஐயருக்கு 2004 ஆம் ஆண்டிற்கான இயல் விருது

This entry is part of 44 in the series 20041230_Issue

அறிவிப்பு


கனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும் ரொறொன்ரோ பல்கலைக் கழக தென்னாசியக் கழகமும் இணைந்து வழங்கும் 2004 ஆம் ஆண்டிற்கான இயல் விருது இம்முறை திரு பத்மநாப ஐயருக்கு அளிக்கப்படுகின்றது. அவாின் தமிழ்த் தொண்டு வகைமைப் பாட்டிற்குள் அடங்க மறுக்கும் அதேவேளை பலர் கால் பதிக்காத பதிய தடம். ஏற்கெனவே சுந்தர ராமசாமி, கே.கணேஸ், வெங்கட் சாமிநாதன் ஆகியோர் இயல் விருது பெற்றவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

ஒருவர் தமிழுக்கு ஆற்றிய வாழ் நாள் சேவைக்காக இயல் விருது வழங்கப்படுகிறது. இவ்விருதுடன் 1500 கனடியன் டொலரும் 2005 யூன் மாதம் ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில் நடைபெறும் விழாவில் அளிக்கப்படும் என்பதை இலக்கியத் தோட்டம் அறியத் தருகின்றது.

நாற்பது ஆண்டுகளாக பல தியாகங்களுக்கு மத்தியில் தன்னலமற்று முழுநேரப் பணி போல, ஈழத் தமிழ் நூல் வெளியீடு, தொகுப்பு வெளியீடு, ஈழ எழுத்தாளார்களை பொது நீரோட்டத்திற்கு அறிமுகம் செய்தல், ஆங்கிலத்தில் தமிழ்ப் படைப்புக்களை மொழியாக்கம் செய்ய வைத்துப் பிரசுாித்தல், எழுத்தாளார்களை லண்டன் வரவழைத்து கலந்துரையாடல்கள் செய்தல் என்று பலவகையில் இவர் செயலாற்றியுள்ளார்.

தகவல்- N K மகாலிங்கம்,கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டம்

E mail: mahalingam3@hotmail.com

—-

Series Navigation